பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 383

காய்த்துப் பொருட்செயும் வகைகளையும் கற்களுக்கு தீத்தீட்டி கண்ணாடி செய்யுந் தொழில்களையும் விளக்கிவிட்டு மற்றோர் குறிஞ்சிநிலமாம் மலையடி சேர்ந்தார்.

அம்மலைநாட்டரசன் மாலியன் என்பவன் மலையடிவாரத்தில் பகவன் வந்திருப்பதைக் கேள்வியுற்று பந்துமித்திரர்களுடன் வந்து வாலறிஞனை வணங்கி எண்ணிறந்த குணத்தோய் நீ, யாவர்க்கு மரியோய் நீ, உண்ணிறைந்த வருளோய் நீ, உயர்பாரந் தவிர்த்தோய் நீ, மெய்ப்பொருளை அறிந்தோய் நீ, மெய்யறமிங் களித்தோய் நீ, செப்பரிய தவத்தோய் நீ, சேர்வார்க்குச் சார்வு நீ, யாதலின் உமது சிறந்த கமலபாதத்தைத் தாவினோம். இவ்வடியார்களையுந் தங்கட் சங்கத்தவர்களில் ஒருவராகச் சேர்த்து சகல விவேகிகளால் கொண்டாடும் சத்தியதன்மத்தைப் போதிக்க இரைஞ்சி தனதில்லத்திற் கழைத்துக் கொண்டுபோய்ப் புசிப்பளித்து தனதாளுகைக்கு உட்பட்ட குடிகள் யாவரையும் வரும்படிச் செய்து தன்மத்தைக் கேட்கும் சித்தாயத்தத்தில் வைத்திருந்தான்.

மலையன் வேண்டுதலை வினவிய வீணைகோபாலன் அகமகிழ்ந்து அரசே, சத்தியதன்மத்தை தாங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவரா யிருப்பதுடன் உமது ஆளுகைக்குட்பட்ட மக்களும் உணரவேண்டுமென்னும் அவாக்கொண்டுள்ளீர்.

ஆயினும் உம்மெய்போன்ற மனுக்கள் மீது வைத்த கருணைப் போல் மற்ற சீவராசிகளின் மீதும் வைக்காதகாரணம் என்ன என்றார்.

அசோதரை நெஞ்சுவிடுதூது - மகாராஜா துறவு

குறிஞ்சியினின்று குறவர் குடில் சாடி / மறிந்தவரன் மாலியனையேற்று - சிறந்த

அருங்கலைச்செப்பு - குறிஞ்சிப்பத்து

குறிஞ்சி நிலத்தின் குணமறிந்தான் வெற்பன் / துறந்த முநியின் திரம்.
சிவப்பின் மணியும் செழுவாணி முத்தும் உவப்பினுரமா முடல்.
உடலுள்வுள்ள உதிரக் கறையகற்றி திடநல்வளமுருக்குங்கல்.

அதனை வினவியக் குறிஞ்சிநாட்டரயன் தங்கள் கூட்டத்தாராகியக் குறவர்கள் பல சீவசெந்துக்களை கொல்லுவதும், விற்பதும், தின்பதுமாகிய செயலை யுடையவர்கள் ஆதலின் சற்று நிதானித்து அகிலத்தில் (அகிம்சா) தருமத்தை நிலைநாட்டிய அப்பனே, எங்கள் கூட்டத்தாருள் பெரும்பாலும் ஜெந்துக்களைக் கொன்று புசிப்பதும், விற்பதும், அதேசீவனவிர்த்தியாய் நிற்பதும் அனுபவமாதலின் சீவர்களை கொலைபுரிந்து உண்பது குலத்தொழிலாய் விட்டது. அவற்றை விடுவதானால் வேறு சீவனவிருத்திக்கு யாதுமில்லாமல் திகைப்பார்களே என்றான்.

அரசனே! ஒவ்வோர் மனிதனும் புசித்து தன் தேகத்தை வளர்ப்பதற்கு கனிகாய், கிழங்கு முதலிய வஸ்துக்கள் இருப்பதுடன் சென்னெல், கேழ்வரகு பயிரிடுந் தொழிலாளிகளிடஞ் சென்று தானியங்களைப்பெற்று மாற்றிக் கொள்ளுவதற்கு மிளகு, கோஷ்டம், அகில், சந்தனக்கட்டை, தக்கோலம், குங்குமப்பூ முதலியவைகளை இம்மலையில் விருத்திசெய்து சீவிப்பதுடன் அம்மலையில் விளையும் சில உலோகங்களையும், இரத்தினங்களையுங் காண்பித்து சிவப்புநிறக் கற்களை ஓர் மனிதன் அணைந்துக்கொள்ளுவானாயின் உதிர வண்டல் கட்கழிந்து தெளிவுண்டாகி சுத்தயிரத்தம் உடலிற் பரவி வஜிகரமும் தேஜசும் பெறுவான்.

அவ்விடம் உதிர்ந்துள்ள யானைத்தந்தங்களை எடுத்துவரும்படிச் செய்து அதிலுள்ள முத்துக்களைக் காண்பித்து இவ்வாணி முத்துகளை ஓர் மனிதனணைந்துக்கொள்ளுவானாயின் மனோதிடனும் தேகசக்த்தியும் பெற்று உச்சாகத்திலிருப்பான். என்று லோகவுருக்குகளையும், இரத்தினத்தீட்டுகளையும், முத்தின் பலன்களையும் விளக்கி இவைகளைக் கொண்டுபோய் ஒன்றைக்கொடுத்து மற்றொன்றை மாற்றிக்கொண்டுவந்து சீவிக்கலாமேயன்றி சீவர்களுக்குத் துன்பம் விளைத்து அதினால் சீவிப்பது அதர்ம்மமாகும்.

அதாவது, உங்களில் ஒவ்வொருவரும் சத்தியதன்மத்தை உணர்ந்து தன்னை உயர்த்தி சீர்பெறும் எண்ணத்தில் நிற்பதுபோல் அச்சீவராசிகள் ஒவ்வொன்றுந் தங்களை உயர்த்திக்கொண்டே வருகின்றது.