பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

396 / அயோத்திதாசர் சிந்தனைகள்


என்றுளந்தனி உருப்பன மூன்றதும்
பத்தும் வகையாற் பயன்றெரி புலவ
ரித்திரம்படார் படர்குவராயின்
விலங்கும் பேயும் நரகருமாகி
கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர்.

நல்வினைப்பயன்

நல்வினை என்பதியாதென வினவிற் / சொல்லிய பத்தின் தொகுதியு நீத்துச்
சீலந்தாங்கி தானந்தலைநின்று / மேலெனவகுத்த வொருமூன்று திறத்துத்
தேவரு மக்களும் பிரமருமாகி / மேவிய மகிழ்ச்சி வினைப்பயனுகர்வர்.

பிறப்பதே துன்பத்திற்கு ஆதாரமாகவும் பிறப்பற்றிருப்பதே இன்பத்திற்கு ஆதாரமாகவும் இருப்பதால் ஆசை என்னும் பற்றுதலே பிறப்பிற்கு மூலகாரணமாக விருந்து துன்பத்திற்கு உள்ளாக்குகின்றது. ஆசையாம் பற்றுக் களற்றவிடமே பிறப்பறுதலுக்கு மூலகாரணமாக இருந்து பேரின்பத்திற்கு உள்ளாக்குகின்றது. அப்பேரின்ப நிலையே சுகவாரி என்னப்படும். அச்சுகவாரி யில்லயிப்பவனே பிறவிக்கடலை நீந்தியவனாவன். அவனே சதா விழிப்புள்ளவனும் நித்தியசீவியுமாகி சம ஆதியாம் ததாகதரை என்றுந் தரிசிப்பான்.

பட்டினத்தார்

நீற்றைப்புனைந்தென்ன நீராடப்போயென்ன நீமனமே,
மாற்றிப்பிறக்க வகையறிந்தா இல்லை மாமறைநூல்,
ஏற்றிக் கிடக்குது ஏழுகோடி மந்திரமென்னகண்டாய்,
ஆற்றிற்கிடந்துந் துறைதெரியாமல் அலைகின்றையே.

அருங்கலைச்செப்பு - பரிமுத்திப்பத்து

புளிகாயின் பற்றுபோல் பற்றாதது பழம்போல, வெளி காண்டல் பரிமுத்தியாம்.
புழுபோல் உலாவி புலனடக்கி விட்டில்போல், வழிபோதல் பரிமுத்தியாம்.
இன்பமும் துன்பமும் இரண்டற்றுருவெளியாய், அன்புறுதல் பரிமுத்தியாம்.
வேண்டுதல் வேண்டாம் இரண்டற்றுருவெளியாய், காண்டற் பரிமுத்தியாம்.
அகண்டத்துருவொளியா அவனியில் காலூன்றா, துகன்றப் பரிமுத்தியாம்.
புட்பம் வேறாக மணம்பிரிக்கும் வாறுபோல், உட்பறலே பரிமுத்தியாம்
என்றுங் கெடாத இதயப் பிரகாசமணி, அன்றே பரிமுத்தியாம்.
கருணாகர மிகத்தோர்க்காணும் ஒளிகாட்சி, பொருளாம் பரிமுத்தியாம்.
அறம் பொருளாமின்பா லிருபிறப்பானாதல், மறமவித்த பரிமுத்தியாம்.
மாற்றிப்பிறக்க வகை அறிந்தோன் மானிலத்தோர்ப், போற்றும் பரிமுத்தியாம்.

இத்தகைய நித்தியதரிசனத்தை விரும்புவோர் சத்தியதன்மமாம் நல்வாழ்க்கை, நல்லூக்கம், நற்கடைபிடி, நல்லுணர்ச்சி, நல்வாய்மெய், நற்காட்சி யினின்று கருணையை பெருக்கிக்கொள்ளுவோரே தண்மெயாம் உள்ளொளி திரண்டு மாற்றிப்பிறக்கும் வகை தேடுவர். இவர்களுக்கே தேவரென்றும் பிரமரென்றும் சிறப்புப்பெயர் தோன்றுவதன்றி நிருவாணம் பெற்றோரென்றும் இரவு பகலற்றோரென்றும் அவர்களது அநுபவக்காட்சியால் கூறப்படும். தாய்வயிற்றினின்று பிறக்கும் பிறப்பொன்றும், அநித்திய வனாத்தும நிருவாண முற்று தன்தேகத்தினின்று சுயஞ்சோதி ஒளிதோன்றும் பிறப்பொன்றும் ஆகிய விருபிறப்படைவதே பரிநிருவாணமென்றுங் கூறப்படும்.

சங்கறர் தனது அந்தியகாலப் பரிநிருவாணப் பரிபக்குவத்தைச் சொல்லி வருங்கால் அவ்விடம் வந்து சேர்ந்துள்ள அறஹத்துக்களும் சமணமுனிவர்களும் இருகரங்கூப்பி எழுந்து அறஹத்தோ அறஹத்தோ என்று வணங்கி தேவாதிதேவா! உமது அமுதவாக்கால் சாரணர்கதியாம் சரணாகதி அறிந்தோம். துக்கநிலை ஒழிந்தோமென்று ஆனந்தகோஷஞ்செய்யுங்கால் ஆனந்தனெழுந்து அருகன் திருவடியில் மும்முறை வீழ்ந்து ஒப்பிலா அப்பனே! உலகத்தில் தோன்றியுள்ளப் புருஷர்களில் உம்மெய்விட புருஷ உத்தமன் ஒருவருமில்லை என்றும் உலகெங்கும் கொண்டாடத்தக்க அருகனும் அன்பே ஓருருவாகத் தோன்றியவண்ணலும் கருணையே ஓர் குருமுகூர்த்தமாக அமைந்தகாட்சியும் அமுதவாக்கியமே நீதியின் பாதையுமாய் அமைந்த அண்ணல் பரிநிருவாண மடையுங்காலம் ஈதென்பதால் உடல் நடுக்கமுறுகின்றது, உள்ளம் பதருகின்றது, காரணமோ என்னில் கருணாகரனின் காட்சி மறைந்துபோமாயின் யாரை தெரிசிப்போம் யார்பால் அறவுரைக்கேட்போமென்று அவலோகி தரடிபணிந்து கவிழ்ந்துக் கொண்டான். ஆனந்தனின் கருத்தறிந்துகொண்ட அறவாழியான்