பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294 / அயோத்திதாசர் சிந்தனைகள்

துறவுபூண்டு சாந்தநிலையின் சுகத்தைக் கண்டவனெவனோ அவன் பயமும், பாபமுமற்றவனாய் நீதியில் சதாஜாக்கிரதையுடனிருந்து நீதியின் சுகத்தில் ஆனந்தித்திருப்பான்.

அரியர்களை (அறஹத்துக்களை)த் தரிசித்தல் புண்ணியம். அவர்களுடன் வாழ்தல் சதாசுகத்தைத் தரும். ஒருவன் கீழோர்களாம் துன்மார்ககர்களை தரிசியாதிருப்பானேல் அவன் சத்தியமாகவே சுகம்பெறுவான். –

கீழோர்களுடன் ஒருவன் பழகிவருவனேல் அவன் மிக்க துன்பத்தை அநுபவிப்பான். கீழோர்களிடத்தும், விரோதிகளிடத்தும் நேசம் பாராட்டல் சதா துக்கமே. மேலோர்களாம் நன்மார்க்கமுள்ளோரிடத்தில் ஒருவன் நேசம் பாராட்டி வருவனேல் அவன் தெளிவடைவதுடன் சுகம் பெறுவான்.

ஆகையால் ஒருவன் மேலோர்களிடத்தும், விவேகிகளிடத்தும், பண்டிதர்களிடத்தும், பொருமையாளரிடத்தும், போதனாசிரியர்களிடத்தும், அறஹத்துக்களிடத்தும் அணுகி பழகவேண்டும்.

மார்க்க வர்க்கம்

ஓ சகோதிரர்களே! மார்க்கங்களில் அரிய அஷ்டாங்க மார்க்கமே சிறந்தது. சத்தியங்களில் சதுர்வித சத்தியமே விசேஷித்தது. ஒழுக்கங்களில் காமமற்றிருத்தலே சிரேஷ்டம். மனுக்களில் அன்பின் மிகுத்த பார்வை யுள்ளோரே உத்தமமானவர். பரிசுத்தத்திற்கு வழி இதுவே, இதைவிட வேறுவழி கிடையா. இவ்வழியைப் பற்றிநில்லுங்கள். ஏனைய வழிகள் மாரனால் ஏமாற்றும் வழிகளே.

நீங்கள் இவ்வழியின் பிரகாரம் பழகிவருவீர்களாகில் துக்கத்தினின்று விடுபடுவீர்கள். சதையில் தைத்த முள்ளை பிடுங்கி எறிந்துவிடுங்கள்.

உங்களையே நீங்கள் சீர்படுத்திக்கொள்ளுங்கள். ததாகதர் போதிக்கும் ஆசான் இம்மார்க்கத்தை பின்பற்றி நடக்கும் அறிவுடையோனிடம் மாரன் அணுகான்.

அநுசரிக்க வேண்டியவை அஷ்டாங்கமார்க்கம்.

3. சம்யக் வசனா நல்வசனம்
4. சம்யக் கர்மந்தா நற்செய்கை
5. சமயக் அஜீவா நல்வாழ்க்கை1. சீலம்நீதி.
6. சம்யக் வீரியா நல்ஊக்கம்.
7. சம்யக்ஸ்மிருதி நல்எண்ணம்.
8. சம்யக் சமாதி நல் அமைதி.2. சமாதி மன ஆறுதல்
1. சம்யக்திருஷ்டி நற்காட்சி
2. சம்யக் சங்கல்ப நற்சிந்தை.3. பிரஞ்ஞை ஞானம்.

விலக்கவேண்டியவை.

3. மிஸ்சாவசனா துர்வசனம்.
4. மிஸ்சாகர் மந்தா துற்செய்கை
5. மிஸ்சா அஜீவா துன்வாழ்க்கை1. அசீலம் அநீதி
6. மிஸ்சா வீரியா துன்முயற்சி
7. மிஸ்சாஸ்மிருதி துன் எண்ணம்.
8. மிஸ்சா சமாதி மோஹம். மோஹம்.2. மோஹம்
1. மிஸ்சாதிருஷ்டி துற்காட்சி.
2. மிஸ்சாசங்கல்ப துற்சிந்தை3. அஞ்ஞானம்.

சதுர் சத்யம்.-1. துக்கசத்யா. 2. துக்கசமூத்ய சத்யா. 3. துக்கநிரோத சத்யா. 4. துக்க நிரோதாகாமினி பிரதிபதசத்யா.

நான்கு வாய்மெய்.- 1. துக்கம். 2. துக்கோற்பத்தி. 3. துக்க நிவாரணம். 4. துக்க நிவாரண மார்க்கம்.

மாரன்.- மாரன் அணுகான். 1. தன்ஹா -வேட்கை . 2. அறட்தி-குரோதம். 3. ராகா-காமம்.

உலகில் தோற்றும் பொருட்கள் யாவும் கெடும் என அறிந்தவன் துக்கத்தைக் கண்டு இஃதே அதற்கு மார்க்கமென அறிவன்.

மனோவாக்குக் காயத்தால் யாதொரு குற்றமும் செய்யாதிருக்கக் கடவன். இம்மூன்று வழிகளைத் திருத்தி நன்மார்க்கத்தை விருத்தி செய்து வருவனேல் அறஹத்துக்கள் அடையும் நிலையை அடைவான்.