பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /57

விடை : புதுப்பேட்டை அன்பர்களே, தாங்கள் வினவிய சங்கைகள் யாவும் பூர்வச் செயல்களேயாம். மனிதன் பிணமாயப்பின் செய்யுஞ் செய்கைகள் யாவும் பயனில்லை யென்பது புத்ததன்மத் துணிபு.


"நார்த்தொடு' தீர்க்கிலென் நன்றாய் தடக்கிலென் / பார்த்துழி பெய்யுலென் பல்லோர் பழிக்கிலென்
தோர்ப்பையினின்று தொழுதுர செய்தூட்டுங் கூத்தன் புரப்பட்டக்கால்

பிணமாயப்பின் நாரினாற் பிரிகட்டி தெருவிலிழுத்தாலென்ன, பாடை கட்டி புட்பஞ் சோடித்து அலங்கிருதஞ் செய்தாலென்ன, பலர் புகழ்ந்து கொண்டாடினாலென்ன, பல ரிகழ்ந்து தூற்றினாலென்ன வென்று கூறுவது பௌத்த சங்கத்தோர்களின் தெளிவாயினும்;
மனிதன் இறப்பது இழிவு சகலபற்றுக்களுமற்று பரிநிருவாணமடைவது மகிழ்வென்பதை விளக்கி உச்சாக முண்டாக்குமாறு விவேகமிகுத்த உபாசகர்கள் சிலக்கிரியைகளை வகுத்து வைத்திருக்கின்றார்கள். அதாவது மனிதன் ஆன்மனென்னும் புருஷனென உலாவித் திரியுமளவும் மனமென்னுந் தீபம் சிரசி லொளிர்ந்துக்கொண்டிருப்பதியல்பாம்.

ஞானக்கும்மி

உச்சிக்குநேரே உண்ணாவுக்குமேல் நிதம் / வைச்சவிளக்கு யெரியுதடி
அச்சுள்ள விளக்கே வாலையடி / அவியாம லெரியுது ஞானப்பெண்ணே.

அத்தகைய உள்ளொளி மறைந்து சத்துப்போனான் இறந்தானெனும் இருளடைந்துப்போனான் சகலத்தையு மறந்தானென்னும் மரணமடைந்தா னென்றவுடன் உச்சியிலிருந்த சோதிக்கு பதிலாக பிணத்தின் சிரசண்டை தீபத்தை ஏற்றி வைக்கும்படிச் செய்தும் பாசபந்தக் கட்டுக்கள் விடாது மரணமடைந்த படியால் பெருவிரல்களை சேர்த்துக் கட்டும்படிச் செய்து வருவதும் வழக்கமாகும். இதை அநுசரித்தே தாயுமானவரும் தனது பாடலில் பரி நிருவாணமடைதற்கு "நிகள பந்தக் கட்டவிழ்ப் பாரே" யென்றும் பாடியிருக்கின்றார்.
பிரேதத்தை எடுத்துச்சென்று தகனஞ்செய்வதே பூர்வ வழக்க மாயிருந்தது. ஆயினும் அக்காலத்தில் இன்னயிடந்தான் சுடலைக்குரிய பூமியென்று குறிப்பிடாமல் எங்கெங்கு வெளியாய பூமிகளுண்டோ அங்கங்கு பிரேதத்தைக் கொண்டுபோய் தகனஞ்செய்வது வழக்கம். செல்லுமிடங்களில் தற்கால மாச்சிசுமிறாது நெருப்புங் கிடையாததால் வீட்டிலேயே நெருப்பைக் கனயவைத்து ஓர் சட்டியிலிட்டு கயிறுகட்டி எடுத்துப்போய் கட்டை வரட்டி அடுக்கி இறந்தோன் மைந்தனையேனும் உரிய பந்துக்களையேனும் விட்டு தீ மூட்டு முன்பு பிறவியை ஜெயிக்காது மரணத்திற்குள்ளாயபடியால் அரிசியும் நீரும் உன்னைவிட்டகலவில்லை என்னும் இழிமொழிகூறி அரிசியிட்டு தணல் மூட்டிவிட்டு இல்லஞ்சேர்ந்த மறுநாள் தகனஞ்செய்த தேகத்தை தண்ணீர்விட்டணைக்காது பாலால் அவிக்கவேண்டுமென்னும் அன்பு கொண்டு பாலினாலும் இளநீரினாலும் தகனகுண்டத்தை அவித்து அஸ்தி களைப்பொருக்கி சமுத்திராதிலேனும் பிரேதக் கட்டிடமேனுங் கட்டிவிடுவது வழக்கம்.
மற்றும் சங்கத்தைச் சேர்ந்த சமண முநிவர்களுள் அரசர்களாயிருப்பினும், விவேகமிகுத்தக் குடி களாயிருப்பினும் (சம ஆதி) சமாதி யென்னும் ஆதியாம் புத்தபிரானுக்கு சமாதையாய் உச்சியின் வழியே சோதி மயமாய் மாற்றிப்பிறக்குப் பரிநிருவாணமடைவதற்காய் வீட்டிற்குங் காட்டிற் கும் மத்தியிலுள்ளத் தங்களது பூமியில் கல்லறையொன்று கட்டி கற்பூரமிட்டு சங்கத்தவர்களும் ஊரிலுள்ள பெரியோர்களும், சம ஆதி அடையப் போகின்றவர்களும் இவ்விடஞ்சென்று கல்லறைக்குள் இரங்கியவுடன் மற்றோர் சதுரக்கல்லினால் மேலே மூடி மணலால் மறைத்துவிட்டு அவரவர் களில்லஞ்சேர்ந்து பதினைந்தாம் நாள் சங்கத்தோரும் உபாசகர்களும் யாதொரு வாகனமின்றி மேறை மரியாதையுடன் அவ்விடம் நடந்து செல்லுவதை நடப்பென்றும், அன்றிரவு முழுவதும் அவ்விடம் விழித்திருந்து ஞான விசாரிணைப்புரிவதை சமாதிபோகமென்றும், விடியகாலத்திலெழுந்து