பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62


இந்த வெற்றிகளை வரலாற்று ஆசிரியர்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். இந்த வெற்றிகளுக்கு ரிஷ்லு கையாண்ட முறைகளோ, மிகக் கொடுமையானவை.

ரிஷ்லுவின் ஒற்றர்கள்' நாடெங்கும் பூனைபோலுலவி, 'சேதிகளைக்' கொண்டு வந்து தருவர், தனக்குப் பிடிக்காதவர்கள், ஆற்றலை வெளிப்படுத்துபவர், அரண்மனையில் புகும் உரிமை கொண்டவர்கள் ஆகியோரை, சதி வழக்குகளில் சிக்கவைக்க, இந்தச் சேதிகள் மெத்தப் பயன்பட்டன. மாளிகைகளிலே மருட்சி! ஒவ்வொரு பிரபுவும் தனக்கு எப்போது ஆபத்து வருமோ என்ற திகிலுடனேயே உலவிட நேரிட்டது. சதி வழக்குகள் தொடுத்தால், தக்க ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் கடும் தண்டனை தரப்படும். காரணம் கேட்டவருக்கு ரிஷ்லு சொன்னான் "சதி வழக்குகளுக்கு ஆதாரங்கள் அப்பழுக்கின்றி கிடைக்குமா! யூகித்தறிந்த விஷயமே போதும் தண்டனை தர" என்று. இப்படிப்பட்ட விபரீத நியாயம் முறையாகி விட்டது.

மன்னனிடம், "என் கடன் தங்கள் ஆட்சியைப் பலப் படுத்துவதுதான், தங்களை எதிர்க்கத் துணிவு காட்டும் பிரபுக்களை அழித்து, அரச பலத்தை அதிகரிக்கச் செய்வதுதான்; தங்கள் ஆட்சியின்போது பிரான்சு நாடு பிற நாடுகளால் பெரிதும் மதிக்கப்பட்டது என்று நிலை இருக்க வேண்டும்; அதற்கான முறையிலே பணிபுரிகிறேன்" என்று சொல்லி, காட்டிய இடத்தில் கையொப்பமிடும் கருவியாக மன்னனை ஆக்கிக் கொண்டான்.

பல பிரபுக்கள், ரிஷ்லுவின் பகைக்கு ஆளாகி, ஈவு இரக்கமின்றி அழிக்கப்பட்டனர்--மக்களுக்குக் கேடு செய்தான் என்பற்காக அல்ல, மன்னனுக்கு நிகராகத் தம்மை எண்ணிக் கொண்டனர் என்பதற்காகவே! பிரபுக்கள் அழிக்கப் பட்டனர்.

அரசனுக்காக! பிரான்சுக்காக! என்றுதான் ரிஷ்லு, தன். நடவடிக்கைகளுக்கெல்லாம், விளக்கம் தந்தானே தவிர,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/62&oldid=1549044" இலிருந்து மீள்விக்கப்பட்டது