பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

சூத்திர விதியோடு விளக்குவரேல் அதற்கு மாறுற்ற சூத்திரவிதிகளை விளக்கித் தாங்களும் சுட்டுக்கடிதம் வெளியிடலாம்.

இந்து மதத்திலிருந்தே புத்ததன் மந் தோன்றியதென்பதை உலக சரித்திரம் இன்னபக்கத்தைப் பாருங்களென்றேனும் பூர்வமாய இன்ன சாஸ்திரம் இன்ன பக்கத்தைப் பாருங்களென்றேனும் அனுபவத்திற்குங் காட்சிக்கும் பொருந்தியவைகளீதீதென்றேனும் விளக்குவரேல் பௌத்தர்களாலேயே இந்துவென்னுமொழி தோன்றியுள்ளதை சரித்திர சாஸ்திர அனுபவவாதாரத்துடன் வரைந்து தாங்களும் சுட்டுக்கடிதம் வெளியிடலாம். மற்றும் அரி ஓம் என்பதை அறிவோமென்றும் சங்கரனென்பதை சங்கறனென்றும் நாற்பதென்பதை நார்ப்பதென்றும் உத்தரக்கிரியை என்பதை உத்தறக்கிரியை என்றும் ஐம்பது என்பதற்கு ஐன்பதென்றும் கிராம மென்பதற்கு கிறாமமென்றும் குலநிலானென்பதற்குக் குலமிலானென்றும் வரைவது இன்ன காரண பெயருக்கும் பொருந்தாது காரியப் பெயருக்கும் பொருந்தாதென்றேனும் இன்னவெழுத்திலக்கணத்திற்குப் பொருந்தாது இன்ன சொல்லி லட்சணத்திற்குப் பொருந்தாதென்றேனும் சூத்திரவிதிப்படி பொருள் விளங்க வரைவரேல், தாங்களுமுநிந்து காரணப்பெயர் தோற்றங்களையும் காரிய பெயர் தோற்றங்களையும் மொழி முதற் காரணங்களையும் அதனதன் பொருள்களையுஞ் சூத்திரவிதிப்படி விளங்க விளக்கி சுட்டுக்கடிதம் வெளியிடலாம். அங்ஙனமிராது எழுத்தைப்பார்த்து எழுத்தெழுதுவோரும் சொல்லைப்பார்த்து சொல்லெழுதுவோரும் பொருளைப்பார்த்துப் பொருளெழுதுவோரும் தன் பெயரை மறைத்து வேறு பெயரெழுதுவோரும் தொடரும் வியவகாரம் விட்டு தூஷண மொழிகளைக் கக்குவோருமாய துன்மார்க்கக்கடிதங்களுக்குத் தாங்களும் மாறு கடிதமெழுதுவதாயின் தங்கள் சன்மார்க்க புத்ததன்ம நெறி தவறிப்போம். துன்மார்க்கர் மத்தியில் சன்மார்க்கர்களாகவும் பொய்யர்கள் மத்தியில் மெய்யர்களாகவும் துட்டர்கள் மத்தியில் இட்டர்களாகவுமிருக்க வேண்டுகிறோம். எம்மெ தூஷித்தும் வைதுமுள்ளார்களே என்றாயாசங் கொள்ளற்க. காரியமே கண்ணாமெமக்கு தூஷிப்பும் பூஷிப்பு மொன்றேயாம்.

-7:46; ஏப்ரல் 22, 1914