பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 607


(வி.) இல்லறத்தை நல்லறமென நடாத்துந் தாயானவள் தனக்கோர் புத்திரபாக்கியங் கிடைத்தபோ துண்டாய ஆனந்தத்தினும் தந்தை தாயர் சொற்கடவாது அவர்களை தெய்வமாகக் கொண்டாடுவதுடன் ஏனையோர்களால் உனது மைந்தன் மிக்க விவேகமிகுத்தவனென்றும், சாந்தரூபியென்றும், அந்தணனென்றும் சொல்லக் கேள்விப்படுவாளாயின் அதனினு மேலாய ஆனந்தங்கொள்ளுவாளென்பதற்குச் சார்பாய் காசிகாண்டம் "தந்தைதாய் பணித்தல்செய்யுந் தவமலாற் றவம்வேறில்லை, மைந்தர்நற் கதியை வேண்டில் வணங்குவர் தாயைத்தந்தை, அந்தமைந்தனையே போற்றல் வேண்டுமற்றவ ரன்னாற், சிந்தையுற்றுணரிற்றாயே தந்தையுட் சிறந்தாண் மன்னோ" என்னும் ஆதாரங்கொண்டு புத்திரபாக்கியம்பெற்ற ஆனந்தத்தினும் தனது மைந்தனின் ஞானபாக்கியத்தையுங் கேட்பாளாயின் அதனினு மிக்க ஆனந்தங் கொள்ளுவாளென்னுந் தாயினது சிறப்பைக் கூறும் விரிவு.

10.மகன்றந்தைக் காற்று முதவியிவன் றந்தை
யென்னோற்றான் கொல்லென்னுஞ் சொல்.

(ப.) மகன் - புத்திரனானவன், றந்தைக்காற்று - தனது தகப்பனுக் கன்புடன் செய்துவரும், முதவி - உபகாரத்தைக்காண்போர், யிவன்றந்தை - இவனுடைய தகப்பனானவன், யென்னோற்றான் - ஏது நற்றவத்தைச்செய்தானோவென, கொல்லென்னுஞ்சொல் - சகலருங் கேட்கப் பேசிக் கொள்ளுவார்களென்பது பதம்.

(பொ.) புத்திரன் தனது தகப்பனுக்குச் செய்துவரும் அன்பின்மிகுத்த வுபகாரத்தைக் காண்போர் இவனது தந்தையேது தவத்தைச்செய்து இப்புத்திரனைப் பெற்றானோவென ஒலிக்கப் பேசிக்கொள்ளுவார்களென்பது பொழிப்பு,

(க.) மைந்தன் தனது தகப்பனுக்குச் செய்துவரும் நன்றியறிதலாம் அன்பின் மிகுத்த அரிய வுபகாரச் செயல்களைக் காண்போர்கள் யாவருங் கொல்லென்று பேசிக்கொள்ளும் மொழிகள் யாதெனில் இவன்றந்தை எத்தகைய வரிய நோன்பினைனூற்று இப்புத்திரனைப் பெற்றானோ என்பார்களென்பது கருத்து.

(வி.) தகப்பன் செய்துவந்த அரிய தபோபலத்தால் சற்புத்திரன் தோன்றி அவனன்பு மிக்கச் செய்துவரும் உபகாரச் செயல்களைக் காண்போர் புத்திரபேற்றிற்காய் அவன்றந்தை நூற்ற நோன்பினையே ஆதாரமாகக்கொண்டு என்னூற்றான் இவன் றந்தையெனத் தகப்பனது நற்செயலை விளக்கிய விரிவு,

8. அன்புடைமெய்

அதாவது இல்லறம் இனிது நடாத்தலுக்கும், பிறவுயிரோம்பலுக்கும், வாழ்க்கைத்துணைநலமாதலுக்கும், அறவோர்க்களித்தலுக்கும், யதார்த்த அந்தணரை ஓம்பலுக்கும், இழிந்தோரை ஏற்றலுக்கும், மெலிந்தோரைக் காத்தலுக்கும், அன்பே ஆதாரமென்பதைக்கண்ட நமது நாயன் இவ்விடம் அன்பினது சிறப்பை விளக்குகின்றார். உடல்தோற்றாவிடத்து அன்புந் தோற்றாதாதலின் உடல்கொண்ட அன்பினை விளக்குமாறு அன்புடைமெ யென்னும் பெயர்பெற்றது.

1.அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர்
புன்கணீர் பூச றரும்.

(ப.) அன்பிற்கு - உழுவலுக்கும், உண்டோ - உளவோ, வடைக்குந்தா - காப்புச் செயல், (இல்லை ) ழார்வலர் - அன்பின் மிக்கோர், புன்கணீர் - துன்புருவோரைக் காணுங்கால் விடுங் கண்ணீரே, பூசறரும் - அடைபடா வன்பினை விளக்குமென்பது பதம்.

(பொ.) அன்பினை தாளிட்டடைக்குங் கதவில்லை. அதாவது துன்புருவோரைக் காணுங்கால் அன்புடையோர் விடுங்கண்ணீரே அடைபடாவன்பின்மிகுதியைக் காட்டுமென்பது பொழிப்பு.

(க.) எத்தகைய வன்னெஞ்சனாயினும் தன்னினத்துன்பத்தைக் காணுவானாயின் தனக்குள்ள அன்பின் அடைபடாவழியால் ஆற்றொணா