84
மன்னர், பண நெருக்கடியின்போது உபயோகித்துக்கொள்ள வேண்டும் என்ற குறிப்புடன். மன்னனுக்குப் பணம் தந்து விட்டுச் சாகும் நிலை இருந்தது ரிஷ்லுவுக்கு.
கார்டினல் அரண்மனை எனும் உயர்தர மாளிகை;வைரக்கற்கள் பதித்த தங்க ஆபரணம், வெள்ளிப் பேழைகள் ஆகியவைகளை மன்னனுக்குத் 'தானம்' தர முடிந்தது ரிஷ்லுவால்.
நெருங்கிய உறவினர்களுக்கு ஏராளமான நிலபுலமும், தோட்டமும் மாளிகையும்.
ஜெமீன்களும் இனாம்களும், பகிர்ந்தளித்தான்.
இலட்சக்கணக்கிலே பணம்குவிந்திருந்தது-அவைகளைத் தன் நெருங்கிய உறவினர்களுக்குப் பகிர்ந்தளித்தான்.
ரிஷ்லுவின் உயிலிலே குறிப்பிட்டிருக்கும் புள்ளி விவரத்தைக் கவனிக்கும்போது, பிரான்சிலே இருந்து வந்த எந்தப் பரம்பரைச் சீமானுக்கும் இல்லாத அளவு சொத்து சேர்ந்தது என்பது விளக்கமாகிறது.
மன்னன், ரிஷ்லுவுக்கு, கொழுத்த வருமானமுள்ள தேவாலயங்களையும் ஜெமீன்களையும் வழங்கி இருந்தான்.
கார்டினல் பதவி மூலம் கிடைத்த வருமானம் சாமான்யமானதல்ல.
நார்மண்டி பகுதியிலே ரிஷ்லுவுக்கு இருந்த பண்ணை மட்டும் ஆண்டுக்கு அரை இலட்சம் பவுன் வருமானம் அளித்தது. இதுபோல் வளமான பண்ணைகள், பிரான்சிலே பல்வேறு இடங்களில் ஐந்து இருந்தன.
மேலும், அன்றைய ஆட்சி முறையின்படி, அரசாங்கக் காரியத்துக்காக வசூலிக்கப்படும் எல்லா தொகையிலும், ரிஷ்லு, ஒரு பகுதி சொந்தமாக்கிக் கொள்ளும் உரிமை இருந்தது. நமக்கு வேண்டாம் இது, என்று ரிஷ்லு கண்ணியம் பேசவில்லை!