பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/706

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

696 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(க.) நான் நீயென்னும் புறப்பற்றையும் என்னது உன்னது என்னும் அகப்பற்றையும் அறுத்த துறவி மேலோர்க்கு உரியதாம் வானுலகஞ் சேருவான் என்பது கருத்து.

(வி.) இல்லறம்விடுத்து பற்றுக்கவேண்டி துறவறம் பூண்டவன் யான், எனதென்னுஞ் செருக்காம், நான் நீ என்னும் பற்றினையும், என்னுடையது உன்னுடையது என்னும் பற்றினையும் அறுக்காவிடிற் பயனில்லை. அதனை அறுப்பவனே துறவுபூண்ட பயனாம் மேலோர்க்குரிய வானராட்சியமாம் புத்ததேவன் உலகஞ் சேருவான் என்பது விரிவு.

7.பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

(ப.) பற்றி - துறவைப்பற்றினோர், விடாஅ - அதனை விடலாகாது. பற்றி - துறவைப்பற்றியும், பற்றினை - உலக பாசபற்றுடைய, தவர்க்கு - அவர்களுக்கு, விடும்பைகள் - நான்குவகை துக்கங்களும், விடாஅ - விடாது என்பது பதம்.

(பொ.) துறவைப் பற்றினோர் அதனை விடலாகாது. துறவைப்பற்றியும் உலக பாசபற்றுடைய அவர்களுக்கு நான்குவகைத் துக்கங்களும் விடாது என்பது பொழிப்பு.

(க.) இல்லறம் விடுத்து துறவறம் அடையவேண்டும் என்னும் ஓர் பற்றினையுடையோர் மற்றும் இல்லறப்பற்றை பற்றுவாராயின் நான்குவகைத் துக்கங்களும் அவர்களைவிட்டு அகலாது என்பது கருத்து.

(வி.) பிறப்பின் இடும்பை பிணியின் இடும்பை, மூப்பின் இடும்பை, மரண இடும்பை நான்கையுங் கண்டு பயந்து இல்லறப்பற்றை யொழித்து துறவறப்பற்றை பற்றினோன் மற்றும் இல்லறப்பற்றை நாடுவானாயின் துறந்து பற்றிய முயற்சிகள் யாவுங்கெட்டு நான்குவகை துக்கங்களில் அழுந்தியே உழல்வான் என்பது விரிவு.

8.தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

(ப.) தலைப்பட்டார் - நன்முயற்சியில் முநிந்து. தீர - துக்கமகல, துறந்தார் - துறவு பூண்டோர், மயங்கி - மற்றும் உலகயின்பத்தை நாடி, வலைப்பட்டார் - பாசபந்தக் கயிற்றால் கட்டுப்படுவராயின், மற்றையவர் - இல்லறத்தோரே யாவரென்பது பதம்.

(பொ.) நன்முயற்சியில் முநிந்து துக்கமகல துறவுபூண்டோர் மற்றும் உலக இன்பத்தைநாடி பாசபந்தக் கயிற்றால் கட்டுபடுவராயின் இல்லறத்தோரே யாவர் என்பது பொழிப்பு.

(க.) துக்கந்தீர இல்லம் விடுத்து துறவு பூண்டோர் அந்நெறி தவறி மறுபடியுமிழிந்து மாயவலைக்கு உட்படுவராயின், அவர் இல்லந் துறந்தவராகார் என்பது கருத்து.

(வி.) தனது இடைவிடா முயற்சியால் இல்லந்துறக்கின் நான்குவகைத் துக்கங்களும் ஒழிந்து சுகம்பெறலாம் என்று எண்ணி துறவோர் சங்கஞ் சேர்ந்து, சமணநிலையுற்றோர் அந்நிலை பிறழ்ந்து பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை என்னும் பாசபந்தக் கயிற்றில் கட்டுப்படுவராயின் துறவறத்தான் என்னும் பெயரற்று இல்லறத்தோனே என்றழைக்கப்படுவான் என்பது விரிவு.

9.பற்றற்றக் கண்ணே பிறப்பறுக்கு மற்று
நிலையாமெ காணப் படும்.

(ப.) பற்றற்றக்கண்ணே - தோற்றும் பொருட்களில் அவாவற்றலே, பிறப்பறுக்கு -பிறவியின் துன்பம் போக்கும், மற்று - அவ்வவா வறாவிடில், நிலையாமெ மாறிமாறி துன்புற்று தோற்றுமுடலை, காணப்படும் - எங்கும் பார்க்கலாமென்பது பதம்.