பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 / அயோத்திதாசர் சிந்தனைகள்

காந்தனே குமரன் கந்தன் கலையுணர் புலவனும் பேர்
முருகன்வேள் சாமியாறு முகன் குகன் குழகன் மாயோன்
மருகன்சேய் கார்த்திகேயன் வருபகை வென்றான் செட்டி
யரன்மகன் கங்கை மைந்த னாண்டலைக் கொடி யுயர்ந்தோன்
சரவணபவன் கடம்பன் றாருகற் செற்றோனாசான்.

திருமுருகாற்றுப்படை

சேண்விளங்கியற்கை வாண்மதிகவைஇ
யகலா மீனி னவிர்வன விமைப்பத்
தாவில்கெள்கைத் தந்தொழின் முடி மார்
மனனேர் பெழுதரு வாணிற்முகனே
மாயிருண்ஞாலத் தொளிரறம் விளங்கப்
பல்லறந்தொழுதன் றொருமுக மொருழக
மார்வலரேத்த வுமர்ந்தினிதொழுகிக்
காதலினுவந்து வரங்கொடுத்
தன்றே யொருமுக
மந்திரவிதியின் மரபுளி வழா அ
வந்தணர் வேள்வி யோர்க்குமே யொருமுக
மெஞ்சிய பொருள்களை யேமுறநாடித்
திங்கள் போல் திசைவிளக்கம்மே யொருமுகஞ்
செறுநர்த்தேய்த்து செல்சம முருக்கிக்
கறுவு கொணெஞ்சமொடு
களம்வேட்டன்றே யொருமுகம்
குறவர் மடமகள் கொடி போனுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந்
தன்றே யொருமுக
மூவிருமுகனு முறைநவின் றொழுகலி
... (தெளிவில்லை ) வண்புகழ் நிறைந்து
விண்செலன் மரபினையர்க்கேந்திய
தொருகையுக்கஞ் சேர்த்திய தொருகை யசையிய தொருகை
யங்குசங்கடாவ லொருகை இருகை
வலந்திரிப்ப வொருகை
தாரொடுபொலிய யொருகை
மீமசைக் கொட்ப வொருகை
படுமணி யிரட்ட வொருகை
விசும்பின் மலிதுளிபொழிய வொருகை
வதுவைசூட்ட வாங்க லொருகை.

- 1:37; பிப்ரவரி 26, 1908 –

சிலப்பதிகாரம்

திருமால் குன்றத்து செல்குவீராயிற் / பெருமால் கெடுக்கும் பிலமுண்டாகு
விண்ணோரேத்தும் வியத்தகுமரபிற் / புண்ணிய சரவணம் பவகாரணியோ
டிட்டசித்தியெனும் பெயர்போகி / விட்டுநீங்கா விளங்கிய பொய்கை
முட்டகச்சிறப்பின் மூன்றுளவாங்குப் / புண்ணிய சரவணம் பொருந்துவீராயின்
விண்ணவர் கோமான் விழுநூலெய்துவிர்.

சரவணப்பூம்பள்ளியறைத்தாய்மாரறுவர்
திருமுலைப்பாலுண்டான் றிருக்கைவேலன்றே
குறம் களவளெம் குலமக ளவளொடு
மறுமுகவொருவனின்னடி யிணைதொழுதேந்.

நாரை குறவஞ்சி

1.நாநிலஞ்சூழ்நாதனடி / நாடிபணிந்தேற்றி
நாரைகுறவஞ்சிநிலை / நான்பகர்வேனம்மே
பொன்னுபுகழ் வெள்ளிமுதற் / சந்தனமே தோன்றும்
பழனிமலைபோதநிலை / யேற்றவருளாமே.

2.போற்றவருளுறு மெங்கள் / பொன்மலையன் வாழ்க்கை
பூத்தயை யற்றவர்க்குத் / தோற்றமறிதாமே.

3.தோற்றமுற வேண்டிலுள்ள / மாற்றலுரல் வேண்டும்
ஆற்றமுரலா லவித்தை / யாவுமடிவாகும்.

4.யாவுமடிவாகுமுறை / யாதெனவே கேளீர்
யானெனதென்னுஞ் செருக்கு / யிழியுமதனாலே.

5.யிழியுமன வேகநிலை / யாவுமுணர் போதன்
எம்முருகன் எங்குரவன் / ஏற்றமலை நாடன்.