பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் /213


ஒருக்காலுந் தாழ்ச்சிவராது. எக்காலும் அரணி என விளங்குவாய். அன்பே அஞ்சவேண்டாமென்றமர்த்தி நித்திரைக்கொள்ளும்படி செய்து தான் நித்திரைக்கொள்ளாமல்,

சீவர்களுக்குத் தோன்றும் பிணி மூப்பு சாக்காட்டின் துன்பங்களை அகற்றும் சுகவழியைக்கண்டு சீர்பெறச் செய்விக்கவேண்டுமென்னுங் காருண்ணியக் கயிறு ஒருபக்கமிழுக்க மனைவி மகவென்னும் பாசக்கயிறு ஓர் பக்கம் இழுக்கத் திடங்கொண்டு உலகிலுள்ள சருவசீவர்களின் ஈடேற்றத்தின் பாகம் மனைவி மகவுக்கும் பொருந்துமென்று எண்ணி பாலிகலையில் கும்போபித மாதமென்றும், வடகலையில் கும்பமாதமென்றும், தென்கலையில் மாசிமாதமென்றும் வழங்கும் பௌர்ணமி நள்ளிரவில் வெளியேறும் வழிகளை நோக்குங்கால் ஒவ்வோர் வேவுகர்களுந் தோழிகளும் எச்சரிக்கையில் விழித்திருப்பதைக்கண்டு புறம்போய் பொன்மதில் வெள்ளிமதில் இரும்பு மதில் மூன்றையுங் காலினால் மெறித்துத் தகர்த்து வெளியேறி குதிரைலயஞ் சென்று சன்னாவென்னும் அஸ்வசேவகனை அழைத்து பட்டத்து பரிக்கு சேணமிடச்சொன்னார். சேவகன் கலக்கமுற்று அரசே, தலைத்தார்வேந்தருக்குத் தாமோரறிக்கையுஞ் செய்யாமல்;

சீவகசிந்தாமணி

அடி யுலக மேத்தியலர் மாரிதூவ / முடி யுலகமூர்த்தி யுறநிமிர்ந்தோனியாரே
முடி யுலகமூர்த்தி யுறநிமிர்ந்தோன் மூன்று / கடி மதிலுங் கட்டவிழ்த்தகாவல நீயன்றோ.

முன்கலைதிவாகரம்

மும்மதில் பொன்னும் வெள்ளியுமிருப்பும் / மன்ன சிவன் முன்னழித்த முப்புரமே.

நிகழ்காலத்திரங்கல்

தேனடரு மானந்த செங்கமலத் தாளருள,
மானிடர்போல் மண்மிசையில் வந்தது அதிசயமே.
மானிடராய் வந்து மரணமூப்புப் பிணியைத்,
தானறிய மும்மதிலைத் தாண்டல் அதிசயமே.
தாண்டித் தலங்கடந்து தலைமுடியைத் தானறுத்து,
வேண்டு விம்பாநாடு மேவலதிசயமே.

சூளாமணி - கலியுலக விவரம்

மருங்கவை புணர்த்த பின்னை வானக வளாகமெல்லாம்,
கருங்கலொன்று அகன்றமேலார் கவித்தது கவித்தலோடு,
மிருங்கலியுலகமெல்லாம் இருள் கொள வெருவிநோக்கி,
பொருங்கலி அரசர்தானை போக்கிடமற்றதன்றே.

வீரசோழியம்

மேருகிரி யிரண்டாமெனப் பணைத்த விருபுயங்கள் மாரனிதை யாவேட்டு மும்மதில் மிதித்தனையே

7. சித்தார்த்தி மஹாராஜ துறவு காதை

பிறைமுடி தரித்து வாகுல்லயம்பூண்டு வெளியேறுங் காரணம் யாதோவென வணங்கி நின்றான்.

சக்கிரவர்த்தி திருமகன் சன்னாவைக் கையமர்த்தி குதிரைக்கு சேணங் கட்டியவுடன் தாவியேறி விடிவதற்குமுன் விம்பசார நகரஞ்சேர்ந்து குதிரையை விட்டிரங்கி தனது திங்கள் முடி வாகுவல்லயம் மார்பதக்க முதலிய யாவையுங் கழற்றி சன்னாவிடங் கொடுத்து இவைகள் யாவையும் என் தந்தையிடஞ் செலுத்தி உமது மைந்தர் மூப்புப் பிணி சாக்காடென்னும் மூவரசர்கள் பேரில் யுத்தத்திற்குப் போயிருக்கின்றார். அவர்களை ஜெயித்து கூடிய சீக்கிரம் இவ்விடம் வந்து அதன் ஜெயபேரி தொனியையும் ஆனந்த நிலையையுந் தங்களுக்கு அருளுவாரென்றரைந்து போய்விட்டதாக சொல்லும்படி யாக்கியாபித்து தனது வாளை உருவி சிரோமுடியை அறுத்தெரிந்துவிட்டு வாளையும் அவன் கையில் கொடுத்தனுப்பிவிட்டார்.

குதிரை சேவகன் சக்கிரவர்த்தியார் இடங்சென்று நடந்த வர்த்தமானங்கள் யாவையுங்கூறி தான் கைபெற்ற வாகு, பிறைமுடி, கச்சை, பதக்க முதலியவைகளையுங் கொடுத்தான்.