பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222 / அயோத்திதாசர் சிந்தனைகள்

குறள்

பொறிவாய லைந்த வித்தான் பொய்தீ ரொழுக்கம் / நெறிநின்றார் நீடு வாழ்வார்.

அசோதரை நெஞ்சுவிடு தூது

முறவாலுயர்வா லுனைப்போ லெனக்குப், பிறிதாருளரதனாற் பேணி - யறவாழி, யான்குமரதேவன்பால் அன்புடனே தூதுசெல்ல, நான் கருதி உன்பானவிற்றினேனி யான்புகலு,
மவ்விறைவனென்று மமருமிடஞ் சொல்லக்கேண், மௌவன்மணக்குமலர் சோலை - செவ்விதரு, முந்தாநதிசூழ் முதுகிரியாமாங்கு நீ, வித்தாரமாய்ச் செல்லும் வேளைதனிற் - கத்தும்.

சித்தாந்தத் தொகை

அருணெறியால் பாரமிதை யாறைந்து முடனடக்கிப்
பொருள் முழுதும் போதியின்கீழ் முழுதுணர்ந்த முநிவரன்ற,
னருள் மொழியானால் வாய்மெய் அறிந்தவரே பிறப்பறுப்பார்
மருணெறியாம பிறநூலு மயக்கருக்கு மாறுளதோ.

திரிமூலர் திரி மந்திரம்

அற்றார் பிறவியவரிரு கண்களை / வைத்தார் புருவத்திடையே பார்க்க
ஒத்தேயிருக்க உலகெல்லாந்தெரியும் / எத்தாலுஞ் சாவில்லை இறைவனாமே.

பாம்பாட்டி சித்தர்

ஓங்காரக்கம்பத்தினுச்சிமேலே / அதனுள்ளும் புரம்பையும் அறியவேண்டும்
ஆங்காரக் கோபத்தை அடக்கிவிட்டே / ஆனந்த வெள்ளத்தைத் தாக்கிக்கொண்டே
தூங்காமல் தூங்கியே சுகம் பெறவே / தொந்தோம் தோந்தோமென் றாடாய்பாம்பே.

மணிமேகலை

மாதவ ருரையிடங் காட்டிய மறையோன் / சாதுயர் நீக்கிய தலைவன் தவமுனி
காமனைக் காய்ந்தனை காலனைக் கடிந்தனை.

சீவகசிந்தாமணி

ஒன்றாய வூக்கவேர் பூட்டியாக்கைக் கெறுவுழுது
நன்றாய நல்விரதச் சென்னல் வித்தி யொழுக்கநீர்
குன்றா மற்றாங் கொடுத்தைம் பொறியின் வேலிகாத்தோம்பின்
வென்றார் தம் வீட்டின்பம் விளைக்கும் விண்ணோருலகின்றே
தருமன் றண்ணளி யாற்றன தீகையால் வருணன் கூற்றுயிர் மாற்றலில் வாமனே.

இதையே பற்றற்ற அநித்தியவனாத்தும் நிருவாண நிலை என்பர். இந்நிலையால் நாம ரூபம் இரண்டுமற்று புளியம் பழம்போலும், ஓடுபோலும் பயிரங்கமும் அந்தரங்கமும் வேறாயவன்று முதல் சித்தார்த்தி என்னும் நாமமற்று புத்தரென்று அழைக்கப்பெற்றார். உலர்ந்த உலக்கைத் துளிர்த்த மரத்தடியில் உட்கார்ந்தபடியால் பிண்டிமரமென்றும், மும்மல சோகமற்றபடியால் அசோகு மரமென்றும், அரசனே மரத்தடியில் உட்கார்ந்தபடியால் அரசன் மரமென்றும், மரத்தடியிலிருந்தே சத்திய தன்மத்தைப் போதித்தபடியால் போதிமரமென்றும், கருங்கற் போன்ற மரமாதலால் கல்லால மரமென்றும் வழங்கிவந்தார்கள்.

சிலப்பதிகாரம்

பணையைந் தோங்கிய பாசிலைப்போதி, யணிதிகழ் நீழலறவோன்றிருமொழி

சீவகசிந்தாமணி

காசறு துறவின் மிக்கக் கடவுளர் சிந்தைபோல
மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசை யனமுன்னி
யாசறு நடக்கு நாளு ளைங்கணைக் கிழவன் வைகிப்
பாசறை பரிவு தீர்க்கும் பங்குனி பருவஞ் செய்தான்.

யாப்பருங்கலைக்காரிகை

பிண்டியினீழற் பெருமான் பிடர்த்தலை, மண்டலந்தோன்று மால்வாழியன்னோய்

சிலப்பதிகாரம்

வெங்க நெடுவேள் வில்விழாக் காணும், பங்குனிமுயக்கத்து பனியரசு யாண்டுளன்

மணிமேகலை

ஆலமர்ச் செல்வன் மதன் விழாக் கோல் கொள
பாலமர் கொள்ளும் பங்குனிப் பருவம் காண்மினோ வெனக் கண்டுநிற்குனரும்.

பதினாறாவது வயதில் விவாகமுடிந்து இருபதுக்குமேல் புத்திரசந்தானமுண்டாகி சிலகால் தங்கி வெளியேறி முப்பதாவது வயதில் நிருவாண முற்றபடியால் அதை அநுசரித்துவந்த அரசர்களுங் குடிகளுங் தங்கள் வம்மிச வரிசைக்குப் புத்திரசந்தானம் உண்டானவுடன் முப்பதாவது வயதில் மடங்களில் சேருவது வழக்கமா இருந்தது.