பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு


இக்கடவுளென்னும் பெயரும் சாமியென்னும் பெயரும் பௌத்தர்களால் வரைந்துள்ளப் பெயர்களேயாம். இப்பெயர்களைக் கொண்டே - நூதன சமயாச்சாரிகள் மதக்கடைப் பரப்பி பட்டிப்புத்தகங்களாம் பொய்ப் புராணங்களை வரைந்து பொருள் பரித்து சீவிக்கின்றார்கள். அவைகள் யாவையுந் தெளிவு பெற விசாரிக்கில் விளங்கிப்போம்.

- -7:45; ஏப்ரல் 15, 1914 -
 

133. காட்டுமிராண்டிகளுக்குக் கூட்டு மிராண்டியாகத் தோன்றிய வேதத்தையே வாசிக்க வுத்திரவில்லா சூத்திரமிராண்டியின் அறிவிப்புப் பத்திரங்கண்டோம்.

பௌத்த சோதிரர்காள் நமது ஆதிவேதமானது சென்னை தத்துவ விசார சங்கத்தோரால் நன்குமதிக்கலுற்று நற்சாட்சிபத்திரம் பெற்றிருப்பதுடன் இலண்டனிலுள்ள வாசித்த நிபுணர்களும் சென்னையிலுள்ளக் கல்வி களஞ்சியங்களுமாகிய பெரியோர்களாலும் ஆமோதிக்கப் பெற்றுலாவு கின்றது. அவற்றைப் பெரும்பாலும் வாங்கி வாசிப்போரெல்லாம் கலைவல்லோரும் இலக்கண வித்துவான்களுமேயாவர் அத்தகைய சிறப்பும் மேம்பாடுற்றுலாவும் புத்தகத்தின்மீது உள்ளுரில் ஓணான் பிடிக்க வலியற்று அயலூரிற்கோனான் பிடிக்கச் சென்றுள்ள சூத்திரமிராண்டிகளால் வேதத்தையே கண்ணினாற் காண விதியற்றவர்களும் அவர்களால் தங்கட் கோவில்களுக்குள் சேர்க்க விடாது துரத்தியடிக்கப்படுங் காட்டுமிராண்டி களுங் கூடிக்குறைகூற முயல்வது கருடனை சுட்டுக்குருவி மறைப்பது போலாம். பௌத்தர்களது இலக் கணோற்பவம் போப்பையருக்குத் தெரியாது. இப் போலிப் புலவர்களுக்கும் விளங்காது. ஆகலின் பர்மா தேசத்தினின்று கூட்டங்கூடி படாடம்பம் ஆடுவோரை சென்னையில் வந்தாடும்படி கூறிவிட்டு நமது சத்தியதன்ம போதத்தை சாந்தத்தோடு பரவச்செய்யும்படி வேண்டுகிறோம். இராஜாங்கத்தார் குடிமதிப்புப் புத்தகத்தில் காட்டுமிராண்டிக ளென்று யாரைக் குறிப்பிட்டெழுதியுள்ளார்கள் என்று வாசித்துணர்வோர் எம்மீது சினங் கொள்ளார் விசாரித்து விலகுவர்.

-7:45; ஏப்ரல் 15, 1914-
 

134. கிறீஸ்துவின் சத்திய மொழி

வினா : ஐயா இப்புதவாரப்பத்திரிகையில் B.M. இராஜரத்தினமென்பவர் புத்தர், மேசேயா, கலிக்கி முதலானோர் மறுபடியும் பூமியில் அவதரிப்பார்களாவென்னு மோர் சங்கையைக் கேட்டிருக்கின்றார் அதற்கு சங்கைத்தெளிவு கூறியுள்ள தாங்கள் அவைகள் யாவும் அஞ்ஞானிகள் கூற்றெனக் கூறிவிட்டீர். இவ்வகைக் கூறியுள்ளத் தாங்கள் மோசேயென்னும் மகாஞானியார் சரித்திரத்தையும் கிறீஸ்துவின் சிறப்பையும் வெகுவாக வரைந்திருக்கின்றீர் அவ்வகை வரைந்துள்ள தாங்களே உலக முடிவில் கிறீஸ்த்து வருவேனென்பதையும் அக்கால மின்னலொளி வீசும் எக்காளந் தொனிக்கும் அனந்தவாசல்களுண்டென்றுங் கூறியவற்றை தாங்கள் நம்பாது நம்புவோரை அஞ்ஞானிகளென்று கூறியுள்ளது ஆட்சரியமாயிருக்கின்றது. ஆதலின் கிறீஸ்த்துவால் கூறிய மொழிகளை நம்புவதா நம்பலாகாதா என்பதை விவரமாக விளக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

B. ஜோசப், பெங்களூர்.

விடை : அன்பரே கிறீஸ்துவின் மொழிகள் யாவும் சத்தியம் சத்தியமேயாம் அவற்றை மறுப்போரொருவருமிராரென்பதே திண்ணம். ஆயினுமம்மொழி களினந்த ரார்த்தமறிந்து பேசுவதே ஞானிகட் செயல், அறியாது பேசுதல் அஞ்ஞானிகட் செயலென்னப்படும். மோசேயென்னும் மகா ஞானியின் சரித்திரமெழுதும்போதே உலக முடிவின் விஷயங்களையும் சிலது வரைந்திருக்கிறோம். அவற்றை தாம் உய்த்துணரவில்லைபோலும் கிறீஸ்த்துவினது சத்திய போத சாராம்ஸத்தை உணரவேண்டில் புத்த தன்மத்தை நன்காராய்ந்த விடத்தே அஃது விளங்குமன்றி ஆராயாவிடத்து விளங்காவாம்.