பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அயோத்தியா காண்ட ஆழ் கடல் () 21 இப்பொழுதே பகர்ந்திடு தயரதன் கைகேயியிடம் கூறுகிறான். நீ வரம் கேட்க இவ்வளவு மயங்க வேண்டியதில்லையே. வருத்தமோதயக்கமோ வேண்டா. இப்பொழுதே கேள்- உடனே தருவேன்- என்கிறான்: வரம்கொள இத்துணை மம்மர் அல்லல் எய்தி இரங்கிட வேண்டுவ தில்லை ஈவேன் என்பால் பரம்கெட இப்பொழுதே பகர்ந்திடு என்றான் உரம்கொள் மனத்தவள் வஞ்சம் ஓர்கிலா தான் (13). இப்போதே கேள்- தருகிறேன்- என்றானேஆனால் உடனே தரக்கூடிய வரமாக அவள் கேட்க வில்லையே- உடனே தயரதன் ஒத்துக் கொள்ள வில்லையே! வண்மைக் கேகயன் மான் இராமனைக் காட்டிற்கு அனுப்ப வேண்டா எனத் தயரதன் கைகேயியிடம் கெஞ்சுகிறான். பெண்ணே! எதையும் ஈயும் வள்ளலாகிய கேகயன் மகளே! நீ என் கண்ணை வேண்டினும் தருவேன்- மேற் கொண்டு என் உயிரையே கேட்கினும் ஈவேன். மண் ஆட்சியைபரதனுக்கு ஆட்சியை வேண்டுமானால் பெற்றுக்கொள்மற்ற இன்னொன்றையும் மட்டும் மறந்துவிடுஎன்கிறான். கண்ணே வேண்டும் என்னினும் ஈயக்கடவேன் என் உண்ணேர் ஆவி வேண்டினும் இன்றே உணதன்றோ பெண்ணே வண்மைக் கேகயன் மானே பெறுவாயேல் மண்ணே கொள் மற்றையதொன்றும் மற என்றான் (32) உயிர் வேண்டினும் தருவேன் என்றான். அவ்வாறே உயிர் போய்விட்டது. பெண்கள் இரக்கம் உடையவர்கள் என்னும் பொருளில் பெண்ணே' என்றான். ஆனால் அவள் பெண்மை மாறிவிட்டாள். இரண்டு வரங்களுள்