356 / அயோத்திதாசர் சிந்தனைகள்
சுடலைப்பத்து
விண்ணவர் கோன்காண வேந்தன் விழிதிரந்தான்,
பண்ணவனும்பக்கல் அடைந்தான்.
மன்னுகோலாளு மக்களிலை என்றான்,
துன்னுகோல் தோன்றுங் குறை.
ஆயபொருட்கள் கணத்தில் வழிவதைநின்,
சேயுட் பொருதிலையோ சொல்.
சுருதியின் சொல்லுந் தூயோன் துறவுங்,
கருதியோன் கண்ணடைந்தான் காண்.
கண்ணடைந்தான் கண்டார் கவலையுற்றார் சுற்றத்தார்,
கொண்டெடுத்தார் சுட்டெறிக்கக்கோன்.
சுட்டெறிக்குங்காலை சுத்தோதய நிலையை,
உற்றுணர்ந்தார் உள்ளத்தவர்.
மண்முகவாகின்று வாழ்நாட் சுகமறுத்தார்,
விண்ணவர்க்குள் ஒன்றாகுமேல்.
அறுப்பான் பிறவி அடுத்தவுடல் களிப்பால் தொடுத்தார்
திடுத்தாண்டவம் ஈமச்சுடலையாடும் இமையவர்கோன்,
நேமச் செயலறிந்த நேர். கோனாகிவந்து குருவா யறமளிக்குந்,
தானான தாண்டவனற்றாள்.
நிகழ்காலத்திரங்கல்
சுடலைதனிலாடுஞ் சுகநடனங் காணுங்கண், உடலதனை
யாண்பெண்ணறியாத அதிசயமே.
19.சிகாளா விசாரிணைக் காதை
அவற்றுள் சிகாளனென்னுங் குடும்பியொருவன் சுடலையாடியைச் சேவித்து சுத்தோதய புத்திரா! சுப்ரதீபா! சுகுணவிலாசா! சின்மய முத்ரா! தமதமுதவாக்கினால் அறவுரைகேட்டு அனந்தங்காலமாகிவிட்டபடியால் குடும்பிகளாகிய எங்களுக்கு பாபகர்மங்களைப் போதித்து காத்தல் வேண்டுமென்றிரைஞ்சினான்.
நடராசன் சிகாளனைநோக்கி அன்பனே!
1.உம்மெயடுத்திருக்கும் சீவர்களின்மீது அன்புபாராட்டாது கொலை புரிவது பாவம்.
2.ஒருவன் மனமுவந்துனக்கீயாத பொருளை அபகரிப்பது பாபம்.
3.தன்தாரமிருக்கப் பிறர்தாரமிச்சிப்பது பாவம்.
4.தாம் சொல்லுஞ்சங்கதிகள் யாவும் பொய்யென்றறிந்தும் அவற்றைப் பேசுதல் பாவம்.
இவற்றை ஒவ்வோர் குடும்பிகளும் கண்டறிந்துக்கொள்ளுவதுடன்,
1.பேராசையால் உதிக்கும் பாபங்களைச் செய்யாதிருத்தல்
2.கோபத்தாலுதிக்கும் பாபங்களைச் செய்யாதிருத்தல்
3.பயத்தாலுதிக்கும் பாபங்களைச் செய்யாதிருத்தல்
4.பேதைகுணத்தால் எழூஉம் பாபங்களைச் செய்யாதிருத்தல்
இத்தகைய அவாவாலேனும், கோபத்தாலேனும், பயத்தாலேனும் பேதைகுணத்தாலேனும் தூண்டப்பட்டு சீலத்தை மீறி பாபகர்ம்மத்தைச் செய்வரேல் அவரது கீர்த்தி தேயுபிறைகாலத்து ஒளி குறையுமாபோல் ஷீணமடையும்.
தங்கள் மூதாதைகள் சேகரித்துள்ள திரவியங்களின் நஷ்டத்திற்கும், தாங்கள் சேகரித்துள்ள திரவிய நஷ்டத்திற்கும் ஏதுக்களெவை என்பீரேல்:-
1.தாங்களறிவை மயக்கி அன்னத்தை அகற்றும் கள் முதலிய லாகிரி வஸ்துக்களை அருந்துதல் திரவிய நஷ்டத்திற்கு ஓர் மூலயே துவாம்.
2.யாதோர் தொழில் முயற்சியுமின்றி சோம்பல்கொண்டு வீதியுலாவுதல் திரவிய நஷ்டத்திற்கோர் மூலயே துவாம்.
3.நடனசங்கீதங் கச்சேரி அகஷிய நடிப்பு முதலிய இடங்களுக்கு மாறாது செல்லுதல் திரவியநஷ்டத்திற்கு ஓர் மூலயே துவாம்.
4.வித்தியா முயற்சிகளை அசட்டைச்செய்து சூதாட்டத்தில் முயற்சித்திருப்பது திரவிய நஷ்டத்திற்கு ஓர் மூலயேதுவாம்.