இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அய்யன் திருவள்ளுவர்
இரண்டாம் இரவு
- நிலவே!
- விண் மண்ணைப் போர்த்துகின்றது !
- மண் என்னைப் போர்த்துகின்றது!
- நான் யாரைப் போர்த்துகின்றேன்?
- நேற்று இந்தக் கேள்வியை வானத்துக்கு விடுத்தேன்!
- வான் வளைந்து படுத்துக் கொண்டு தண்டால் எடுக்கின்றது!
- இன்று, நீ பதில் கூற வேண்டும் - நிலாவே?
- உனது முகம் இன்று வளர்ந்திருக்கின்றது.
- முகம் வளருமா?
- சிலருக்கு முகம் தேயும்போது, உனக்கு ஏன் வளரக் கூடாது?
- அல்லது, திருக்குறளார் எழுதிய பல முகங்களா?
- அது பெரிய இடத்து விஷயம்! அய்யன் திருவள்ளுவனிடத்திலே ஞானம் தெரிந்தவர்கள்தான் முகத்தை வகைபடுத்த முடியும்!
- ஆனால், நான் உன்னிடத்திலேயே கேள்வியைக் கேட்கின்றேன்.
- நேற்று ஏன் குறைந்தாய்?
- இன்று ஏன் வளர்கின்றாய்?
- நேற்று குறைந்தது
- இன்று வளருமானால்,
- நேற்று இறந்தது - இன்று
- வளர்ந்திருக்க வேண்டுமே !
- நேற்று இறந்த மனிதன் - புழுக்களால் குறைந்து போகின்றான்.
- புழுக்கத்தால் உருகிப் போகின்றான்!
110