பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/607

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 597


(வி.) சங்கஞ்சேர்ந்த சிரமணர்களாம் சமணமுநிவர்களுக்கும், வேதாந்தத்திற்கும், சித்தாந்தத்திற்கும், சமரசநிலைநிற்கும் சித்தர்களுக்கும், சமணநிலை கடந்த அறஹத்துக்களாம் தேவர்களுக்கும், ஆதுலர்களுக்கும், மரணமடைந்தோர்களுக்கும், மற்று முயற்சியுள்ளார்க்குந் தலைமெயானவன் உபாசகனென்னும் இல்லற நெறி வழுவாதவனே ஆதாரமென்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் “ஒன்றாக நல்லதுயிரோம்ப லாங்கதன்பின், நன்றாய்த்தடங்கினார்க் கீத்துண்டல் - என்றிரண்டுங், குன்றாப்புகழோன் வருகென்று மேலுலகம், நின்றதுவாயிற் றிந்து” என்பது கொண்டு சகல முயற்சியிலுள்ளவர்களுக்கும் இல்லறநெறி நிற்போனே தலைமெயானவனென்பது விரிவு.


8.ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை
நோற்பாரி னோன்மெ யுடைத்து.

(ப.) ஆற்றி - ஞானத்தி னிற்பினும், னொழுக்கி - சீலத்தினிற்பினும், யறனிழுக்கா - தன்மநெறி பிறழாது, வில்வாழ்க்கை - மனையறத்தினிற்பவன், நோற்பாரி - தவத்தைச் செய்பவனினும், னோன்மெயுடைத்துமேலாய தவத்தையுடையவனென்பது பதம்.

(பொ.) விவேக மிகுதியும சீலமுமிருப்பினும் அறநெறி வழுவா இல்வாழ்க்கை யையுடையவன் தவநெறியாம் நோன்பினை நோற்பவனினும் மேலாய நோன்மெயுடையவனென்பது பொழிப்பு.

(க.) கொன்றுத் தின்னாமெ யென்னும்நோன்பினையுடைய தவத் தோனாயினும் இல்லறநெறியை இழுக்கற நடாத்துவோனுக்கு நிகராகான் என்பது கருத்து.

(வி.) கொன்றுத் தின்னாமெயென்னும் நோன்பினை நோற்கினும் ஞானமுதிர்ந்தோனென்னும் விவேகம் விளங்கினும் சீலமிகுத்தோனென்னும் சுத்தமமையினும் இல்லாளுடன் நல்லறம் நாடாத்துவோன் அறநெறி பிறழாது இழுக்கற நடாத்துவானாயின் அவனது இல்லறவொழுக்கமே நல்லறநெறியும் தொல்லறம் நீக்கி பல்லறம் பயிற்றலும், புண்ணியவசத்தால் செல்வஞ் சேரலும், சேர்ந்த செல்வத்தால் துறந்தோரைக் காத்தலும், துறவாதோர்க்கு ஈய்தலும், இறந்தோரை எடுத்தலும், இழிந்தோரை உயர்த்தலுமாகிய ஈகையென்னும் பெருக்கே ஈசனென்னும் பெயருக்குப் பீடமாயதுகண்ட பெரியோன், எத்தகைய நோன்பினை யுடையவனாயினும் இழுக்கற்று ஈகைமிகுத்த இல்வாழ்வோனுக்கு நிகராகான் என்பவற்றிற்குச் சார்பாய் அருங்கலைச்செப்பு "பழிக்கஞ்சு மெஞ்ஞான்றும் பண்ணுந்தவத்தோன் இழுக்கற்ற வில்வாழ்வான்முன்" என்னும் ஆதாரங்கொண்டு இழுக்குற்ற தவத்தோனினும் இழுக்கற்ற இல்வாழ்வோன் சிறந்தோனென்பது விரிவு.

9.அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
பிறன்பழிப்ப தில்லாயி னன்று.

(ப.) அற னெனப்பட்டதே - தன்மமென்று கூறப்பட்டதே, யில்வாழ்க்கை - மனையறமென்பதே முதலாம், யஃதும் - அத்தகைய தன்மமும், பிறன்பழிப்ப - அன்னியனால் நிந்திக்கப்படுகை, தில்லாயி - இல்லையாயின், னன்று - நல்ல தென்பது பதம்.

(பொ.) அறமென்னும் இல்லறந் துறவறம் இரண்டினும் இல்லறமே முதலாதலின் அவற்றை நடாத்துவோன் அன்னியனால் நிந்தனைக்குள்ளாகாது நடத்தலே இல்வாழ்வோன் சிறப்பென்பது பொழிப்பு.

(க.) இல்லறம் துறவறம் இரண்டினுள் துறவறத்திற்கு இல்லறமே வாழ்க்கை வழியாதலின் இல்வாழ்வோன் பழிபாவம் அகற்றி வாழ்கவேண்டு மென்பது கருத்து.

(வி.) அறமென்னும் மொழியே இல்வாழ்க்கையின் சீர்திருத்த அடிபடையாதலின் அவ்வறத்தை இல்லறத்தோனே இனிது நடாத்தி மூவரையுஞ் சீர்திருத்துவானாயின் இவனுக்குள்ள பற்றுகளாம் பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை மூன்றும் நாளுக்குநாளற்று சுருக்கத்தில் வீடுபேறு பெறும்