பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 / அயோத்திதாசர் சிந்தனைகள்

16. இலிங்கபூசை விவரம்

இலிங்கம் என்னும் மொழியின் மூலவாக்கியம் அங்கலயம் எனப்படும். அங்கலயம் என்னும் மொழியே லய அங்கம் எனத் திரிந்து தற்காலம் லிங்கமென வழங்கிவருகின்றார்கள்.

அங்கலயம் என்னும் மொழியும் லய அங்கம் என்னும் மொழியும் உற்பவித்ததற்குக் காரணம் யாதெனில்,- உலகரட்சகனாகிய புத்தபிரான் பரிநிருவாணம் அடைந்து அவர் தேகத்தை தகனஞ்செய்து அவர் அஸ்திகளை ஏழரசர்கள் கொண்டுபோய் (டாகோபா) என்னும் கோபுரங்களைக் கட்டி அதன்மத்தியில் அஸ்தியைப் புதைத்து அவ்வஸ்தியைப் புதைத்திருக்கும் அடையாளமானது எப்போதுந் தெரிந்துக் கொள்ளுவதற்கும் அறவாழியானை சிந்திப்பதற்கும் உயர்ந்த கற்களால் பீடங்கட்டி மத்தியில் உயர்ந்த பச்சைக்கல்லினாலேனும் வைரத்தினாலேனுங் கருங் கல்லினாலேனுங் கொழுவிபோற் செய்து நாட்டி புத்தசங்கத்தோர் யாவரும் தாமரை புட்பத்தால் அர்ச்சித்து பகவனை சிந்தித்து சத்தியதன்மத்தில் நடந்துவந்தார்கள்,

இதையே தரும பீடிகை என்றும் மணியறைப்பீடிகை என்றும் கடவுள் பீடிகை என்றும் தருமபீடம் என்றும் கடவுள் பீடம் என்றும் பூர்வ காவியங்கள் கூறுகின்றன.

மணிமேகலை

இந்திரகோடணை விழாவணி விரும்பி / வந்து காண்குறுஉ ணிமேகலாதெய்வம்
பதியகத்துரையு மோர்பைந்தொடியாகி / மணியறைப்பீடிடை வலங்கொண்டோங்கி.
அப்பீடிகைகளிடத்து, / தூய்மென்சேக்கை துயில்கண் விழிப்ப
வலம்புரி சங்கம் வறிதெழுந்தார்ப்ப / புலம்புரி சங்கம் பொருளொடு முழங்க
புகர்முக வாரண நெடுங்கூ விளிப்பப் / பொறிமயிர்வாரணங் குறுங்கூவிளிப்பப்
பணை நிலைப்புரவி பலவெழுந்தார்ப்ப / வணை நிலப்புள்ளும் பலவெழுந்தார்ப்ப
பூம்பொழிலார்க்கை புள்ளொலி சிறப்ப / கடவுட் பீடிகை பூப்பலி கடி கொளக்
கலம்பகர் பீடிகை பூப்பலி கடிகொள.

இவ்வகையாக புத்தசங்கத்தோர் தொழுது வந்ததுமன்றி சங்கத்துப் பின்னடியார்கள் ஆதிக்குச் சமமான நிலையாம் பரிநிருவாணமுற்ற போது சம ஆதியானாரென்றுகூறி சிலர் தகனஞ்செய்த அஸ்தியை கற்குழியில் வைத்தும், சிலர் நிருவாணமுற்ற தேகத்தையே கற்குழியில் வைத்து அதன்மீது கொழிவி போன்ற அடையாளக்கல் நாட்டி மற்றும் பின்னடியார்கள் அப்பீடத்தை அங்கலிங்க ஐக்கியமென்றும் லய அங்கம் என்றும் வழங்கி சிந்தித்துவந்தார்கள்.

அதாவது, சப்த, பரிச, ரூப, ரச, கந்தம் என்னும் பஞ்ச இந்திரியங்கள் அடங்கி ஆனந்த முதித்துப் பூரணநிலை அடைகின்றபடியால் அங்கலிங்க ஐக்கியம் என்றும் வழங்கிவந்தார்கள்.

ஞானவெட்டி

விரிவான துருவமெனும் மூலவீட்டில் / வேதமதுக் கெட்டாத ரூபமாகி
கருவாகி தெவிட்டாத கனியுமாகி / கதிராகி மதியாகிக் காற்று மாகி
உருவாகி யுடலாகி யுயிருமாகி / யொளியாகியலகையெனுமுடலுக்குள்ளே
யருவாகி யருள்ஞான சொரூபியாகி / அங்கமதி லிங்கமதா யமைந்தேனையே.

பின்னடியார் சமாதி என்னும் ஆதிக்குச் சமமாம் நிலையை அங்கலிங்கம் என்றும் லய அங்கம் என்றும் வழங்கிய வார்த்தையானது லிங்கம் லிங்கம் எனக் குறுக்கல் விகாரப்பட்டது.

அக்காலத்தில் வேஷ பிராமணர்கள் வந்து தோன்றி புத்த தருமச் செயல்களையும் அவர்கள் வாக்கியங்களையும் பீடமாகக்கொண்டு தங்கள் சீவனப் பொய்மதங்களைப் பரவச்செய்து வந்தகாலத்தில் அவர்களைப் பின்பற்றியக் கூட்டத்தார் தங்கள் பொய்க் குருக்களிடஞ் சென்று அங்கலிங்க ஐக்கியபூசைச் செய்யவேண்டும் என்று கோறியபோது, வேஷபிராமணர்களுக்கு அதினந்தரார்த்தம் விளங்காமல் ஆவிடையார் கோவில் என்னும் ஓர் கட்டிடத்தைக் கட்டிவைத்து அதன்மத்தியில் பெண்குறி ஆண்குறியை நாட்டி அங்கம் என்றால் தேகம், லிங்கம் என்றால் ஆண்குறி ஐக்கியம் என்றால் பெண்குறியென்று ஓதி இதுவே உலகசிருட்டி முதலா இருக்கின்றபடியால்