பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 51

காரணம், மனமும் தேகமும் எச்செயலை விடாமுயற்சியால் பற்றி நிற்கின்றதோ அச்செயலையே ஜெநநங்கடோரும் விருத்தி செய்யுமன்றி மனமுந் தேகமும் பற்றாச்செயலையே பற்றி பெரும்பேரடைவது பேயநிலையாம். - 1:24; நவம்ப ர் 27, 1907 –

9. யோகங்களின் விவரம்

உலகத்தில் விசேஷமாகக் கொண்டாடும் யோகங்கள் யாதெனில்:

ஒரு மனிதனுக்கு பூமிச்செல்வம் அதிகரித்திருக்குமாயின் பூவியோகம் என்றும், தனச்செல்வம் அதிகரிக்குமாயின் தனயோகம் என்றும், ரூபமுள்ள பெண் சேருவாளாயின் மனைவியோகம் என்றும் வழங்குவதுடன் கணிதசாஸ்திரிகள் சந்திரமங்கள யோகம், சாமுத்திரி யோகம், எக்காள யோகம் எனப் பலவகை யோகங்களை வரைந்திருக்கின்றார்கள்.

இந்த யோகங்கள் யாவும் மாறிமாறி தேருளைபோற் சுழன்று அழிந்துவிடும் யோகங்களாய் இருக்கின்றபடியால் புத்தசங்கத்தார் எக்காலமும் அழியாது ஜெநநங்கள் தோரும் விருத்தி பெற்று முத்தியளிக்கும் எட்டுவகை யோகங்களை அருளிச் செய்திருக்கின்றார்கள்.

முன்கலை திவாகரம்

இயம் - நியம் - மாசனம் - பிராணாயநமம் - பிரத்தியாகாரம் தாரணை - தியானம் - சமாதி என்பவைகளாம்.

இதன் சுருக்கம்

இயமம் - கொல்லாவிரதம், மெய்கூறல், கள்ளாமை,
பிறர்பொருட்காதலின் மெய், இல்வயினிந்திய மடக்கலு மியமம்.
நியமம் - தவமொடு, தூய்மெய், தத்துவ நூலோர்தன்,
மனமுவந்திருத்த, றெய்வவழிபட, னினையுங்காலை நியமமாகும்.

இதன் விரிவு - இயம்

இயமம் பத்துவகை, அதாவது, அகிம்சை - சத்தியம் - ஆஸ்தேயம் பிரமசரியம் - தயை, ஆர்ஜ்ஜவம், க்ஷமை, திரிதியை, மிதாகாரம், சவுகம், என்பனவாம்.

அகிம்சை - அன்னியப் பிராணிகளுக்குத் துக்கத்தையுந் துன்பத்தையும் உண்டுசெய்யாதிருத்தல்.

சத்தியம் - கண்ணினாற் கண்டதையும் யாதார்த்தக் கேள்வியையுஞ் சொல்லுதல்.

ஆஸ்தேயம்-பிறர் பொருளை கிரகிக்காமலும் மனதி லெண்ணாமலும் இருத்தல்.

பிரமசரியம் - ருதுகாலமன்றி மற்ற காலங்களில் சுயஸ்திரியை விரும்பாது ஒடுக்கத்திலிருத்தல்.

தயை - தன்னைப்போல் பிறரும் சுகவாழ்க்கையடைய விரும்புதல்.

ஆர்ஜ்ஜவம் - மித்துருக்களையுஞ் சத்துருக்களையும் பந்துக்களையும் அன்னியர்களையும் சமமாகப் பார்த்தல்.

க்ஷமை - அன்னியர் செய்யும் தீங்குகளை மனதிற் தங்கவிடாமலும் கலங்காமலுமிருத்தல்.

திரிதியை - திரிபீடார்த்தங்களை தேற விசாரித்து பற்றறுக்க முயலல்.

மிதாகாரம் - கொஞ்சமும் அதிகமுமில்லாமல் சமமாகப் புசித்தல்.

சவுகம் - தேகத்தை சுத்திகரித்து ஆரோக்கியத்தில் வைக்கல்.

நியம்

நியமம் பத்து வகைப்படும். அதாவது, தபசு - சந்தோஷம் ஆஸ்திக்கியம் - தானம் - ஈஸ்வர பூசை - சித்தாந்த சிரவணம் லஜ்ஜை - மதி - செபம் - விரதம் என்பனவாம்.

தபசு - பஞ்ச புலன்களின் போக்கில் மனதைப் போகவிடாமல் வீரியத்தையடக்குதல்.

சந்தோஷம் - தனக்குக் கிடைத்த வரையில் போதும் என்று திருப்தியடைதல்.

ஆஸ்திக்கியம் - சுருதி ஸ்மிருதிவாக்கியங்களின் மீது அன்பு வைத்தல்.

தானம் - நீதியினின்று சம்பாதிக்கும் பொருளை ஞானநிஷ்டர்களுக்கு