உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அய்யன் திருவள்ளுவர் கிறித்துவரா?

கிறித்துவர்கள் நடத்திய
திருக்குறள் ஆய்வு மாநாடு
வரவேற்புரை!





பேரன்பு கொண்ட தமிழகப் பேரறிஞர்களே! செந்தமிழ் பால் உயிர் நாட்டங் கொண்ட சான்றோரே! எதிர்ப்பனைத்தும் எரி நெருப்பில் சுட்டு, தமிழ் காக்கும் படையாய், கடமை வீரராய், தமிழகத்தில் உலாவரும் பேரறிவாளர்களே, முனைவர்களே, பெரும் புலவர்களே, பேராசிரியப் பெருமக்களே! வணக்கம்.

கிறிஸ்தவத் தத்துவத்தின் வாயிலாகத் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும்.இன்று வரை கடனாற்றித் தன்னை உயர்த்திக் கொண்டு உயர்ந்தோரே,

கவிதையின் வாயிலாய், இயற்கையை மக்களிடையே எடுத்து வைக்கும் பேராற்றல் படைத்த கவிஞர்களே!

ஆய்வுரையைக் கேட்டுத் தெளிவு பெறவந்த எம் தமிழ்ப் பெருங்குடி மக்களே! சிந்தனையாளர்களே!

உங்களை எல்லாம் திருக்குறள் ஆய்வரங்கத்தின் சார்பாக வருக, வருகவென வரவேற்கிறேன்.

சென்னை எல்டாம்சு சாலையில் இயங்கும் கிறித்துவக் கலைத் தொடர்பு நிலையத்தின் சார்பாக - இரண்டு நாட் களுக்குரிய திருக்குறள் ஆய்வு மாநாடு இங்கே நடை பெறுகின்றது.

மொழி நூலறிஞரும் திருக்குறளுக்கு மரபுரை கண்டவரும், தனித் தமிழ் இயக்கத் தந்தையெனத் தமிழர்களால் போற்றிப்

பாராட்டப்பட்டவருமான தமிழ்க்கடல் மறைமலையடி

147