பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

இஃது சிரமற்றவுடல் போன்ற வீரட்சரமாதலின் அஃதோர் மொழி முதலற்று குணமும் பொருளற்றது கொண்டு பயனுமில்லை என்பதே துணிபு.

இலக்கணவிதி தொல்காப்பியம்

உயிரும் புள்ளியு மிறுதியாகிக் குறிப்பினும் பண்பினுமிசையினுந் தோன்றி / நெறிப்பட
வாராக்குறைச்சொற் கிளவியுமுயர்திணை யஃறிணை யாயிரு மருங்கி / னைம்பாலறியும்
பண்பு தொகுமொழியுஞ் / செய்யுஞ்செய்த வென்னுங் கிளவியின் மெய்யொருங்கியலுந்
தொழிறொகு மொழியுந் தம்மியல் கிளப்பிற் றம்முள்ளம் வரூஉ மெண்ணின்
றொகுதியுளப் படப்பிறவு மன்னவையெல்லா மருவின் பாத்திய / புணரியனிலையிடை
யுணரத்தோன்றா.

-7:17; அக்டோபர் 1, 1913 -
 

119. கிரகணங்கள்

வினா : அண்ணலே; 14 ஞாயிற்றுக்கிழமை காலை பிராமணனும் வள்ளுவர்களும் தெற்ப புல்லுகளை கொண்டுவந்து எல்லோருக்குங் கொடுத்து இதை சமயற் பாத்திரங்களிலும் அடுக்கல் பானைகளிலும் அரிசி முதலானதிலும் போட்டு வையுங்களென்றார். இதை போடாவிட்டாலென்ன குற்றம் போட்டதினாலென்ன குணமென்றேன். போடாவிட்டால் தோஷம் தங்குமென்றார். என்ன விஷயத்திற்கு இப்புல்லென்றேன். சந்திரகிரஹணமென்றார் சந்திரகிரஹணமென்றாலென்ன என்றேன். மேல் சொன்ன பிராமணனுக்குக் கோபம் பிறந்து, இராகு, கேது என்னும் சற்பம் நாளை திங்கட்கிழமை இரவு 7 1/2மணிக்கு விழுங்கி, 8 1/2மணிக்கு கக்குமென்றார். அன்றைய இரவு 7-மணியிலிருந்து 8 1/2மணி வரையிலும் பார்த்தேன், அப்பாம்பினுடைய தலையும், வாலையும், விழுங்க, திறந்த வாயையும் வானத்தை சுற்றி சுற்றிப்பார்த்து கழுத்து நோய் எடுத்துக்கொண்டதேயொழிய அப்பாம்பை பார்க்கவேயில்லை எமதருமெஞானத்தந்தையே ; இதின் சரித்திரம் தெரிந்துக்கொள்ள அநேக ஜனங்களுக்குப் பிரீதியாயிருக்கிறபடியால் அதின் வரலாறை முழுதும் விவரமாய் பத்திரிகையினோர் கோணத்திற் பிரசுரிப்பீரென்று மிகவும் கெஞ்சிக் கேட்டுக்கொள்ளும்.

என். பரசுராமன் சாப்பர். பெங்களூர்.

விடை : அன்பரே! தாம் வினவியுள்ள சங்கை விசேஷித் ததேயாம். அதாவது கிரகங்களில் வலவோட்டுக் கிரகங்களென்றும், இடவோட்டுக் கிரகங்களென்றும் இருவகையுண்டு இவற்றுள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் சனியென்னும் ஏழு கிரகங்களும் பூமியின் வலது பக்கமாக சுற்றிவரும். இராகு, கேது, இருகிரகங்களும் பூமியின் இடது பக்கமாக சுற்றி வரும், இவ்விருவகையாக சுற்றிவரும் இருகிரகங்களில் இராகுவென்னுங் கிரகம், சூரியனுக்கு நேரி லேனும் சந்திரனுக்கு நேரிலேனும் வருங்கால் அவை மங்கலடைந்து மறைவு நீங்கியவுடன் அதிவொளி வாகப் பிரகாசிப்பதியல்பாம். இராகென்னுங் கிரகத்தால் சந்திரன் மறைவுபடுவதை சந்திரகிரகண மென்றும் சூரியன் மறைவுபடுங்கால் சூரியகிராணமென்றுங் கூறுவர். காலக் குறிப்பிட்டுயிவற்றைக் கூறுவதைக்கொண்டே பஞ்சாங்க கணிதம் சிறப்புற்று விளங்குகின்றது. அக்கிரகங்கள் கிரகத்தால் மறைவு படுதலால் மக்களுக்கோர் கேடுமில்லை சுகமுமில்லை என்பதே துணிபு.
அந்நாளை சொல்லிக்கொண்டும் தெற்பை என்னும் புல்லைக்கொடுத்துக் கொண்டும் வருவது ஓர் தந்திரசீவனமென்னப்படும். நமது தேசத்து ஏனவாயரைக்கண்டு இளித்தவாயரேமாற்றி துட்டு பரிப்பதியல்பாம். ஆங்கிலவான சாஸ்திரிகளோ சூரியனும் சந்திரனும் பூமியினால் மறைவு படுகிறதென்று கூறுகின்றார்கள். ஆயினும் அவ்வகைக்காலத்தை முன்னிட்டுக் கூறுங்குறிப்பு எவ்விடத்துங் காண்பதரிதாம். இராகுவென்னுங் கிரகம் இந்த மாதம் இந்த நாள் இந்த திதியில், சூரியனை மறைக்கும் சந்திரனை மறைக்குமென்னுங் காலக் குறிப்பை முன்பே வகுத்து விளக்கும் வழிவகை கண்டு வரைந்து வருகின்றார்கள் அம்முற்காலக் கணிதம் மாறாது சூரிய கிரகணமோ சந்திரகிரணமோ தோன்றுவதைக் காண்கின்றோம். இக்