பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/664

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

654 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(பொ.) கள் குடியாத ஆனந்தம் அறியேன் என்று கூறும்படியானதை மறந்துவிடுவாயாக. உள்ளத்தில் அவ்வெண்ணமே அடங்கி அவ்வாசையையே அதிகரிக்கச்செய்யும் என்பது பொழிப்பு.

(க.) கள்ளைக் குடிப்பதால் சொற்ப ஆனந்தமுண்டு அதனைக் குடியாததால் ஏதொரு ஆனந்தமும் அறியேனே என்னும் எண்ணத்தைப் பதியாது அகற்றிவிடுவாயாக மனதின்கண் அவ்வெண்ணமே அடங்கி அவ்வாசையே அதிகரித்துப்போம் என்பது கருத்து.

(வி.) கள்ளினைக் குடித்து வெறிப்பதால் ஓர் ஆனந்தமுண்டு. அதனைக் குடியாது வேறானந்தமும் அறியேனே என்னும் எண்ணத்தைக் கைவிடுவாயாக. அவ்வகை எண்ணுவதாயின் அவ்வெண்ணமே அதிகரித்து அந்த சொற்ப ஆனந்தத்தில் விடுத்து மாறா துக்கத்திற்குக் கொண்டுபோய்விடுமாதலால் அவ்வானந்த எண்ணத்தையே நெஞ்சிற் பதியவைக்கலாகாது என்பது விரிவு.

9.களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரி| யற்று.

(ப.) களித்தானை - கட்குடித் தானந்தித்தோனின், காரணம் - செயலை, காட்டுதல் - விளக்குதல், கீழ்நீர் - சேற்றுநீரில், குளித்தானைத் - மூழ்கினோனுக் கொப்பாக, தீத்துரீஇயற்று - சீலமற்றோன் நிலைபோ லாமென்பது பதம்.

(பொ.) கள்குடித்து ஆனந்தித்தோனின் செயலை விளக்குதல் சேற்றுநீரில் முழுகினோனுக்கு ஒப்பாக சீலமற்ற நிலை யாகும் என்பது பொழிப்பு.

(க.) கள்குடித்துள்ளவனின் ஆனந்தம் மற்றவர்களுக்கு எவ்வகையாகக் காட்டுமென்னில் சீலமற்று சேற்றுநீரில் குளித்து வந்தவனைப் பார்ப்பது ஒக்கும் என்பது கருத்து.

(வி.) கள்ளைக் குடித்து வெறித்து ஆனந்திப்பது அவனுக்கு சுகமாகத் தோற்றினும் மற்றும் பார்ப்பவர்களுக்கு குளிக்கப்போய் சேற்றைப் பூசிக்கொண்டு சீலமற்று உலாவுவோனைப்போற் காணப்படுவதுமன்றி அவனருகில் நெருங்கி தீண்டாமலும் பேசாமலுந் தீத்துரீ இயன் என்று அகலுவார்கள் என்பது விரிவு.

10.கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கா
லுள்ளான் கொலுண்டதன் சோர்வு.

(ப.) கள்ளுண்ணா - தான்கள் குடியாத, போழ்திற் - காலத்தில், களித்தானை - கட்குடித் தானந்திப்போனை, காணுங்கால் - பார்ப்பானாயின், லுண்டதன் - கள்ளினையருந்திய, சோர்வு - கெடுதியை, லுள்ளான்கொ - தனக்குள்ளறிவா னென்பது பதம்.

(பொ.) தான் கள்குடியா காலத்திற் கள்ளைக்குடித்து ஆனந்திப்போனைப் பார்ப்பானாயின் கள்ளினை அருந்தியக் கெடுதியை தனக்குள் அறிவான் என்பது பொழிப்பு.

(க.) கள்குடியன் தான் குடியாத காலத்தில் கள் குடித்துள்ளவனுடைய சோர்வைக் காணுவானாயின் அக்கேடு தன்னில் தானே விளங்கும் என்பது கருத்து.

(வி.) எக்காலுங் கள்ளைக்குடித்து ஆனந்திப்பேன் என்பவன் எதிரி ஒருவன் அக்கள்ளினைக் குடித்து வெறித்து மதிமயங்கிச் செய்யுங் கொடுஞ்செயல்கட்கு அஞ்சி பல்லோர் இகழவும் பாதுகாவலில் அடைக்கவுமுள்ளதைக் காணுவானாயின் அதனாலுண்டாம் சிறு வானந்தமும் பெருங்கேடுந் தன்னில் தானே விளங்கும் என்பது விரிவு.


21. கொல்லாமை

அதாவது இல்லறத்தில் இன்புற்று வாழ்க விருப்பமுடையோன் சருவ சீவராசிகளையுந் துன்புறச் செய்யாமல் சீவகாருண்யமுற்று வாழ்வானாயின் சகல சுகமும் பெற்று வாழ்க்கைநல மடைவதன்றி மனிதன் என்னும் பெயரற்று