பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


தார்கள். வெள்ளையர்கள் தோல் எவ்வளவு வெள்ளையாக இருக்கின்றதோ - அவ்வளவு வெள்ளையாக அவர்கள் மனம் இருப்பதில்லை.

ஒரு வெள்ளைக்காரன் இசை வல்லுனனாக இருப்பானேயானால், அவன் கருதி மீட்டாமல் இசைக் கருவியை இயக்க முடியாது!

ஆனால், அதே வெள்ளைக்காரன் ஒரு கருப்பனைப் பார்த்தவுடன், ஆதாரச் சுருதி கலைந்துபோன ஒரு யாழாகவே மிகக் கடுமையாகக் குரல் கொடுத்து - கருப்பனைத் தாக்க ஆரம்பிக்கிறான்.

பைபிள் வரிகளில் வருகின்ற கருணைக் கடல் மடைத் திவலைகள், அதே வெள்ளைக்காரனைப் புனலாட்டிச் சுத்தப் படுத்தியதாகத் தெரியவில்லை.

இந்தக் கொடுமைகள், மார்ட்டின் லூதர் கிங்கின் இதயத்தில் கருந்தேளாகக் கொட்டின.

அந்த வேதனையால் - குடைச்சலால் அவர் தன்னையே உணர்ந்து, தன்னையே பிறர்க்களித்தார்! தன்னிலே பிறரைக் கண்டு - பிறரிலே தன்னை வைத்தார்!

அன்பாய், அருளாய், அருட் பிழம்பாய் அருள் மனமாய், நிர்மலமாய், நிதானமாய், தானமாய், தவமாய், இயேசு பெருமான், மாறியது ஏன்?

வெள்ளைக்காரன் ஒருவனின் மனதை, எதிர்காலம் பக்குவப்படுத்தாதா என்ற ஆசையால்தானே!

பாரச் சிலுவையில், ஆணி முளையிட, முள் முடி தரித்து, உயிர்வதைப் பட்டு, உயரிய கருத்தைச் சொல்லி ஊழிக்கே தலைவனாய் இருந்து இயேசு பெருமான் மறைந்து போனார்.

அத்தகைய கடுமையிலா ஒரு மனிதரைப் பின் தொடர்ந்து அவரின் சீரிய கருத்துக்களை - சிந்திய முத்துக்களை-வழங்கிய பவழத்தை - அளித்த நன்கொடையை - உலகுக்கு விளக்கிடும் பணியில் மார்டின் லூதர் கிங்கும் திகழ்ந்தார்.

அப்படிப்பட்ட அவரது நெஞ்சில், பலி பீடத்தின் முன்னால் கழுத்தறுக்கப்படும் ஆடு, கோழிகளைப் போல, நீக்ரோ மக்கள்

81