பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/788

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

778 / அயோத்திதாசர் சிந்தனைகள்


7.அஞ்சாமெ யல்லாற்றுணை வேண்டா வெஞ்சாமெ
யெண்ணி யிடத்தாற் செயின்.

(ப.) அஞ்சாமெயல்லாற் - எதுக்கும் பயப்படாத வரசனுக்கு, றுணைவேண்டா - படைத்துணை வேண்டாதாயினும், யெண்ணி - நன்காலோசித்து, யிடத்தாற் செயின் - இடமறிந்து யுத்தாரம்பஞ் செய்யின், வெஞ்சாமெ - ஏதுக்கு மஞ்சா வீரங்குன்றாதென்பது பதம்.

(பொ.) ஏதுக்கும் பயப்படாத அரசனுக்கு படைத்துணை வேண்டாதாயினும் நன்காலோசித்து இடமறிந்து யுத்த ஆரம்பஞ் செய்வானாயின் எதுக்கும் அஞ்சா வீரங்குன்றாது என்பது பொழிப்பு.

(க.) சுத்தவீரமுடைய அரசனுக்குத் துணைவேண்டாதாயினும் பகைவரிடம் அறிந்து முநிவானாயின் வீரங் குறைவுபடாது என்பது கருத்து.

(வி.) அரசன் தனது அதிவீர பராக்கிரமத்தால் துணை வேண்டாது யுத்தத்திற்குச் செல்லுவதில் எதிரிகளின் இடதிட நுட்பங்களைக் கண்டுகொண்டு செல்வானாயின் தனது வீரங்குறையாமலே வெற்றி பெறுவான் என்பது விரிவு.

8.சிறுபடையான் செல்லிடஞ் சேரினு றுபடையா
லூக்க மழிந்து விடும்.

(ப.) சிறுபடையான் - சொற்ப சேனைகளைக் கொண்டும், செல்லுமிடஞ் - யுத்தத்திற்குச் செல்லுமிடனுட்பமறியாமலும், சேரி - சென்றுவிடுவானாயின், னுறுபடையா - அவ்விடமுள்ள சேனை பலத்தால், தூக்க - தனது வீரமுயற்சி, மழிந்து விடும் - குன்றிபோமென்பது பதம்.

(பொ.) சொற்ப சேனைகளைக் கொண்டும் யுத்தத்திற்குச் செல்லுமிட நுட்பம் அறியாமலும் சென்று விடுவானாயின் அவ்விடமுள்ள சேனை பலத்தால் தனது வீரமுயற்சி குன்றிப்போம் என்பது பொழிப்பு.

(க.) தனது வீரத்தால் சேனைபலம் இல்லாமலும் எதிரியினிட பலம் அறியாமலும் யுத்தத்திற்குச் செல்லுவதாயின் அவ்விடமுள்ள சேனைகளால் வீரங் குன்றிப் போம் என்பது கருத்து.

(வி.) அரசன் தனக்குள்ள சுத்த வீரத்தால் சிறுபடையை அழைத்துக்கொண்டு எதிரியரசன் இடதிட்டங்களைக் கண்டறியாமல் யுத்தத்திற்குச் சென்று விடுவானாயின் இடங்களின் இடுக்கண்களாலும் எதிரி சேனையாலும் முறியடிப்பட்டு தனது சுத்தவீரம் யாவும் அழிந்து போம் என்பது விரிவு.

9.சிறைநலனுஞ் சீரு மிலரெனினு மாந்த
ருரைநிலத்தோ டொட்ட லரிது.

(ப.) சிறைநலனுஞ் - அரசனது நற்காப்பும், சீரு - நற்சீரும், மிலரெனினு - இல்லாதவர்களென்றும் சொல்லப்படும், மாந்த - அரசர்கள், ருரைநிலத்தோ - தாங்கள் வாழும் பூமியில், டொட்டலரிது - நிலையாக வாழ்தலில்லாமற் போவார்கள் என்பது பதம்.

(பொ.) அரணது நற்காப்பும் நற்சீரும் இல்லாதவர்களென்று சொல்லப்படும் அரசர்கள் தாங்கள் வாழும் பூமியில் நிலையாக வாழ்தலில்லாமற் போவார்கள் என்பது பொழிப்பு.

(க.) அரண்மனையின் நற்காப்பும் நற்சீரும் இல்லாதவர்கள் என்று கருதப்படும் அரசர்கள் அவ்வரணில் பதியாக நிலைக்க மாட்டார்கள் என்பது கருத்து.

(வி.) அரணை சிறையாகக் காக்கும் மதில் காப்பு அகழி காப்பில்லாமலும் மதியூகச் சீரில்லாமலும் வாழும் அரசரென்றெண்ணப்படுவோர் தங்களரணுள்ள பூமியில் நிலையாக நிலைக்கமாட்டார்கள் என்பது விரிவு.

10.காலாழ் களரி னரியடுங் கண்ண ஞ்சா
வேலாண் முகத்த களிறு.

(ப.) வேலாண் முகத்த - கூரியவேலேந்தியுடையவனுடைய முகத்தை, கண்ணஞ்சா - கண்டும் பயப்படாத, களிறு - யானையினது, காலாழ்களரி - கால்களாழ்ந்த சேற்றிலழுந்திவிடுமாயின், னரியடுங் - நரியினுக்கு பயந்து போமென்பது பதம்.