பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 517

உவர்மண் பூமியை உழுது வைத்து மீன-மேஷமென்னும் பங்குனி-சித்திரையில் பூர்த்திருக்கும் பூமியின் நீர் தோங்கி எழுமிடங் கண்டு அடிப்படை தோண்டி நாதமெடுத்து கடலுப்புடன் சேர்த்து வைத்திய உப்பை முடித்து வைத்துக் கொண்டு ஓடதிகளைச் செய்து பிணியாளருக்களித்து சுகமீவதியல்பாகும்.

உப்பினதுபோக்கும், அவற்றை எடுக்குங் காலமும், அதனால் முடியும் ஓடதிகளும், மாமாத்திரர் காலமறிந்து செய்யவேண்டிய விதியாதலின் வைத்தியர்கள் அக்காலத்தை மறவாதிருப்பான்வேண்டி தையும், மாசியும் வைத்தியர்க்குழவென்று கூறியுள்ளாள்.

பதஞ்சலியார் ஞானம்

காக்கையார்க்கெனுங் கம்பிதிறப்படும் / காக்கையாலுவர்ச் சாரமுங் கைக்குளாம்
காக்கையாற் சவுக்காரமங் கட்டலாம் / காக்கை காக்கை நடுக்கடற் காக்கையே
ஆடியாவணி யாழித்திரண்டதை / தேடினால் வருமே வந்துசிக்கினால்
பாடினார் பலநூற்களிற்பாஷையா / லோடியோடி யுழன்று தவிக்கவே.

தையு மாசியுங் கண்டு வுழுவதற் / கையனே பனிகால மதன் குறி
செய்யுங் கங்கையின் தீட்சை யறிந்தபேர் / கையுஞ் செய்யு மெய்யாகவே காண்பரே.

மீனமேட மிரண்டையு மேவுவார் / கானற்காலமென் றேசிலர் காட்டுவார்
போனகாலமும் புக்கின வேளையுஞ் / ஞானதேசிக னார்சொல நல்குமே.

மச்சமுநிவர் ஞானம்

யீசனென்று முடிவன்னியாதி சுழியேகமான பரிபூரணம்
இந்துகூடு மிருமீன மேஷ மதிலேயிருக்கு மிவை யெய்துமே
வாசமுண்டு புவியாளர் தாணுமறியாதிருந்தது சமாதியாய்
வாடிடாதுபின் மலர்ந்திடாது நிறமாவ தென் வைடூரியம்.

ஏட்டுப்பிரிதிகளின் பாடபேதத்தால் ‘வையகத்துறங்கு’ மென்னு மொழியை ஏற்று பனிகாலத்தில் வைக்கோல்வீட்டில் உறங்குகவென்று கூறுவதாயின் அம்மொழி நாட்டுவாசிகளுக் கேற்குமேயன்றி நகரவாசிகளுக்கு ஏற்காவாம்.

அத்தகைய நாட்டுவாசிகளுக்குள்ளும் பனை ஓலையாலும், தெங்கின் ஓலையாலும், விழல் கொத்துக்களினாலும் வீட்டின் மேடு மேய்ந்துள்ளாரன்றி வைக்கோலினால் இட்டுள்ள ஓர் குடிசையுங் கிடையாவாம். ஆதலின் அநுபவத்திற்கு வராததும், நூல் சார்பற்றதுமாகிய மொழியை ஏற்பது பொருந்தாவாம்.

46. தொழுதூண்சுவையினுழுதூ ணினிது

தொழுது - ஒருவரை வணங்கி, ஊண் - பெற்றவுணவை புசிப்பதினும், உழுது - பூமியைத் திருத்திப் பயிரிட்டு, ஊண் - புசிப்பது, இனிது - இன்ப மாகுமென்பதாம்.

தேகத்தை சோம்பலாலும், மந்தபுத்தியாலும், டம்பத்தாலும் வளர்ப்பதற்கு தன்மெய் ஒத்த தேகியை வணங்கி அவனிடந் தனக்கு வேண்டிய புசிப்பைப்பெற்று உண்பதினும் பூமியைத்திருத்திப் பயிரிட்டு உண்பதில் தேகத்தை வருத்திப் புசிப்பானாயின் அதுவே தேகசுக யினிய புசிப்பென்று கூறியுள்ளாள்.

அதாவது, நான் இன்னவகையாற் பெரியவன், இனியவகையிற் பெரியவன் எனப் பொய்யைச்சொல்லியும், வணங்கியும் உழைப்பாளராகும் பேதைமக்களை வஞ்சித்து பொருள்பறித்து உண்ணும் உணவு உணர்ச்சியற்ற உணவாதலின் உலகவாழ்க்கையுற்றோன் உழுதேனும் உடலை வருத்தியேனும் பொருளை சேகரித்து உண்ணும் உணவே உணவென்று வற்புறுத்திக் கூறியதாகும்.

திரிக்குறள்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந் / தொழுதுண்டு பின்செல்பவர்.

47. தோழனோடு மேழமெய்ப் பேசேல்

தோழனோடு - தன் புஜபலத்துக் குதவுவானோடு, ஏழைமெய் - தன் வல்லமெய்க் குறைவை பேசேல் - மறந்தும் பேசாதே என்பதாம்.

புருஷர்களில் தோழர்களென்பதும், இஸ்திரீகளில் தோழிகளென்பதும் தங்கள் எஜமானன் எஜமாட்டிகளுக்கு ஆபத்து பந்துபோலிருந்து