பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/785

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 775

அரசனானவன் சாம தான பேத தண்டமென்னும் சதுர்வித உபாயங்களைக் காலமறிந்து செய்யவேண்டும் என்பது விரிவு.

9.எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல்.

(ப.) எய்தற்கரிய - பகைவர் மீது தனதாயுதத்தைப் பிரயோகிக்கக்கூடிய, தியைந்தக்கா - காலம் நேர்ந்தபோது, லந்நிலையே - அக்காலத்திலேயே, செய்தற்கரிய - அரிய யுத்த முயற்சியை, செயல் - செய்ய வேண்டுமென்பது பதம்.

(பொ.) பகைவர்மீது தனது ஆயுதத்தைப் பிரயோகிக்கக்கூடிய காலம் நேர்ந்தபோது அக்காலத்திலேயே அரிய யுத்தமுயற்சியை செய்யவேண்டும் என்பது பொழிப்பு.

(க.) அரசன் பகைவர்மீது தனதாயுதத்தை யெய்யுங்காலம் நேர்ந்தபோது அக்காலத்திலேயே யுத்தத்தை நடாத்த வேண்டும் என்பது கருத்து.

(வி.) அரசனது யுத்தத்திற்கு வேண்டிய சகல காரியங்களுங் கைகூடுங் காலம் நேர்ந்தபோது அக்காலத்தையே முன்னிட்டு பகைவர்மீது படையெடுத்தலே வெற்றிக்கழகாகும் என்பது விரிவு.

10.கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து.

(ப.) கொக்கொக்க - கொக்கானது மீன் வருங் காலம்பார்த்து, கூம்பும் - பற்றிக்கொள்ளுமாபோல், பருவத்து - நேருங்காலமறிந்து, செய்வோன் - வெற்றிபெறுவான், மற்றதன் - காலமறியாது. சீர்த்தவிடத்து - கோபத்தால் யுத்தத்திற்கு முனிவதாயின், குத்தொக்க - தானே சோர்வடைவதர், கிடமுண்டாமென்பது பதம்.

(பொ.) கொக்கானது மீன் வருங் காலமறிந்து பற்றிக்கொள்ளுமாபோல் நேருங்காலமறிந்து செய்வோன் வெற்றிபெறுவான், காலமறியாது கோபத்தால் யுத்தத்திற்கு முனிவதாயின் தானே சோர்வடைவதற்கிடமுண்டாம் என்பது பொழிப்பு.

(க.) கொக்கானது ஒருமீன் வருமளவுங் கார்த்துப் பற்றிக்கொள்வதுபோல நேருங்காலம்பார்த்து படையெடுக்கும் அரசன் வெற்றியடைவான், அவ்வகையில்லாதவனோ தானே குத்துண்டு மடிவான் என்பது கருத்து.

(வி.) கொக்கின் உவமானமோ வருங்காலம் பார்த்தல். அவைபோலவே அரசனும் தனது பகைவரை வென்று அத்தேசத்தைக்கைப்பற்றுங்காலம் பார்த்து செய்வானாயின் வெற்றியடைவான். அவ்வகையக் காலம் பாராது தனது கோப வெறியால் படையெடுப்பவனோ தானே குத்தூண்டு மடிவது ஒக்கும் என்பது விரிவு.

54. இடனறிதல்

அரசனானவன் தனது வலியையுங் காலத்தையுமட்டிலும் பார்த்துக் கொண்டு யுத்தத்திற்கு முனைவதிற் பயனில்லை, எதிரியரசனது காட்டரண்மதில் நாட்டரண்மதில் மலையரண்மதில்கள் சூழ்ந்த இடங்களின் போக்கு வருத்துக்களை நன்குகண்டு தெளிந்து எவ்விடம் நின்று யுத்தம் புரியில் தனக்கு வெற்றியுண்டாமென்னு இடதிடமறிந்து படையை செலுத்த வேண்டியவற்றை விளக்கலானார்.

1.தொடங்கற்க வெவ்வினையு மெள்ளற்க முற்று
மிடங்கண்ட பின்னல் லது.

(ப.) முற்று - யுத்தாரம்ப சகல முடிபையும், மிடங்கண்ட - எதிரியரசனிட நிலைகளைக்கண்டு, பின்னல்லது - தெளிந்தபின்பே யன்றி, மெள்ளற்க - அவர்களை மதியாது முயன்று, வெவ்வினையு - கடுஞ்சினத்தாலாய யுத்தச்செயலை, தொடங்கற்க - ஆரம்பிக்கலாகாதென்பது பதம்.