பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34


மக்களின் எளிய வாழ்க்கையையும் கண்டு, எப்படி மன அமைதி கெடாமலிருக்கமுடியும்! பாரிசின் பகட்டு எங்கே, இந்தப் பட்டிக்காட்டிலே கிடைக்கும் சோர்வுஎங்கே! வெறுப்பும் சலிப்பும், எவருக்கும் தோன்றும். ரிஷ்லு, அதற்கு இடம் தரவில்லை. அழைப்புக்கிடைக்குமட்டும் இந்த எளிய.நிலை! இந்த எளிய நிலையிலும், உயரிய முறையைக் காட்டியாக வேண்டும் என்று எண்ணினான். அழைப்பு வந்தது! அரசாண்டு வந்த அம்மையிடமிருந்து அல்ல! அம்மையை 'ரசித்து' வந்த இத்தாலியனிடமிருந்துமல்ல! அரசியல் நிலைமை, அழைப்புவிடுத்தது! பிரான்சு, தன் பேரவையை, முப்பெருமன்றத்தைக் கூட்டிட முனைந்தது. பெரியதோர் மேகம் அரசியல் வானில் ! ரிஷ்லு, தன் சமயம் பிறந்தது என மகிழ்ந்தான்.

பிரபுக்கள்--அருளாளர்கள்--மக்கள். சமுதாயம், இப்படி முப்பெரும் பிரிவு கொண்டதாகக் கருதப்பட்டது. பிரான்சு அரசியல் அமைப்பில், பிரபுக்களின் பிரதிநிதிகள், மார்க்க அதிபர்களின் பிரதிநிதிகள், மக்களின் பிரதிநிதிகள், எனும் முப்பெரும் பிரிவும் ஒரு சேரக் கொண்ட பேரவை, பிரான்சு நாட்டு அரசியல் நெருக்கடிகளின் போது, கூட்டப்படும். கரத்திலே வலியும், கருத்திலே முறுக்கும் இருக்குமட்டும், பேரவை பற்றிச் சட்டை செய்வதில்லை, மன்னன்--மமதை ஒன்றே போதும்; அதை ஊட்டச் சில செருக்குமிக்க பிரபுக்கள் போதும், எதிர்ப்பை ஒழிக்க சிறுபடை போதும் என்று இருப்பான்--குழப்பம் நாட்டிலும் மனதிலும் மூண்டுவிட்ட சமயத்தில், என்ன செய்வது என்று திகில் பிறக்கும்போது தான் மக்களின் குரல் செவியில் சிறிதளவுவிழும்; மக்களோ "பேரவை கூடட்டும்" என்றுதான் முழக்கமிடுவர்.

எல்லா உரிமைகளையும் வழங்கவும் பாதுகாக்கவும் நாட்டின் பொதுநிலையைப் பாதுகாக்கவும், ஆற்றல் கொண்டது பேரவை, என்ற எண்ணம் பிரான்சு மக்களுக்கு, அவர்கள் எண்ணியபடியே, இந்தப் பேரவைகூடி, எடுத்த முடிவுகளின்படிதான், 'பதினாலாம் லூயி மன்னன் காலத்திலே மாபெரும் புரட்சி வெற்றிகரமாக்கப்பட்டது. அது, மன்னனின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/34&oldid=1549016" இலிருந்து மீள்விக்கப்பட்டது