பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240 / அயோத்திதாசர் சிந்தனைகள்


ஓ! சகோதிரர்களே! இவ்விதமாக அநேக ஜென்மங்களின் பிறப்பிலும் இறப்பிலும் ஜீவர்களால் உண்டான இரத்த வெள்ளத்தின் பெருக்கும், கண்ணீரின் பெருக்கும் உலகிலுள்ள நான்கு மஹாசமுத்திரங்களைவிட பெரிதாகவே இருக்கின்றது.

ஓ! சகோதிரர்களே! அநேக ஜென்மங்கள்தோறும் துக்கத்தை அனுபவித்து வருகின்றீர்கள். அநேக ஜென்மங்கள் தோறும் நிற்பாக்கியராயிருந்து வருகின்றீர்கள். அநேக ஜென்மங்கள் தோறும் இறந்து இறந்து சுடலையும் நிறம்பிவிட்டது. பூமியில் எலும்பு தோன்றா இடமில்லை. பட்டதுயரம் போதும். மெய்யாகவே என் சகோதிரர்கள் இவ்வகை துக்கத்தில் வெகுநாள் வாதைப்படவேண்டாம். சுருக்காகவே இத்துக்கத்தினின்று தப்பித்துக் கொள்ளுங்கள். பட்ட துயரம் போதும். –

கதமஞ்சே பிக்கவேதுக்கங் அறியசக்யானி? ஜாத்திபி துக்கா, ஜராபி துக்கா, வியாதிபி துக்கா, மரணாபி துக்கா, சோகா, பிரிதேவா துக்கந் தாம்னாஸ்ஸே உபாயாஸாபி துக்காயாங்கவிஸ்ச்சங்கல்பா ஸ்திடம்பிதுக்கங் ஸஞ்செட்டேனோ பஞ்சஞ்சப்பதங் அற்சந்தங் துக்கா இதங்விஜ்ஜாதி பிக்கவேதுக்கங்

அரியசக்யானி.

இரண்டாவது துக்கோற்பத்தி சத்யம்

ஓ! சகோதிரர்களே! துக்கோற்பத்தியாகிய தூய்மெயான சத்தியம் யாதென்பீரேல்:- அவைகள் முறையே மறு பிறப்பிற்காளாக்கும். அவா, இன்பத்தைநாடி ஆவலுண்ட அவா, அங்குமிங்கும் எக்காலும் சந்தோஷத்தை நாடும் அவா, அவையே - காமதன்ஹா புலன்களால் உண்டாகும் அவாவென்னப்படும். பவாதன்ஹா - உயிர் வாழ்க்கையின் பேரில் உண்டாகும் அவா என்னப்படும். விபவாதன்ஹா - அநித்தியமாகும் சொற்ப இன்பத்தாலுண்டாகும் அவாவென்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! இவ்வேட்கையின்பற்று எங்கிருந்து உதிக்கின்றது, எங்குநின்றெழும்புகின்றது, எங்கு நிலைக்கின்றது, இதன்வேர் எங்கிருக்கின்றது என்பீரேல்;

(அறுவகை சேதனராஜ்யங்கள்) கண்ணானது மனிதர்களை சந்தோஷிப்பிக்கச் செய்வதும், இன்பசுகத்தைத் தருவதுமாய் இருக்கின்றது. அவ்விடத்திலேயே அவ்வவா உதித்து எழும்பி நிலைத்து வேரூன்றுகிறது.. மெய், வாய், கண், மூக்கு, செவி, மனம் இவைகளானது மனிதர்களை சந்தோஷிப்பிக்கச் செய்வதும், இன்ப சுகத்தைத் தருவதுமாய் இருக்கின்றது. அவ்வவ்விடங்களிலேயே அந்தந்த அவாக்களுதித்து நிலைத்து வேரூன்றுகிறது.

(அறுவகை சேதனா இந்திரியங்கள்) உருவங்கள், ஒலிகள், கந்தங்கள், சுவைகள், தேகத்தின் பரிசங்கள், மனத்தில் எண்ணங்கள் யாவும் மனிதர்களை சந்தோஷிப்பிக்கச் செய்வதும் இன்பசுகத்தைத் தருவதுமாய் இருக்கின்றன. அவ்வவ் இடங்களிலேயே அந்தந்த அவாக்கள் உதித்து தோன்றி நிலைத்து வேரூன்றுகின்றது.

(அறுவகை ஆரமணங்கள்) மெய், வாய், கண், மூக்கு, செவி, மனம் இவைகளின் பற்றால் உதிக்கும் அறிவுகள், உணர்ச்சிகள் மனிதர்களை சந்தோஷிப்பிக்கச் செய்வதும் இன்ப சுகத்தைத் தருவதுமாய் இருக்கின்றன. அவ்வவ்விடங்களிலேயே அந்தந்த அவாக்கள் உதித்து எழும்பி நிலைத்து வேரூன்றுகிறது.

(அறுவகை யூறுகள்) மெய் சுகித்தவிடத்தை மனம் பற்றுதலும், வாய் உருசித்தவிடத்தில் மனம் பற்றுதலும், கண்கண்ட பொருளை மனம் பற்றுதலும், மூக்கு முகர்ந்த வாசனையை மனம் பற்றுதலும், செவி கேட்ட நாதத்தை மனம் பற்றுதலுமாகிய பாசப்பற்றில் மனிதர்களை சந்தோஷிப்பிக்கச் செய்வதும், இன்பசுகந் தருவதுமாயிருந்து அவ்வவ் விடங்களிலேயே அந்தந்த அவாக்கள் உதித்து எழும்பி நிலைத்து வேரூன்றுகிறது.

(அறுவகை உணர்ச்சிகள்) பார்வை, கேள்வி, முகரல், உருசித்தல், பரிசித்தல், எண்ணல் இவைகளினின்று உதிக்கும் உணர்ச்சிகள் மனிதர்களை