பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு / 89

அவற்றுள் கற்பசாதனத்தோர் சிலவோடதிகளைப் புசித்து வஜ்ஜிரகாயப் படுத்துகிறதும் சிலர் சாம்பரின்மீது ரெட்டுகளைவிரித்து ஞானசாதனஞ் செய்துவந்தார்களென்பதும் சரித்திரங் கூறுகின்றது.
தேகத்தை எத்தகைய கற்பஜெயஞ் செய்னுஞ் சிலகாலிருந்து மறைந்து போமேயன்றி நீடித்திருக்க மாட்டாது. அவ்வகை நீடித்தேயிருக்கின்ற தென்பதாயின் சிற்சிலமாறுதல் செய்யவுங்கூடும்.
பௌத்தர்களது கற்பசாதனத்தில்

ஞானவெட்டி

"யோகத்தின் விதிதா னென்னவுடலுயிர் பிலக்கத்தானும்
ஆகமப்படியே ஞானவாயிரத்தைஞ்தூறு சொச்சம்
பாகமாயாய்ந்து பரனம் பழக்கமோராண்டு உண்டால்
சாகத்தான் போமோயில்லை சாக்காடு தவரிப்போமே”

என்று கற்பசாதனத்தோர் சாதித்துவந்த போதினும் ஞான சாதனத்தோர் அவற்றைக் கண்டித்தே வரைந்திருக்கின்றார்கள். அதாவது

நெஞ்சறி விளக்கம்

ஆண்டொருநூறு கற்பம் அவுஷத மூலியுண்டு
நீண்டதோர் காய சித்தி நெடு நாளைக்கிருந்த பேரும்
மாண்டு தான் போவாரல்லால் வையகத்திருப்பாருண்டோ
தீண்டொணா நாகைநாதர் சீர்பதம் போற்று நெஞ்சே,

என, நாகர் குலத்தை ரட்சித்து அவர்களிடுக்கங்களை நீக்கியருளிய நாகைநாதராம் புத்தரை சிந்தித்து அவரது தன்மத்தில் நிலைத்து பரிநிருவாணம் பெறவேண்டியதே அழகென்று குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
ஆதலின் உலகத்தில் தோன்றும் பொருட்கள் யாவும் க்ஷணத்திற்கு க்ஷணமழிந்து கொண்டே போவதியல்பு கொண்டு எலும்புகள் கல்லாக மாறுதலும் கல்லுகள் கரியாக மாறுங்கால் ஊனும் உதரமுந் தோய்ந்த வுடல் என்றும் அழியாதிருக்குமென்பதை ஆராய்ந்தறியவேண்டியதேயாம். கடவுளே மனிதனாக வந்து மரித்தோனுக்கு உயிர் கொடுத்து உலாவப் பெற்றவன் உலகத்தில் மறைந்து போகுங்கால் ஏனையோர் மறையாமலிரா ரென்பது திண்ணம். மரித்துள்ள தேகத்தை நம்புவதால் சில ஆட்சரியங்களும் நடைபெறுகின்ற தென்பதில் கல்லை நம்பினவனுக்கும் மோட்சம் கடவுளை நம்பினவனுக்கும் மோட்சமென்னும் பழமொழிபடி மனமே காரணமாயுள்ள தால் சில ஆட்சரிய முண்டாயது அதுவோர் பெரிதாகாவாம்.

- 7:10; ஆகஸ்ட் 23, 1913 –
 

115. அம்மையென்னும் வைசூரி

வினா : இம்மாநிலந்தன்னில் வாசஞ்செய்யுங் குடும்பிகளில் யாவருக் காகிலும் அம்மையென்னும் வைசூரி கண்டு வருத்தப்படுவார்களாயின், அச்சமயத்தில் மாரி அம்மனைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறதாவதென்ன? இப்பிள்ளையானவன் பெரியோனாகி விவாகஞ் செய்யுஞ் சமயத்தில், பெண்வேடமும், கழுத்தில் மஞ்சள், பூநூல் தரித்தும் உடுக்கை, பம்பை, சிலம்பு முதலிய வாத்தியகோஷ்டத்துடன் ஏழு எல்லைவலம் வந்து பிறகு அம்மன் சன்னிதானஞ் சென்று, ஆடுவெட்டி, பொங்கலிட்டு, இப்பிள்ளைக்கு விவாகஞ் செய்வதாக பிரார்த்தித்துக் கொள்ளுகின்றார்களே? இத்தியாதி சடங்குகள் யாவும் பௌத்ததன்மத்தை சார்ந்ததா அன்றேல் ஆரியரின் வந்நெஞ்சக் கட்டுக்கதைகளில் இதுவுமொன்றோ?

வீ. பார்த்தசாரதி, புதுப்பேட்டை.

விடை : அன்பரே! தாம் வினவிய சங்கை பெளத்தருக்குரியதேயன்றி வேறு மதஸ்தர்களுக்குரியதன்றாம். தென்னிந்தியாவில் அம்பிகாதேவி என்றும் அம்மை, அவ்வை, என்றும் வழங்கிவந்த அறச்செல்வியின் உற்சாகமேயாம். இவற்றை "அம்பிகாதேவியின்" சரித்திரத்தால் தெள்ளறத் தெளிந்து கொள்ள லாம். அச்சரித்திரத்தை அனுசரித்து பூர்வபெளத்தர்களுக்குள் ஆண் குழந்தை களுக்கு வைசூரிகண்டு மிக்க அபாயத்திலிருக்குமாயின் பகவதியை சிந்தித்து