பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /55

விடுத்திருக்கின்றார். அத்தகைய நித்திய நிலைக்கே நான்கு வகை சத்தியமென்றும், நான்கு வாய்மெயென்றும், நான்கு மெய்வாக்கென்றும் மொழிந்துள்ளார்கள். இத்தகைய நான்குவகைத் துக்கங்களே மக்களை மாளாத்துக்கத்தில் துன்புறச்செய்கிறதும் இந்நான்கு துக்கங்களை ஜெயித் தலையே மக்களின் மாளா சுகத்திலாழ்த்தி இன்புறச்செய்கிறதுமாகிய செயல்கொண்டே சித்தார்த்தி சக்கிரவர்த்தி (ஓர் வரி தெளிவில்லை) ஆதிபகவனென்றும், ஆதிமூல மென்றும், ஆதிகடவுளென்றுங் கொண்டாடியதுடன் நாளதுவரையில் அவருட்கார்ந்து நிருவாணம்பெற்ற அரசமரத்தினது அன்பின் மிகுதியால் எங்கெங்கு தங்கள் கண்களிற் காணும் அரசமரங்கள் யாவையும் அன்புறத் தொழுதுவருகின்றார்கள்.
இத்தகைய நான்குவகைத் துக்கத்தை அறியாதவர்களும், அதனது சாதனங்களிற் பழகாதவர்களுமாகி சோம்பேறிகள், துக்கம், துக்கோற்பவம், துக்கோற்பவமார்க்கம், துக்கநிவாரணமே நான்கு வாய்மெயெனக் கூறு வார்கள். அஃது வாய்மெகளைக் கண்டறிரியுஞ் செயல்களேயன்றி வாய் மெயாகாவாம்.
வாய்மெயாவது பிறப்பென்பது ஒருவாய்மெய் எனப்படும். அதனைக் கண்டறிந்து ஜெயிப்பதே செயலாகும். அதாவது பிறப்பே துக்கம் அப் பிறப்பிற்கு மூலமாம் அவாவே துக்கோற்பவம், அவாவைக் கண்டிக்க முயல்வதே துக்கோற்பவ மார்க்கம். அவாவாம் சகல பற்றுக்களையும் அறுத்தலையே துக்க நிவாரணம் எனப்படும். இதுபோல் பிணியின் துக்கத்தையும், மூப்பின் துக்கத்தையும், மரண துக்கத்தையுங்கண்டு ஜெயம் பெறுதலே புத்ததன்மத்தில் பெருங்கருத்தாகும். அங்ஙனமிராது கூறுங் கருத்துகள் யாவும் அபுத்ததன் மக் கருத்துக்களாதலின் அன்னோர் மொழி களைக் கேளாமலும் அவரது கூட்டங்களை சேராமலும் இருத்தலே விசாரிணைப்புருஷர்களுக்கழகாம்.

- 5:2: சூன் 21, 1911 -
 

74. புத்ததன்மத்தின் ஆதி சுருக்கமும் அந்த சுருக்கமும்

சித்தார்த்தி சக்கிரவர்த்தி திருமகன் ஊர்வலம் வருங்கால் பிணியாளன் துக்கத்தையும், மூப்பின் துக்கத்தையும், மரண துக்கத்தையுங் கண்டு சகியாது இல்லந்திரும்பி அத்தகைய துக்கங்களுக்காய நிவர்த்திகள் ஏதேனுமுண்டோ வென விசாரித்தும் தனதரச அங்கத்தோர்களால் விளங்காது அத்துக்க நிவர்த்தியை வெளியிற் சென்றேனுங் கண்டறியலாமென்னும் வைராக்கியத் தினால் தனதரிய சக்கிரவர்த்தி பீடத்தையும், இன்பிற்குரிய மனைவியையும், அன்பிற்குரிய மைந்தனையும் இரு பத்தியோராவது வயதில் விடுத்து பலதேச வன வனாந்திரங்களிற் சென்று விசாரித்தும் அந்த துக்கங்களுக்கு வழி சொல்பவர் ஒருவருங் கிடையாது, திகைத்துத் தன்னிற்றானே உணரு முயற்சி யினின்று தனக்குள்ள மனம் ஈதென்றும், அறிவு ஈதென்றும், இவற்றிற் காதார பஞ்சஸ்கந்தங்கள் ஈதென்றுங் கண்டுணர்ந்து க்ஷணத்திற்கு க்ஷணம் தோன்றி தோன்றி மறக்கும் மனதைப்போலவே உலகத்தின் சகல தோற்றங் களும் மாறிமாறி மறைந்து வருகிறதென்றுணர்ந்து கல்லாலமரத்தடியில் வீற்று தனதாராய்ச்சியில் எண்ணி எண்ணி மறக்கு மனதை மறக்கவிடாமலும், தூங்கி தூங்கி விழிக்குஞ்செயலைத் தூங்கவிடாமலும் உலகபற்றில் தாவிதாவி பற்றுமாசையிற் பற்றவிடாமலும், உள்ளும் புறம்பும் ஓடும் மூச்சை தாயின் வயிற்றுள் கட்டுண்ட குழவிபோல் ஓடவிடாமலும் நின்று இராகத் துவேஷமோக மனமாசகன்றவிடத்து மாரனென்னுங் காமத்தையும், காலனென்னும் மரணத்தையுஞ் செயித்து நிருவாணமென்னும் தேவகதி பெற்று சருவமும் தன்னுள் தோன்றுதலால் சகலமுமுணர்ந்த முநிவனென்றும், யாதாமொரு குருவுமின்றி பேரின்ப உணர்வை தன்னிற்றானே கண்டபடியால் ஓதாமல் உணர்ந்த முநிவனென்றும் தோன்றி கெடும் பொய்யாயப் பொருட்கள் யாவையுங் கழற்றி என்றுங் கெடா மெய்ப்பொருளாகி ததாகதமுற்றபோது புத்தனென்னும் பெயரைப்பெற்று களங்கமற்றக் கண்ணாடியாம் ஆருடத்தி னிலைத்து சீவர்கள் மாறிமாறி பிறப்பதினா லுண்டாந் துக்கத்தையுங் கண்டறிந்து