பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /65 பகலற்ற வெளியினின்று என்றுமழியா நித்தியானந்த வாழ்க்கையைப் பெற்று தன்மட்டிலும் சுகிக்காது உலகில் தோன்றியுள்ள சகல மக்களும் மாறாப் பிறவியிற் சுழன்று சதா துக்கத்தில் ஆழ்ந்து கெடாது பிறவியற்று சதா சுகத்தில் லயிக்கவேண்டுமென்னும் அன்பின் மிகுதியால் உலகெங்கும் சுற்றி சங்கங்களை நாட்டிதான் கண்டுதெளிந்த நான்கு வாய்மெகளாம் சத்தியதன்மத்தையூட்டி கடைத்தேறச் செய்து வைத்தார். அதே சத்திய தன்மத்தைதான் உலகிலுள்ள சகல தத்துவஞானிகளும் அனுசரித்து துக்கத்தை ஒழித்து சதா சுகப்பேற்றை அடைந்து வருகின்றார்கள். இவ்வகைத் தன்னைத்தானுணர்ந்து தனுகரண புவன போகப் பற்றுக் களற்று பிறப்புப் பிணி, மூப்பு, சாக்காட்டின் துக்கங்களை ஒழித்து ததாகத் நிலைப் பெற்றவர்களையே மகடபாஷையில் புத்தரென்றும், திராவிட பாஷையில் மெய்யரென்றும் கூறப்படும். இத்தகைய சத்தியதன்மத்தை வெளிவந்து போதிப்பவர்கள் கிஞ்சித்தேனுந் தங்கள் தத்துவச்செயலை ஆராய்ந்து போதிப்பதே அழகாம். அங்ஙனந் தங்கள் மனோதத்துவங்களை ஆராய்வதை விடுத்து தோன்றி தோன்றி கெடும் புறத்தத்துவ ஆராய்ச்சி செய்துவிட்டு யாங்களும் புத்தன்மங் கூறப்போகின்றோ மென்பது முற்றும் பிசகேயாம். சத்தியத்தைப் போதிக்க வந்தவர்கள் சத்திய பீடத்தினின்று தங்களுக்குத் தெரியும் வரையில் தெரியுமென்றும் தெரியாதவற்றைத் தெரியாதென்றுங் கூறுவதே அழகு. தெரியாதவற்றைத் தெரிந்தது போலும், காணாதவற்றைக் கண்டது போலுங் கூறுவது அசத்தியமும், அபுத்தமுமாதலின் அவ்வகை வெளி தோன்றாதிருக்க வேண்டுகிறோம். - 5:11 ; ஆகஸ்ட் 23, 1911 - 85. பேய நிலையும் தெய்வ நிலையும் ஜோலார்பதி சி. முத்துக்குமாரசாமி பிள்ளை , ப.சு.யோ. நாதமுனி உபாத்தியாயர், டி.ஜே. தீர்த்தகிரி உபாத்தியாயர் மூவருங்கூடி எழுதியுள்ள சங்கைக் கடிதத்தைக்கண்டு ஆனந்தமுற்றாம். ஆயினும் சில மதஸ்தர்கள் அக்கடிதத்தைக் கண்டவுடன் அவர்கள் அஞ்ஞானத்தால் சீரிச் சினந்து வைய ஆரம்பிப்பார்களன்றி அதன் விசாரிணை நிலையை உணர மாட்டார்கள். காரணமோவென்னில் வேதமுமில்லை, விவேகமுமில்லை, விதரணையுமில்லை யென்னும் மிருகத்துக் கொப்பானவர் களாதலின் தூஷிப்பதும் புறங்கூறுவதும் வைவதுமே அவர்கட்செயலாயிருத்தலின் பராயர் மதக்கருத்துகளைச் சுட்டிக்காட்டாது தங்களுக்குள்ள சங்கைகளை மட்டிலும் இவ்விடம் விளக்குகின்றோம். அதாவது பௌத்த மந்திரவாதிகளுள் மக்கட்செயலைச் பேயநிலை யென்றும், தெய்வநிலை என்றும் இருவகுப்பாக வகுத்திருக்கின்றார் கள். 1 வது, ஓர் மனிதன் நல்லூக்கம், நற்காட்சி, நற்கடைபிடி, நல்லமதியினின்று பேராசை ஒழித்து மனமாசு கழுவி நிருவாணத்திற்கு வருவானாயின் அவனை தெய்வநிலை அடைந்தோனென்றும்; துன்முயற்சி,துற்காட்சி, துற்கடைபிடியினின்று பேராசையால் பலப்பெயர் பொருட்களை வவ்வி லோபநிலையுற்று மடிவானாயின் அவனைப் பேயநிலையடைந்தோனென்றும் வகுத்துள்ளார்கள். துற்செயல் யாவு மோருருவாகத் திரண்ட நிலைக்குப் பேயநிலையென்றும், நற்செயல் யாவு மோருருவாகத் திரண்டநிலைக்கு தெய்வநிலை என்றும் கூறப்படும். இத்தகையப் பேயானது ஆதிகடவுளையும் ஏமாற்றி மற்றுமோர் கடவுளுடன் கூத்தாடியதென்னில், அதை பேயர்கள் கதையையொத்ததேயன்றி நியாயர்கள் கதையோ டொவ்வாத காரணம் நியாயரென்னும் தெய்வநிலைப் பெற்றவர்களுடன் பேயநிலை அணுகியதென்னில் தெய்வநிலை என்னும் பெயர் பொருந்தவே பொருந்தாவாம். பொன்னுடன் தரா கலந்தவுடன் பொன்னென்னும்