பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

தலையைக் கொய்த பேரவை! இது அலங்காரப் பேரவை!! இந்தப் பேரவையும் கூட்டவேண்டி நேரிட்டதற்குக் காரணம் அரசாண்டுவந்த மேரி அம்மைக்கும், அரசகுடும்பத்துடன் நெருங்கிய உறவுகொண்ட பிரபுக்கள் சிலருக்கும் மூண்ட பகை, பெரு நெருப்பாகிப் பிரான்சைப் பொசுக்கிவிடுமோ என்ற கிலி பிறந்தது தான்!

பிரான்சு நாட்டுப் பிரபுக்கள்--உலகத்துக்கே ஜனநாயகத்தை வழங்கிய வள்ளல்கள்!

இந்தப் பிரபுக்களின் அட்டகாசமும் வறட்டு ஜம்பமும் குரூரமும் மடைமையும் கொலைத் தொழிலும் சதிச் செயலும், ஏழையரை இம்சித்ததும் எளியோரை அழித்ததும், பருகிய மதுவும், பதம்பார்த்த கன்னியரின் கற்பும், இவர்களின் கோலாகலம், கிளப்பிய வெறுப்புணர்ச்சியுந்தான் பிரான்சிலே மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதும், உலகிலேயே என்றும் கூறலாம், மக்களை நிமிர்ந்து நின்று ஏன் என்று கேட்டு, உள்ள உயிர் ஒன்றுதான் அது பிரிவதும் ஒரு முறை தான், சாகுமுன் உன்னைச் சாய்த்திடப் போரிட்டே தீருவேன் என்று வீர முழக்கமிட்டுப் புரட்சி நடத்தி, மக்களாட்சியை ஏற்படுத்த உதவிற்று! இந்தப் பிரபுக்கள், தர்மம், தயை, தாட்சணியம், அறிவு, ஆற்றல், அன்பு, நன்றி, எனும் பண்புகளுடன் நல்வழி நடந்திருந்தால், மக்களாட்சி மலருவது மூன்று நான்கு நூற்றாண்டுகளாவது தாமதப்பட்டிருக்கும். காட்டிலிருக்கும் புலி, ஊருக்குள் நுழைந்து ஆடுமாடுகளைக் கொன்று, மேலும் கொல்ல ஊர்க் கோடிக் கொல்லையிலே பதுங்கிக் கொள்ளும் போதுதானே ஊரார் திரண்டு சென்று, உயிருக்குத் துணிந்து நின்று, புலியைக் கொன்று போடுவர். பிரான்சின் பிரபுக்கள், புலிகளாயினர்--குகைக்குள்ளேயும் இல்லை-எதிர்ப்பட்ட ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சினர்--எனவேதான், மக்களாட்சி” மலரமுடிந்தது. ஆட்சி என்பது அனைவருக்கும் பொதுவான உரிமைதானே, நாடு என்பது அனைவருக்கும் பொதுதானே, நாட்டுவளம் பெருகுவதும், எதிரிகளிடமிருந்து நாடு காப்பாற்றப்படுவதும் எல்லா மக்களின் ஒன்றுபட்ட திறமையாலும் உழைப்பாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/35&oldid=1549017" இலிருந்து மீள்விக்கப்பட்டது