பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 / அயோத்திதாசர் சிந்தனைகள்


துரமுறத் தோய்ந்துநீரிற் றுவைந்துமெய்யக நிறப்ப
பரவருமசதிமற்றும் பாயிலுமகலுமென்றான்.

- 1:21; நவம்பர் 6, 1907 –


இத்தகைய வழக்கமானது புத்ததன்மம் இத்தேசமெங்கும் பரவியிருந்த காலத்தில் கனவான்கள் முதல் ஏழைகள் வரையில் இப்பண்டையீகையை ஆனந்தமாகக் கொண்டாடிவந்தார்கள். அதன்பின் பராயசாதியோர் வந்து குடியேறி புத்ததன்மத்தை நிலைகுலையச் செய்து மதக்கடைகளைப் பரவச்செய்தக்கால் பொய்க் குருக்களை அடுத்த குடிகள் கல்வியற்றவர்களும் விசாரிணை அற்றவர்களும் ஆதலின் தங்கள் குருக்களை நாடி தீபவதி - தீபவெளி - தீபாவளி என்னும் வாக்கிய பேதம் அறியாமல் சுவாமி இப் பண்டிகையின் விவரம் என்ன என்று உசாவுங்கால் குருக்களே பிராமணர்கள் என்று புதுவேஷம் இட்டு பிச்சை ஏற்பவர்களாதலின் அவர்களுக்கு இதன் அந்தரங்கம் தெரியாமல் குடிகளின் வார்த்தைகளைக் கொண்டே அதன் நடவடிக்கைகளை உணர்ந்து மலையை ஒத்த ஓர் அசுரன் இருந்துக்கொண்டு மாட்டையொத்த தேவர்களுக்கு இடுக்கங்கள் செய்தபடியால் அவ்வசுரனை ஓர் தேவன் கொன்று தேவர்களுக்கு சுகஞ் செய்தநாளாகையால் நீங்கள் தலைமுழுகி புதுவஸ்திரம் அணிந்து பலகாரஞ் சுட்டுத் தின்பதென்னும் கட்டுக்கதையை ஏற்படுத்திவிட்டதும் அல்லாமல் அதன் மத்தியில் தங்கள் வயிற்று சீவனவழியையும் தேடிக்கொண்டார்கள்.

அதாவது தீபாவளி மறுநாள் நோன்பு ஒன்றிருக்கின்றது. அந்தநாளில் நீங்கள் சுடும் பலகாரங்கள் யாவையும் நாங்கள் நிறுத்துங் கலசத்திடம் வைத்து வீட்டில் எத்தனைப்பெயர்கள் இருக்கின்றீர்களோ அத்தனை சிவப்புக் கயிறு வாங்கி வைப்பீர்களானால் நாங்கள் அதற்கு மந்திராவாகனஞ் செய்து கொடுக்க நீங்கள் கட்டிக் கொள்ளுவீர்களானால் உங்களுக்கு செல்வம் பெருகும் என்று சொன்ன வார்த்தைகளை தேவர்கள் என்பது யார், அசுரர் என்பது யார், நோன்பென்பது என்ன என்று அறியாத குடிகள் வீடுகடோரும் தட்சணையீய்ந்த நூலை வாங்கிக் கட்டிக் கொண்டுவருகின்றார்கள்.

ஆனால் நோன்புக்கயிற்றை நாங்கள் கட்டிக் கொள்வதால் செல்வம் பெருகும் என்று சொல்லுகின்றீர்களே அவ்வகையிற் சிறந்த கயிற்றைத் தாங்கள் ஏன் கட்டிக் கொள்ளுவதில்லை என்று கேட்பாரில்லை.

புத்ததன்மகாலத்தில் நோன்பு என்னும் பெயரும் அதன் விதிகளும் யாதெனில்,

நோன்பென்பது கொன்றுத்தின்னாமெய்

நோன்பென்பது கணவன்பாற் குறளாமெய், நோன்பென்பது களவு செய்யாமெய், ஆகுஞ் சுத்ததேக வாழ்க்கையை விரும்புதலே நோன்புகள் நோற்றலென்னப்படும்.

அந்த தேகவாழ்க்கை நோன்புகளின் விரதம் யாதெனில், தன் தேக சுகத்தைப்போல் மற்ற சீவராசிகளின் தேகங்களையுங் கருதி அன்னியப் பிராணிகளைக் கொல்லாமலும் மாமிஷ பட்சணங்களைச் செய்யாமலிருக்கும் நெறியில் நிற்கவேண்டும் என்று நோன்பு, நோற்றல் அதாவது அந்நற் செய்கையில் நிற்றல் வேண்டிய வைராக்கியத்திலிருத்தல்.

பெண்களுக்குரிய நோன்புயாதெனில், கணவன்பாற் குறளாமெய்,

அதாவது தன் கணவன் வார்த்தைக்கு எதிர் மொழி பேசாமலும் மிருதுவான வார்தையின்றி கடுஞ் சொற்கூறாமலும் இனிமையிலிருப்பேன் என்று நோன்பு நோற்றல். கணவன் மொழிக்கு இனியமொழி அளிப்பேன் என்று வைராக்கியம் வைத்தல்.

கள்ளாமெய் நோன்பு யாதெனில், அன்னியன் பொருளை அவனுத்திரவின்றி புருஷர்களேனும் பெண்களேனும் தங்கட்கைகளில் எடுக்கக் கூடாது என்றும் அப்பொருளை எடுக்கவேண்டும் என்று மனதில் எண்ணாமலும் இருக்கவேண்டும் என்றும் நோன்பு நோற்றல் அதாவது அன்னியர் பொருளை தேகத்தாலும் எண்ணத்தாலும் அபகரிக்கக்கூடாது என்னும் வைராக்கியம்