பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

520 / அயோத்திதாசர் சிந்தனைகள்


56. நைபவ ரெனினு நொய்ய வுரையேல்

நைபவர் - வருந்தும் ஏழைகளாக, எனினும் - இருப்பினும், நொய்ய - அவர்கள் மனம் வருந்த, உரையேல் - பேசாதே யென்பதாம்.

நமக்குள் அடங்கி வாழக்கூடிய ஏழைகளாயிருப்பினும் அவர்களது மனங்குன்ற பேசலாகாதென்பது கருத்து.

57. நொய்யவரென்பவர் வெய்யவ ராவர்

நொய்யவரென்பவர் - ஒருவரை மனனோகப் பேசுகிறவர்கள், வெய்யவர் - கொடுஞ்சினத்தோர், ஆவர் - எனப்படுவார்கள்.

ஒருவரை மனனோகப் பேசும்படியாய வார்த்தையை உடையோர் கோபத்திற் குடிகொண்டிருப்பவரென்பது கருத்து.

58. நோன்பென்பது கொன்று தின்னாமெய்

நோன்பென்பது - தம் மெய்யை காப்பதென்பது, கொன்று - சீவப்பிராணியை வதைத்து, தின்னாமெய் - மாமிஷத்தைப் புசியா தேகி யென்பதாம்.

தன் தேகத்தைக் காக்க வேண்டிய நோன்பினை உடையோன் சீவப்பிராணிகளுக்குத் துன்பத்தைச் செய்யாது காக்க வேண்டும் என்பது கருத்து. அங்ஙனமின்றி புறமெய்யை வதைத்து தன் மெய்யை வளர்க்க வேண்டியதாயின் புற உயிரை வதைத்துண்டு வளர்ந்த தேகம் அஃதுணர்ந்த உபாதையை உணர்ந்தேதீரல் வேண்டும்.

திரிக்குறள்

தன்னூன் பெருக்கற்குத்தான் பிறிதூனுண்பா / னெங்கன மாளுமருள்.

59. பண்ணியபயிரிற் புண்ணியந் தெரியும்

பண்ணிய - தான் உழுது விளைத்த, பயிரில் - தானிய வளர்ச்சியில், புண்ணியம் - தனது நற்கருமம், தெரியும் - விளங்கும் என்பதாம்.

‘சூதன் கொல்லையில் மாடுமேயு’ மென்னும் பழமொழிக்கிணங்க அவனவன் துற்கன்மத்தின் பாபபலனை அறியவேண்டின் அவன் விளைத்த பயிர் மழையின்றி மடிவதும் வெட்டுக்கிளிகளால் நாசமடைவதும், புழுக்களால் மாளுவதுமாகிய செயலால் விளங்கும். அவனவன் நற்கருமத்தின் புண்ணிய பலனை அறியவேண்டின் அவன் விளைத்த பயிர் காலமழையால் ஓங்கி வளரவும், வெட்டுக்கிளிகளும் புழுக்களும் அணுகாது தானியவிருத்தி கூடுவதுமாகிய செயலால் விளங்கும். புண்ணிய பலனை பண்ணியபயிரில் காணுகவென்று கூறியுள்ளாள்.

60. பாலோடாயினுங் காலமறிந்துண்

பால் - பசுவின்பாலுடன், ஆயினும் - அன்னத்தையாயினும், மற்றும் பலகாரத்தையாயினும் புசிப்பதாயின், காலமறிந்து - காலை, மாலை, மத்தியமென்னும் முக்காலமறிந்து, உண் - புசிக்கக்கடவா யென்பதாம்.

பாலுடன் கலந்த பழத்தையாயினும், பாலுடன் கலந்த சோற்றையாயினும் உண்ணவேண்டுமாயின் காலையில் உண்ணவேண்டுமென்று பாகசாஸ்திரங் கூறியுள்ளபடியால் காலமறிந் துண்ணென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள்.

கன்மச்சூத்திரம்

காலையி லமுதும் மத்தியந் தயிர் மோர் / மாலையில் வெந்நீர் வழங்குக நன்றே.
காலை யமுதங் கருத்தூர விதய / தூலபலத்தின் செய்கையதாமே.
மத்திய தயிர்மோர் பாக மருந்தல் / பித்தப் பிணியை போக்குவதாகும்

மாலை வெந்நீர் வாழ்க்கை யருந்தல் / கூல வாயாசக்குறைச் சோர்வகலும்.
காலையிற் பாக்கை கணமுறப் பெருக்கில் / சீலவலத்தை சேர்க்காதகற்கும்.
மத்தியச் சுன்னம் வாயிற் பெருக்கல் / சித்தியாம் பசியும் சீரண முண்டாம்.
மாலை வெற்றிலை வளரப் பெருக்கில் / வாலவாய் மணங் கொடுப்பதுதானே.

தாம்பூலம் இடுவதில் காலையில் பாக்கை அதிகரித்தல், மலத்தைக் கழிக்கவும், மத்தியானத்தில் சுண்ணாம்பை அதிகரித்தல் ஜீரணசக்த்தி கொடுக்கவும், மாலையில் வெற்றிலையை அதிகப்படுத்துவதால் வாய்மணம் வீசுவதாம். மூன்று