பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 379

அழைக்க புக்கசாதி பகவனைக்கண்டு வணங்கி ஆச்சரியமுடையவனாகி ஆனந்தத்துடன் அவரருகில் சென்று உட்கார்ந்தான். பகவன் அவனைப்பார்த்து சிறிதுநேரம் சம்பாஷித்துக்கொண்டிருக்கையில் புக்கசாதி ஆவலுடையவனாகி தன்னை சங்கத்தில் சேர்த்துக்கொள்ளும்படி வேண்டினான். பகவன் போதிக்கத் தொடங்கினார்.

ஓ! சகோதிரர்களே! எதினாலே உலகம் மூடப்பட்டிருக்கிறது? எதினாலே உலகம் பிரகாசிக்கவில்லை ? எதினால் உலகம் கறைப்பட்டிருக்கிறது? உலகத்தின் அபாயம் எது?

உலகம் அறியாமெயால் மூடப்பட்டிருக்கின்றது. லோபத்தால் உலகம் பிரகாசிக்கவில்லை. அவாவால் உலகம் கறைப்பட்டிருக்கிறது. துன்பமே உலகத்தின் அபாயம். அவாவென்னும் வெள்ளங்கள் பல திக்குகளில் புரண்டோடுகின்றன. அவ்வெள்ளங்களை எதினால் தடுக்கலாம்? தடையாவதெது? வெள்ளங்களை எதனால் முற்றும் நிறுத்திவிடலாம்? யோசனையால் வெள்ளங்களைத் தடுக்கலாம். யோசனையே தடை நிதானத்தால் வெள்ளங்கள் நிறுத்தப்படுகின்றன.

உலகில் ஜீவர்கள் ஏன் துன்பமடைகின்றனர். துன்பத்திற்குக் காரணம் யாது?

அவாவால் ஜீவர்கள் துன்பமடைகின்றனர். அவாவே துன்பத்திற்குக் காரணம்.

அறியாமெயால் ஒருவன் அவாவை உதிக்கச்செய்துக்கொள்ளுகிறான். அப்படி செய்வதால் துன்பம் நேர்கின்றது. ஆகையால் அறிவுடையோர் பிறப்பையும், துன்பத்தின் உற்பத்தியையுங் கண்டு அவாவை விருத்தி செய்யாதிருக்கட்டும்.

ஓ! சகோதிரர்களே! கண்ணானது ஒரு ரூபத்தைப்பார்த்து அதில் பிரீதி கொள்ள மனம் அதிகமாக விரும்பத்தொடங்குகிறது. கண்ணானது ஒரு ரூபத்தைப்பார்த்து அதில் பிரீதி கொள்ளாவிடில் மனம் அதிகமாய் வெறுக்கத் தொடங்குகிறது.

கண்ணானது ஒரு ரூபத்தைப்பார்த்து அதில் பிரீதிவையாமலும், வெறுக்காமலிருக்க மனமானது உபேட்சையுடன் இருக்கத்தொடங்குகிறது.

கண் எப்படி மூன்றுவிதமாய் பார்க்கின்றதோ அதுபோலவே காது, மூக்கு, நாவு, தேகத்தின் பலபாகமும் மனம் இவைகளை விரும்புவதும், விரும்பாமலிருப்பதும், விரும்பாமலும், வெறுக்காமலும் இருக்கத் தொடங்குகின்றன.

1.சக்குஞ்சபடீஸா ரூபேஸா உபேஸடி சக்குவிஞ்ஞானங் தேனாங்
ஸங்கதிபஸ்ஸோ.
பஸ்ஸோ பஸ்சா வேதனா
வேதனா பஸ்சா தன்ஹா
தன்ஹா பஸ்சா உபாதானா
உபாதானா பஸ்சா பவோ
பவோ பஸ்சா ஜாட்தி
ஜாட்தி பஸ்சா ஜெய
ஜெய, மரணா, பிரிதேவா, துக்கா தோம்னாஸே ஸம்போந்தே.

கண்ணானது ரூபத்தை பார்க்க கண்ணின் விஞ்ஞானத்தால் லோபம், மோஹம் சேர்ந்து ஊறு உண்டாகின்றது.

"ஊறு சார்ந்து நுகர்ச்சியாகும்
நுகர்ச்சி சார்ந்து வேட்கையாகும்
வேட்கை சார்ந்து பற்றாகும்மே
பற்றிற் றோன்றுங் கருமத்தொகுதி
கருமத்தொகுதி காரணமாக
வருமே யேனை வழிமுறை தோற்றம்
தோற்றஞ் சார்பின் மூப்புப் பிணி சாக்கா
டவல மாற்றுக்கவலை கையாறெனத் தவலிறுன் பந்தலைவருமென்ப"

2.தோடென்ஸா பட்டீஸா ரூபேஸ உபேஸிடி தோட விஞ்ஞானங்
தேனாங் ஸங்கதிபஸ்ஸோ.