பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33


--பட்டு விரிப்புகள் கிடையாது--சாமான்யமான நிலை, லூகான் நகர தேவாலயம். இதிலே உலவியபோது ரிஷ்லுவின் உள்ளம், அடைபட்டுக்கிடந்த சிங்கம்போன்றிருந்தது. கூண்டுக்குள் உலாவிடும்போதும், சிங்கத்தின் நடையிலே ஒரு கெம்பீரம் இருப்பதுபோல, இந்தச் சாமான்யமான தேவாலய அதிபர் எனும் சிறையிலும், ரிஷ்லு, தன் திறம் பிறர்க்கு விளங்கும் வகையிலே நடந்துகொண்டான்.

"என் வீடு சிறைபோன்றது! பூந்தோட்டம் இல்லை--உலவும் இடம் கிடையாது--எங்கும் புகைமயம்--வெள்ளித் தட்டுகள் இருந்தாலாவது பரவாயில்லை, கிடையாது"...என்று ரிஷ்லு, குறைபட்டு, நண்பருக்குக் கடிதம் எழுதினான்.

அதே ரிஷ்லு, கார்டினல் ரிஷ்லுவாகி, பிரான்சை ஆட்டிப் படைக்கும் அதிகாரம் பெற்றபிறகு, புதிதாகக் கட்டிய 'கார்டினல் மாளிகை’க்கு, நிலத்தைப் பண்படுத்தவும், மாடிகள் அமைக்கவும் மட்டும் 336,000 லிவர்ஸ் செலவிட்டான்! கட்டிடச் செலவு 410,000! அலங்கார அமைப்புகள், நீர் ஊற்றுகள், பூச்செடிக்கான தொட்டிகள் இவற்றுக்காக மட்டும் 60,000!

உலவ இடமில்லை என்று வாட்டம்--பிறகு, உலவ நேரமில்லை என்ற வருத்தம். மன்னன் கண்டு அதிசயிக்கத்தக்கதும், பிரபுக்கள் கண்டு பொறாமைப்படத்தக்கதுமான மாளிகை இரண்டு அமைத்திட முடிந்தது, புகை கப்பிக்கொண்டு, ஓதம் நிறைந்து, சோகமூட்டும் நிலையிலிருந்த தேவாலய அதிபராக வாழ்க்கையைத் துவக்கிய இந்தக் காரியவாதியால்!

ரோம் நகரில் மார்க்கத் துறையினரின் மந்திராலோசனைகளைக் கேட்டுப் பழகிய ரிஷ்லு, பாரிஸ் பட்டினத்துப் படாடோபத்தைக் கண்டு பழகிய ரிஷ்லு, சேறும் சகதியும், நிரம்பிய லூகான் நகரின் தோற்றத்தையும் அங்கு உலவிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/33&oldid=1549015" இலிருந்து மீள்விக்கப்பட்டது