பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74


வேண்டுமென்பதிலே அளவற்ற ஆர்வம் கொண்டதிலே ஆச்சரியம் என்ன!

பக்கிங்காம், காதலில் பெற்றிருந்த திறமையின் அளவுக்குப் போரிலே பெற்றிருந்து, லாரோகேல் கோட்டைப்போரில் பிரான்ச்சு மன்னனை முறியடித்திருந்தால்? ஏதேதோ நடை பெற்றிருக்கும். அலங்காரக் கப்பலொன்றிலே, அணங்குகள் ஆடிப் பாட, மகிழ்வோடு அவர் நடுவே ஆன் வீற்றிருக்க, பக்கிங்காம் காதல் பொழியும் கண்களுடன் அவளைக் கண்ட வண்ணம், இங்கிலாந்துக்குப் பயணமே செய்திருக்கக்கூடும். அந்நாள், அரச குடும்பங்களிலும், பிரபு குடும்பங்களிலும், இத்தகைய சுவைக்கு, அளவும், வகையுமா இருந்தது? கணக்கில்லை!!

பிராடஸ்டென்டுகளை எதிர்த்து நடத்தப்படும் போர் இது: புனிதப்போர்!--என்று பேசி, கத்தோலிக்கர் மனதில் கனலை மூட்டிவிட முடிந்தது ரிஷ்லுவால்! கத்தோலிக்கருக்கு நீ செய்த நன்மை என்ன? காட்டிய சலுகை யாது? என்று யாரும் கேட்கவில்லை. அவர்கள் பிராடஸ்டெண்டுகளை அழித்திடப் போரிடுவது ஐயன் அருளுக்குப் பாத்திரமாகும் வழி என்று கருதினர்; சீறிட்டுப் போரிடக்கிளம்பினர்; மடாலயங்கள் போர்ச் செலவுக்குப் பொருளை அள்ளிக் கொடுத்தன; இந்தப் புனிதப் போரிலே ஈடுபடுவோரின் பாவங்கள் துடைக்கப்பட்டுவிடும் என்று போப்பாண்டவரின் ஸ்ரீமுகம் பிறந்தது; ரிஷ்லு, களிப்புடன் களம் புகுந்து காரியத்தைக் கவனிக்கலானார், போர்வீரன் உடையில்!

கத்தோலிக்க மார்க்கப் போதகர், பிராடெஸ்டெண்டு தத்துவத்தைக் கண்டதுண்டமாக்கியவர், ரிஷ்லு, இவர் தொடுக்கும் இந்தப் புனிதப்போர், முதல் கட்டம். இதிலே கிடைக்கும் வெற்றி, வேறு பல வெற்றிகளுக்கு வழி செய்யும், ஐரோப்பாவில், பிராடெஸ்டெண்டு பூண்டே இல்லாது ஒழித்துக் கட்டப் போகிறார் என்று கத்தோலிக்கர் எண்ணிக் கொண்டனர்; ரிஷ்லு இதைக்கண்டு மகிழ்ச்சி கொண்டார்; மந்தமதியினர் அவருடைய உண்மையான நோக்கத்தைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/74&oldid=1549057" இலிருந்து மீள்விக்கப்பட்டது