பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 331

ஓ! சகோதிரர்களே! துயரமென்பது யாது? மனதிற்கடுத்த துன்பம் மன உணர்வால் வருந்தி அதற்கீடுபடுவதால் நேரும் துயரம், மனமனுபவிக்கும் பீடையாதும் துயரமே.

ஓ! சகோதிரர்களே! நிராசையாய்த் துயரப்படல் யாது? பெருத்த நஷ்டம் நேர்ந்தும், துர்சம்பவம் நேர்ந்தும், நம்பிக்கை இன்மெயாகியும், நிராசையாகியும், நிராசை ஸ்திதியிலிருப்பதே நிராசையாய் துயரப்படலாம்.

ஓ! சகோதிரர்களே! ஐந்துபற்றின் கூட்டங்களே துன்பமென்பதெப்படி. ரூபக்கூட்டத்தின் பற்று, உணர்ச்சிக் கூட்டத்தின் பற்று, கரணக் கூட்டத்தின் பற்று, மனச்சாய்வின் கூட்டப்பற்று, சித்த (மன) கூட்டத்தின் பற்று இவைகளே ஐந்து கூட்டத்து பற்றே துன்பம்.

ரூப ஸ்கந்தம்

ரூபகூட்டம் இருவகைப்படும். அவை (1) பூதரூபம். (2) உபாதாரா ரூபம். பூதரூபநாமங்களாவன :- பதவிதாது, அப்போ தாது, தேஜோ தாது, வாயோ தாது. அதாவது நான்குவித பூதங்களாயரூபமாம்.

உபாதார ரூப நாமங்களாவன :
(சக்குபஸாதா, ஸேடாபஸாதா, கானாபஸாதா, ஜீவாபஸாதா, காயபஸாதா, ரூபா சத்தா, கந்தா, யச, இஸ்திரிபாவா, பும்பாவா, ஜீவிந்திரியாஹதயாவாது, ஆகாசதாது, காயவிஞ்ஞா, முஜ்ஜிவிஞ்ஞா , லஹுதா, முதிதா, கம்மிசதா, உபசியா, சந்திடி, ஜராதா, அனிச்சாதா) அதாவது, கண், காது, நாசி, நா, தேகம், வர்ணம், சத்தம், கந்தம், உருசி, ஆண்பெண் குறி, உயிர்; இருதய உருப்பு, தேகத்தினது குறிப்பு, வாக்கின் குறிப்பு, தேகவெழுச்சி, தேக இளமெய், தேக மிருதுவான தேக விருத்தி, தேக வளர்ச்சி, தேகம் கிழத்தனமாகுதல், அநித்யதேகம், உணவு, பொருள் யாவும் சேர்ந்தே ரூபகந்தம் எனப்படும்.

வேதனா ஸ்கந்தம்

வேதனாஸ்கந்தம் அல்லது உணர்ச்சிக் கூட்டமாவது யாதெனில் :சுக வேதனா, துக்கா - வேதனா, அதுக்கசுக - வே தனா அல்லது குஸல அகுஸல, குஸலாகுஸல என்னும் மூன்றுவித உணர்ச்சிகளை உடையது. உணர்ச்சி குஸலசித்தத்துடன் சேர்ந்துவரின் குசலவேதனா என்றும், உணர்ச்சி அகுசல சித்தத்துடன் சேர்ந்துவரின் அகுசல வேதனா என்றும், உணர்ச்சி குசலாகுசல சித்தத்துடன் சேர்ந்துவரின் குசலா குசல வேதனாவென்றுங் கூறப்படும்.

ஸம்ஞ்ஞாஸ் கந்தம்

ஸம்ஞ்ஞா ஸ்கந்தம் அல்லது குறிப்புக் கூட்டம் அறுவகைப்படும். அதாவது பச்சை அல்லது சிவப்பான ஒரு வஸ்துவைப் பார்த்து இது சிவப்பு அல்லது இது பச்சை என்றபோது ஒரு வர்ணக்குறிப்பைக் காட்டியது. அதேபிரகாரம் ஏதாவதொரு சத்தத்தைக் கேட்டபோது இது மேளசத்தம் அல்லது சங்குசத்தம் என்று ஒரு சத்தக் குறிப்பைக் காட்டியது. ஏதாவதொரு கந்தத்தை முகர்ந்தபோது இது துற்கந்தம் அல்லது இது நற்கந்தமென்று ஒரு கந்த குறிப்பைக் காட்டியது. ஏதாவது ஒன்றை உருசித்தபோது இது தித்திப்பு, இது புளிப்பு, இது துவர்ப்பு, இது எண்ணெய் என்ற ஒரு உருசிப்பின் குறிப்பைக் காட்டியது. ஏதாவது ஒரு தேகம் மற்றப் பொருளுடன் பட்டபோது இது தொடத்தக்கது அல்லது தொடத்தகாதது என்ற ஒரு தேகத்தின் உணர்ச்சிக் குறிப்பைக் காட்டியது. ஏதாவது ஒன்றை (மனம்) சித்தமானது நினைக்கும் போது இது விலக்கக்கூடியது அல்லது இது விலக்கக்கூடாதது என்ற குணத்தைக் காட்டியது. சுருக்கத்தில் குறிப்பு குசலசித்தத்துடன் சேர்ந்துவரின் குசலக் குறிப்பென்றும், குறிப்பு அகுசல சித்தத்துடன் சேர்ந்துவரின் அகுசல குறிப்பென்றும், குறிப்பு குசலாகுசல சித்தத்துடன் சேர்ந்துவரின் குசலாகுசல குறிப்பென்றும் கூறப்படும்.

சங்காரா ஸ்கந்தம்

சங்காராஸ்கந்தா அல்லது பாவனைக்கூட்டம் 52-வகைப்படும் 1. பஸ்ஸா ஸ்பரிசம் 2. வேதனா - ஸ்பரிச வறிவு. 3. சஞ்ஞா - புலப்பாடு 4. சேதனா - விருப்பம் 5. ஏககதா - ஏக்த்துவம் 6. ஜீவிதந்திரியா - ஜீவிய இந்திரியம் 7.