பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு / 41


ஞானக்கும்மி

உச்சிக்கு நேரே உண்ணாவிற்கு மேல் நிதம் / வைத்த விளக்கு யெரியுதடி
அச்சுள்ள விளக் கேவாலையடி / அவியாம லெரியுது ஞானப்பெண்ணே

அவன் மரணத்தை ஜெயித்து பிறவி துக்கத்தை ஒழிக்காமல் மரணத்திற்காளாகி இழிவடைந்தபடியால் அப்பிரேதத்தை வீட்டைவிட் டெடுத்துப் போம் போது சாணத்தைக் கரைத்துத் துளிர்த்துக்கொண்டே போய் அச்சட்டியை உடைப்பது வழக்கமாகும். இதை அநுசரித்தே

இடைகாடர் - "ஆணவகாமிய போக்கின் அல்லறுத்து, சாணத்துளிர்காணாவழி, சாருங்கோனே"

என்றுங் கூறியிருக்கின்றார். அவன் மரணத்தை ஜெயிக்காது பிறவிக்குள்ளாகி அவன் புசிப்புக்காம் அரிசியும் நீரும் விடாது கண்டு வாய்க்கரிசியிடுவதும், அப்பிரேதத்தின் கூடச்சென்றவர்கள் சமாதியடைந் தானென்னும் புகழுக்குப்போகாமல் இறந்தானென்னும் இகழ்வுக்குப் போனபடியால் வீடு சென்றவுடன் சிரசிற்கு நீர்விட்டுக்கொள்ளுவது வழக்க மாகும். இகழ்வுக்கென்னு மொழியே இழிவென மறுவி இழிவுக்குப்போ னோமென வழங்கி வருகின்றார்கள்.

பிரேதத்துடன் கோழிக்குஞ்சைக் கட்டுவது புத்த தன்மத்தைச் சாராவாம். காரணம், ஏதோ ஒன்றைக் கண்டு பயந்தவனுக்கு வேப்பிலையடித்து ஒன்றை சுற்றிப்போட்டால் பயந்தவன் மனோபிராந்தி நீக்கி சுகமடைவது போல் சனிவாரம் மரணமடைந்தால் சனிப்பிணங் கூடவே தொடருமென்னும் மொழியிலுண்டாய பயத்தை நீக்கிக்கொள்ளுவதற்கு உயிருக்குயிராகக் கோழிக்குஞ்சைக் கட்டிவிட்டால் தோஷம் நீங்குமென்னும் கட்டுக்கதையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

- 4:17; அக்டோபர் 5, 1910 –

57. கோலார் தன்மப் பிரியர்களே

அறிவிலிகட் செயலை நோக்காதீர்கள் அறிவிலிகள் வாக்கைக் கேளாதீர்கள் காரணம், "கட்டுப்பட்டாலும் கவரிமான் மயிரால் கட்டுப்படல் வேண்டும், குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டு மென்றும்" "வெகுமானமாகிலும் அவமானமாகிலும் மேன்மெயோர் செய்யி லழகாம்" என்னும் முதுமொழிகளைக் கேட்டும் வாசித்துமிருப்பீர்கள். ஆதலின் அறிவிலிகட் செயலையும் அறிவிலிகள் வாக்கையும் ஒருபொருளாகக் கருதவேண்டாமென்று வரைந்திருக்கின்றோம். மாணிக்கத்தின் ஒளி குருடனுக்கும், ஞானபோதத்தின் மொழி செவிடனுக்கும் விளங்குமோ ஒருக்காலும் விளங்காது. இரண்டு வாரத்திற்கு முன் கனந்தங்கிய பம்பாய்தேச கவர்னரவர்கள் அவ்விடத்துக் குடிகளை நோக்கி புத்தபிரான் போதித்துள்ள நீதிகளைப்பு கட்டி சீர்பெற வேண்டிய விதிகளை அருளியிருக்கின்றார்.

அத்தகைய விவேக மிகுத்தோரும், மேதாவியோருமானவரின் வாக்கினால் புத்தரது சிறப்பும், அவரது தன்ம போத மகத்துவமும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்குகிறதன்றோ. அத்தகைய மேலான, மகத்துவமும், உலக சீர்திருத்த குருவும், உலகிலுள்ள விவேகமிகுத்தோர் கொண்டாடும் மகா ஞானியுமாகிய சற்குருவை விவேகமில்லா முழு மோழைகள் தூஷிப்பார்களாயின் அவர்களது துன்மொழியை தன்மப் பிரியர்களும், சத்தியதன்மத்தை சிரமேற்கொண்டுலவும் மெய்ப்புலவர்களும் மதிக்கப் போமோ, மதிக்கலாகாது.

காரணம், புத்த பிரானையும், அவரது தன்மத்தையும் தூஷிப்பவர்கள் யாரோ அவர்களே பஞ்சபாதகர்கள், அத்தகைய பஞ்சபாதகர்களின் மொழிகளை செவிகளிலேற்கவும் போகாது. பஞ்சபாதகர் தரிசனமு முதவாது, அவர்கள் பரிசமும் படலாகாது. ஏனென்பீரேல், புத்தபிரான் மனுக்களை நோக்கி அன்பர்களே, உங்கள் மதியை கெடுக்கும் மதுவைக் குடிக்காதீர்கள் குடித்தால் குடிகெடுவீர்களென்று போதித்திருக்கின்றார். அம்மொழியைக் கேட்கும் சதா குடியன் புத்தரையும் அவரது தன்மத்தையும் தூஷிப்பானா பூஷிப்பானா தூஷித்தே திரிவான். அவரது தன்மத்தை சிரமேற்கொண்டு நடப்பவர்களையும்