பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 329


ஓ! சகோதிரர்களே! ஒரு சகோதிரன் மயானத்திற்குச்சென்று அங்கு கிடக்கும் பிணங்களை காக்கைகளால் கொத்தித் தின்பதையும், பருந்துகளாலும் கழுகுகளாலும் கொத்தித் தின்பதையும், நாய்களாலும் நரிகளாலும் தின்னப்படுவதையும், பலவித கிருமிகளால் தின்னப்படுவதையும் கண்டு சத்தியமாகவே என் தேகமும் இவ்வகையான ஸ்திதிக்கு வருமென தியானிப்பான்.

ஓ! சகோதிரர்களே! இவ்விதமாக தேக விஷயத்தில் ஜாக்கிரதை யுடையவனாய் இருப்பதோடு ஏனையோருடைய தேக விஷயத்திலும், ஜாக்கிரதையுடன் இருப்பன். தன் தேகம்போல் ஏனையோர் தேகமும் தோன்றி அல்லல்பட்டு அழியுமெனவும், தன்தேகம்போல் ஏனையோர் தேகமும் விழுந்துவிடுமெனவும் நிதானித்து தியானிக்கும்போது தேகம் மட்டும் இவனுக்குத் தோன்றுமன்றி ஜீவஸத்தி என்றும், பெண் இதென்றும், ஆண் இதென்றும், நான் எனதென்றும் ஆட்டும் பொருளென்றும், மனிதரூபமென்றுந் தோன்றாது.

இவ்விதமாக தேகவிஷயத்தில் ஜாக்கிரதையுடன் அறிவை விருத்தி செய்துவர தியான சக்தி அதிகரித்து தனிபுருஷனாகி உலக பற்றற்று நிற்பன். ஓ! சகோதிரர்களே! இவ்விதமாக ஒரு சகோதிரன் தேகவிஷயத்தில் ஜாக்கிரதையுடையவனாய் இருப்பான்.

ஓ! சகோதிரர்களே! ஒரு சகோதிரன் மயானத்திற்குச்சென்று அங்கு கிடக்கும் மாம்சத்தோடு கூடிய எலும்புகளையும், மாம்சமும் எலும்பும் சேர்ந்து இரத்தம் வடிந்துக்கொண்டிருக்கும் துணிக்கைகளையுமுடைய தேகங்களைக் கண்டு சத்தியமாகவே என் தேகமும் இப்படி அழியக்கூடியதென தியானித்து வெறுப்பான்.

ஓ! சகோதிரர்களே! இவ்விதமாக தேகவிஷயத்தில் ஜாக்கிரதை யுடையவனாய் இருப்பதோடு ஏனையோருடைய தேகவிஷயத்திலும் ஜாக்கிரதையுடன் இருப்பான். தன் தேகம்போல் ஏனையோர் தேகமும் தோன்றி அல்லல்பட்டு அழியுமெனவும், தன் தேகம்போல் ஏனையோர் தேகமும் விழுந்துவிடுமெனவும், நிதானித்து தியானிக்கும்போது தேகம் மட்டும் இவனுக்குத் தோன்றுமன்றி ஜீவஸத்தி என்னும், பெண் இதென்றும், ஆண் இதென்றும், நான் எனதென்றும், ஆட்டும் பொருளென்றும், மனிதரூபமென்றும் தோன்றாது இவ்விதமாக தேகவிஷயத்தில் ஜாக்கிரதையுடன் அடக்கத்தை விருத்தி செய்துவர தியானசக்தி அதிகரித்து தானே தத்துவப்புருஷனாகி உலகபற்றற்று நிற்பான். ஓ! சகோதிரர்களே! இவ்விதமாக ஒரு சகோதிரன் தேகவிஷயத்தில் ஜாக்கிரதையுடையவனாயிருப்பான்.

வேதனா சமாதி

ஓ! சகோதிரர்களே! ஒரு சகோதிரன் உணர்ச்சி விஷயத்தில் எவ்விதமாக ஜாக்கிரதையுடனிருப்பான்.

ஓ! சகோதிரர்களே! ஒரு சகோதிரனுக்கு இன்பமான உணர்ச்சி அறியுங்கால் இது இன்பமான உணர்ச்சி என்றும், இன்பமற்ற உணர்ச்சியை அறியுங்கால் இது இன்பமற்ற உணர்ச்சி என்றும், சமநிலையான உணர்ச்சியை அறியுங்கால் இது சமநிலையான உணர்ச்சி எனவும், அக்கரை உண்டாக்கும் இன்பமற்ற உணர்ச்சி எழுங்கால் இது அக்கரை உண்டாக்கும் இன்பமற்ற உணர்ச்சி எனவும், அக்கரை உண்டாக்கா இன்பமற்ற உணர்ச்சி எழுங்கால் இது அக்கரை உண்டாக்கா இன்பமற்ற உணர்ச்சி எனவும், தெளிந்து ஜாக்கிரதையுடனிருப்பான்.

ஓ! சகோதிரர்களே! இவ்விதமாக தன் உணர்ச்சி விஷயத்தில் ஜாக்கிரதையுடையவனாய் இருப்பதோடு ஏனையோருடைய உணர்ச்சி விஷயத்திலும் ஜாக்கிரதையுடனிருப்பான். தன் உணர்ச்சிபோல் ஏனையோர் உணர்ச்சியும் எழும்பி மடிந்து மறையும் எனவும், உணர்ச்சி எழும்போது ஜாக்கிதையுடனும், உணர்ச்சி மடியும்போது ஜாக்கிரதையுடனும், உணர்ச்சி எழும்பி மடியும்போதும் ஜாக்கிரதையுடனிருந்தும் இவ்விதமாக ஜாக்கிரதையான தியானத்தில் உணர்ச்சியைப் பரிசோதிப்பதுடன் தியானசக்தி உறுதிப்பெற உலகத்திலிருந்தும் உலகப் பற்றற்றவனாயிருப்பான்.