பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு


அவன் கிறிஸ்துவிலும் ஐக்கியமுற்றவன் எவனோ அவனே கிறிஸ்தவ னென்னும் பெயரைப் பெறுவான் அவ்வகை உள்ளன் பிலாதோர் அரைக்கிறீஸ்த்துவர் களேயாவர். இதிற் பெரும்பாலும் அஞ்ஞான கிறிஸ்தவர்கள் யாரென்பீரேல், பிராமணர் மதத்தை விட்டு கிறிஸ்துமதத்தில் பிரவேசித்தும் மீனுக்கு வாலையும், பாம்புக்குத் தலையையுங் காட்டும் விலாங்கைப் போல் துட்டு கையிலிருக்கும் வரையில் சார் நாங்கள் (காஸ்ட்) கிறிஸ்டியன்ஸ்கள், (காஸ்ட்) செர்வண்ட்ஸ் வேண்டுமென்று பதினோராவது கட்டளை ஏற்படுத் துவார்கள். "பதினோராவது கட்டளையாவது எப்போதும் பொய் சொல்லிக் கொண்டேயிருப்பீர் களாகவென்பதே." கைதுட்டு வரண்டு விட்டாலோ பிரதர் நாமெல்லோருங் கிறிஸ்தவர்கள் ஒரே தாய் தகப்பனிலிருந்து வந்தவர்கள் நமக்குள் சாதிபேதங்கிடையாதென்று கிட்ட நெருங்குவார்கள்.

"இவர்கள் தான் முதற்றர வஞ்ஞானக் கிறிஸ்தவர்களாவர்." இத்தியாதி காரணங்களுக்கும் மூலகாரணம் பாதரி யஞ்ஞானிகளே யாம். அதாவது கிறிஸ்துமதம் ஆதியில் இத்தேசத்திற்கு வந்தபோது யார திற் பிரவேசித்து கிறிஸ்து மதத்தைப் பரவச்செய்தவர்களென்று கண்டுத் தெளியாமல் பாதிரிகளுக்கும் சாதி டம்ப மேற்பட்டு பழையக் கிறிஸ்தவர் களைப் பாழாக்கி விட்டார்கள். இதற்கு சாட்சி பழய கிறிஸ்தவர்களில் நூதனப் பாதிரிகளும் நூதன உபதேசிகளும் தோன்றாமெயேயாம்.

- 1:22; நவம்ப ர் 13, 1907 –

7. பிளேக்

தற்கால மிவ்விந்து தேசத்தில் பிளேக் என்னும் ஓர் ரோகங்கண்டு ஜனங் களைப் பீடிக்கச்செய்வது சகலருக்குந் தெரிந்த விஷயம். ஆயினும் இதைச் சிலர் நூதன வியாதியென்றும் சிலர் புராதன வியாதியென்றுங் கூறுவர். வைத்திய சாஸ்திரங்களின் பாகமாக ஆராய்ச்சிச் செய்யுங்கால் தொன்று தொட்டு கொடுமாறியென வழங்கும் வைசூரி ரோகங்களில் இதையும் ஒன்றாகவே பாவித்தல் வேண்டும். அதாவது மற்ற வைசூரி ரோகங்கள் சுரங்கண்டு தேகமெங்குங் கொப்பளித்துக் காய்ந்து விழுவது சுவாபம். இந்தப் பிளேக்கென்னும் வைசூரி சுரங்கண்டு மேகநீர்கள் யாவுஞ் சேர்ந்து அக்குளி லேனும் துடையின் முன் அரையிலேனும் கழுத்தின் புரப் பள்ளத்தேனுங் கட்டிகளெழுப்பி ஜன்னிகண்டு கொல்லுவது வழக்கமாயிருக் கின்றது. இவ் வகை ரோகங்கள் யாவும் ஓர்வகை சாமளையென்னுங் கிரிமியினால் உண்டாவதென்றே சொல்லல் வேண்டும். பூர்வத்தில் இம்மாறி காணுங்கால் சுரங்கண்டு கண்ட துண்டங்களில் வீக்கமுண்டாகி சிலகால் தேகமுழுமெயும் வீங்கி ஜன்னிகண்டு கொல்லும் பனைமுகிரி யம்மனென வழங்கிவந்தார்கள். தற்காலம் கண்டங்களில் கட்டிகள் எழும்பிக் கொல்லுகின்றது. பூர்வகாலத்திலும் பனைமுகிரியம்மன் கண்டவர்களில் நூற்றிற்கு ஐந்து பேர் தேறுவது கஷ்டம். அதுபோலவே இப்பிளேக் கென்னும் ரோகமுங் காணுகின்றது. காலத்திற்குக் காலம் மாறுதலன்றி ரோகம் பனை முகிரியென்றே கூறலாம்.

வைசூரி நூல் – 80 பனைமுகிரி

பகருவோமிவற்றி னிடகுணத்தைக் கேளு பரிவாகபனைமுகிரி பரிட்சைதன்னை
நிகரான காய்ச்சலது மிதமாய் காணும் நேரானவுடல்கடுக்குங் கண்சிவக்கும்
பகவடுவை கண்டதுண்டம் வீக்கங்காணும் பரிவான பெரும்பாடு காணுங்கண்டீர்
செகமீதி லிதினாலே பித்தெடுக்குந் தேகத்தில் சன்னியது சேருந்தானே

இத்தகையக் கொடுமாறி தேசங்களிற் காணுங்கால் கண்ணுக்குத் தோன்றா ஓர்வகை விஷப்புழுக்களினால் உண்டாகும் ரோகமென்று கருதி ஜாக்கிரதை யிலிருத்தல் வேண்டும்.

ஒவ்வொரு குடிகளுங் கப்புமஞ்சளை தூள் செய்து வீடுகளின் வாயற் படிகளில் தூவி வைப்பதுடன் படுக்கும் பாயல்களினடியிலும் தூவல் வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை தூவிக்கொண்டு வந்தால் போதும்.

எள்னெய்யில் தலை முழுகுவோர் தேகமுழுமெயுந் தேய்த்துக்கொண்டு முழுகுவதினால் விஷப்புழுக்கள் அணுகாது. கற்பூரப் புகையும் மட்டிப்பால்