புலவர் என். வி. கலைமணி
வானொலி, தொலைக் காட்சிகள் வந்த பிறகு, மனித சமுதாயம் மாறியிருக்கின்றது என்றால், அதற்கேற்றபடி திருக்குறள் எப்படி இருக்கின்றது? - விளக்கம் தேவை.
இராக்கெட், சந்திர மண்டலத்தை அடைந்த பிறகு, உலகச் சமுதாயம் மாறியிருக்கின்றது என்பதை ஒப்புவீர்கள் என்று நம்புகிறேன். அதற்கேற்றபடி திருக்குறள் எப்படி மாறியிருக்கின்றது? விளக்கம் தேவை !
நிலவைக் கடவுளாக இதுவரை நினைத்தவர்கள் மனதுக்கு முன்னால் திருக்குறள் எப்படித் தெரிந்தது. தற்போது நிலவிலே மண் கொண்டு வந்த பிறகு, குறள் எப்படித் தெரிகின்றது? விளக்கம் தேவை !
இத்தகைய கோணங்கள் எல்லாம் உங்களது அறிவுக் கதிர்கள் சந்தித்து, புலவர் தெய்வநாயகத்தின் ஆறு நூற்களையும் விசாரணை செய்தாக வேண்டும் என்று தமிழகம் விரும்புவதில் வியப்பில்லை அல்லவா?
மடியிலே நமக்குக் கனமில்லை - வழியிலே திருடர்களைக் கண்டு பயப்பட! திருக்குறள் மத நூல் அல்ல, வாழ்க்கைக்குரிய சட்ட நூல் வள்ளுவம் கூறும் நீதிநூல்!
வேண்டுமானால் இவ்வாறு கூறலாம், அய்யன்திருவள்ளுவர் காலத்திலே ஆதிக்கம் பெற்றிருந்த வைதீக மத கருத்துக்களை ஏற்று, அவற்றை மறுத்து, மதச்சார்பற்ற தமிழர் நெறிகட்கு தனித்துவம் தந்துள்ளார் என்று. நீங்கள் தான் அதற்கு காட்ட வேண்டும் நியாய வரம்பு!
மதநூல் என்றால், அதிலே மாயம் இருக்கும். அற்புதம் கூத்தாடும். அறிவு நம்பாத ஆச்சரியங்கள் இருக்கும்! விஞ்ஞான வளர்ச்சிகள் அதைக் கண்டு விலா நோகச் சிரிக்கும்! திருக்குறள் அத்தகைய ஒரு நூலல்லவே!
வள்ளுவத்தின் தலைவிதியை நிர்ணயிக்க வேண்டுமென்ற நிலையில் வந்துள்ள நீங்கள், உங்கள் தலைவிதியை நிர்ணயிக்கத் திருக்குறள் வந்திருக்கிறது என்பதை உணர்ந்தீர்களா?
இதுவரையில், நீங்கள் தமிழகத்திற்குச் செய்த சேவையில் துளிர்த்த வியர்வையின் சாட்சியாகக் கேட்கின்றேன். அரசியல்
163