பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

யேயன்றி இப் புகையிலையன்று. தற்கால வழங்கும் புகையிலையோவென்னில் அக்பர் என்னும் ஓர் மகமதிய பெரியோன் காலத்தில் கண்டுபிடித்து நாளது வரையில் வழங்கி வருகிறார்கள். அதாவது அக்பர் காலத்தில் அவரது நாட்டில் உவாந்தி பேதிகண்டு குடிகள் அல்லலடைந்த போது தற்காலம் வழங்கும் புகையிலையின் செடியைக் கொளித்தி புகையவிட்டதாகவும் அப்புகைப் பரவி நாடெங்கும் கண்டுள்ள உவாந்தி பேதி தணிந்துவிட்டதாகவும் அதையே அனுபவத்திற்குக் கொண்டு வந்தவர்கள் விஷபேதிகண்ட பிரேதங்கள் சுடலைக்குக் கொண்டுபோம் போது கூடவருகிறவர்களுக்கு அவ்வியாதி தொடராவண்ணம் புகையிலை கொடுத்து சுருட்டி புகைபிடிக்கும்படி செய்வதும் சிலர் சுருட்டே கொடுத்து பிடிக்கச் செய்ததும் வழக்கமாயிருந்ததாம். அதை அநுசரித்த வழக்கத்தை தற்காலம் எந்த நோய் கண்டிருந்த காலத்திலும் அநுசரித்து வருகின்றார்கள்.

- 4:5; சூலை 13, 1910 –


50. ஏழைகளின் சுகத்தை நாடுதலே கனவான்களுக்கு சுகந்தரும்

ஓர் தேசத்தில் ஏழைக்குடிகள் வாசஞ்செய்யும் இடங்களில் நிலசுத்த மின்றி நீர்வசதி குன்றியிருக்குமாயின் குடிகளுக்கு எவ்விதத்தேனும் விஷரோ கங்கட் பரவி வாதைப்படுத்துமென்பது திண்ணம்.

அத்தகைய ரோகபீடித விஷக்காற்றானது சகல சுகமும் பெற்றுள்ளக் கனவான்களையும் விடப்போகிறதில்லை. ஆதலின் கனவான்கள் தங்களது சுத்திகரிப்பை முந்தி தேடுவதுடன் ஏழைகளின் சுத்தத்தை முந்தி நோக்குவதே இதமாகும்.

ஈதன்றி கனவான்கள் சகலசுகமும் அனுபவிப்பதற்கு ஏழைகள் ஏவலே மிக்க ஆதாரமாகும். அத்தகைய ஏழைகளை அரைவயிற்றுக்கஞ்சேனும் சரி வரக்கொடாது துன்பப்படுத்தி ஏவல் வாங்குவதாயின் ஏவலும் வலுபெருமோ தாங்களும் சுகமடைவர்களோ, ஒருக்காலுமில்லை. ஆதலின் ஏழைகளுக்குப் பசிதீர வன்னமளித்து ஏவல்கொள்ளுவதே செய்தொழில் விருத்தியும் கனவான்களுக்கு சுகத்தையுந் தரும்.

கனவான்களெனத் தோன்றியும் கருணையும் பட்சமுமற்றவர்களாய் தங்கள் சுகத்தையும் தங்கள் அந்தஸ்தையும் பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு நீடித்த வாழ்க்கையும் நீடித்த சுகமும் நிலையாவென்பது அனுபவமாகும். உலகத்திற் கனவான்களெனத் தோன்றுவது ஓர் புண்ணிய பலனாகும். அத்தகையப் புண்ணியத்தைக் கனவான்களாகத் தோன்றியப்பின்னரும் பெருக்கிக்கொண்டே வருவார்களாயின் மேலுமேலும் சுக வாழ்க்கைப் பெறுவார்கள்.

அங்ஙனமின்றி சொற்பப் புண்ணிய வசத்தால் பொருள் கிடைத்தும் அப்பொருளைப் புண்ணிய வசத்திற் செலவிடாது ஏழைகளை வஞ்சிப்பதாயின் உள்ளப்பொருளும் அழிந்து கனவான்கள் என்னும் பெயரு மொழிந்து சுகக்குறைவுண்டாம். சுகக்குறைவு நேராது என்றென்றும் சுகத்தை விரும்புவோர் தங்கள் கண்கள் முன்னிலையிற் காணும் ஏழைகளின் சீரையும் சுகத்தையும் கருதல் வேண்டும்.

ஏழைகளை இன்னும் ஏழைகளாகக் கெடுத்து, சீரழிக்க முயல்கின்ற வர்கள் பின் பலனை அவரவர்கள் சந்ததிகளைக்கொண்டே தெரிந்துக் கொள்ளலாம். அவரவர்கள் செய்துவரும் நற்கருமத்தால் நல்லசுகம் பெறுவர். துற்கருமத்தால் கெட்ட பலன் பெறுவர்.

தாங்களே கனவான்களாக வாழ்கவேண்டும் ஏனையோர் சுகயீன மடையவேண்டுமென்று எண்ணுவோரும், தாங்களே உயர்ந்த சாதியென்று சொல்லிக்கொண்டு வாழ்தல் வேண்டும். ஏனையோரெல்லாம் தாழ்ந்த சாதியாகத் தாழவேண்டுமென்று எண்ணுவோரும் கூடிய சீக்கிரம் தாங் களெண்ணும் தாழ்ந்த நிலைக்கே வந்து சேருவார்கள் ஆதலின் “எண்ண மெல்லாம் பழகாமெயாலே” எனும் பழமொழிக்கிணங்க எண்ணியெண்ணி ஏழைகளைக் கெடுத்தும், லஞ்சப் பரிமுதல்வாங்க அடுத்தும் கனவான்களென வெளி தோன்றுவோர் ஒருக்காலும் சுகச்சீர் பெறார்களென்பது சாத்தியமாகவும்,