பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /11


ஆனால் தூத்துக்குடியிலுந் திருநெல்வேலியிலும் ஏற்படுத்தியுள்ள தண்ட போலீசின் சிலவோ அக்குடிகளே கொடுத்துத்தீர வேண்டும். பஞ்சகாலக் கஷ்டத்துடன் பணக்கஷ்டமும் சுதேசிகளேற் படுத்திவிட்டது பரிதாபம் பரிதாபமேயாம்.

-1.41; மார்ச் 25, 1908

18. புத்தமதக் கண்டனமோ?

புத்தம் - பாலி - மகடபாஷா; சத்தியம் - சமஸ்கிருதம் - சகடபாஷா , மெய் - தமிழ் - திராவிட பாஷா. பாலியில் புத்தமென்றும், சமஸ்கிருதத்தில் சத்தியமென்றும், தமிழில் மெய்யென்றும் வழங்கு மொழி பேதங்களையும் அம்மொழியின் அந்தரார்த்தங்களையு மறியா அன்பர்கள் மெய்யென்னு மொழியுடன் மதமென்னுந் தொடர்மொழிக் கூட்டி மெய்மத கண்டனங் கூறியுள்ளாரென்னுங் குழர்மொழிகண்டு குந்நகைக்கொண்டோம். அஃதேனென்பீரல்.

விவேக சிந்தாமணி

பொல்லார்க்குக் கல்விவரில் கர்வமுண்டா மதனோடு பொருளுஞ் செர்ந்தால் சொல்லாதுஞ்சொல்லவைக்கும் சொற்சென்றால் குடிகெடுக்கத் துணிவர்கண்டாய் நல்லோர்க்கிம் மூன்றுகுண முண்டாகி லருளதிக ஞனமுண்டாய்
எல்லோர்க்கு முபகார ராயிருந்து பரகதியை யெய்துவாரே

என்னும் மேன்மக்கண் முதுமொழிக்கிணங்க நூதனச் செல்வம் பெற்ற நுக்கர்களைப்போல் புதினக் கல்விகற்ற பொய்மொழிப்புலவர்கள் கற்றக் கல்வியளவு நில்லாது மெய்மதக்கண்டனங் கூறியதும் மெய்ஞ்ஞானிகளைத் தூறியதுமாகிய துற்செயற்கீடாய் திக்கற்ற தீட்டு பிணமாய் மக்களற்று மயானங்கொண்டு சென்ற புண்ணிய பலன் கண்ட போதகர்கள் தங்களா சிரியரடைந்த பலனிலு மதிகபல னடைவான் வேண்டி, அஞ்ஞானிகளை ஏற்று மெய்ஞ்ஞானிகளைத் தூற்று மவாக்கொண்டலை கின்றனர்.

குறுந்திரட்டு

மெய்யை மெய்யென்றறியாத மூகைகள் பொய்யை மெய்யென்று போற்றித்திரிவர்காண் மெய்யை மெய்யென்றறிந்த மெய்ஞ்ஞானிகள்
துய்யஞானத் துணைவர்களாவரே.

இத்தகையத் தூற்றுந் தீவினைக்கீடாய் ஏற்றத் தீவினைச் சுடும். அன்பர் காள், புத்தமதத்தோர் ஒழுக்கம் யாதென்றும் புத்த மதத்தைக் கண்டிப்பவர் யாவரென்றும் அக்கண்டனத்தைக்கண்டு களிப்பவரின்னாரென்றும் அடியிற் குறித்துள்ள அநுபவத்தாற் கண்டுக்கொள்வீர்களாக.

க-வது, புத்தமதத்தோர் ஒழுக்கம் பொய்யை
யகற்றி வாழவேண்டுமென்பதேயாம்
பொய்யை மெய்யாகப் புலம்பித்திரிவோர்
அதனைக் கணடிக்க யேற்படுவர்.

உ-வது, புத்தமதத்தோர் ஒழுக்கம் களவைய
கற்றி வாழவேண்டுமென்பதேயாம்
களவால் பொருள் சேகரித்து ஊராரை
வஞ்சித்து சீவிப்போர் அதனைக் கண்டிக்க யேற்படுவர்

ங-வது, புத்த மதத்தோர் ஒழுக்கம் சீவர்களின் மீது அன்பு பாராட்டி
ஆதரிக்கவேண்டு மென்பதேயாம்.
சருவசீவர்களையுங் கொன்றுதின்று சீவிப்
போர் அதனைக் கண்டிக்க யேற்படுவர்.

ச-வது, புத்தமதத்தோர் ஒழுக்கம் அன்னியர்
தாரத்தை தாய்போல் கருதவேண்டுமென்பதேயாம்.
அன்னியர் தாரத்தைத் தன் தாரம்போற்
கருதி அவன் குடும்பத்தை யழிப்போர்
அதனைக் கண்டிக்க யேற்படுவர்.

ரு-வது, புத்தமதத்தோர் ஒழுக்கம் மக்கள்
மதியை மயக்கும் லாகிரிவஸ்துவை யகற்றவேண்டுமென்பதேயாம்.
சதா லாகிரி யருந்தித் திரிவோர் அதனைக்கண்டிக்க முயலுவர்.