பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88


யும் கிடைத்திடச் செய்வதற்காகப் பணியாற்றிடும் பெருநோக்குடையார் பலர் உண்டு-பலர் பணியாற்றிப் பலன் காணாது பதறினர்.

சிலர், மதத்துறையிலே பெருமளவுக்குச் செல்வாக்குத் தேடிக் கொண்டு, அந்தச் செல்வாக்கைக் காட்டி அரசுகளைப் பணிய வைக்கவும், ஆட்டிப் படைக்கவும், முயன்றனர்--வெற்றியும் கண்டனர்.

சில அரசியல் தலைவர்கள், அந்தத் துறையிலே தமக்குக் கிடைத்த செல்வாக்கைக் கொண்டு மதத்துறையிலேயும் தமது ஆதிக்கம் நுழையும்படி செய்து வெற்றி பெற்றனர்.

கார்டினல் ரிஷ்லு, இதுபோன்ற வகையினரில் ஒருவராக வில்லை--அவன் கண்ட வழியே தனி!!

ஆதிக்கம் பெறுவதற்கு, மதத்துறையைச் சிலர்போல் ஏணியாக்கிக் கொள்ளவில்லை -அரசியல் ஆதிக்கம் பெறுமுன், மதத்துறையைச் சிறிது காலம் தங்குமிடமாகக் கொண்டான். மதத்துறையில் மிகுந்த செல்வாக்குப் பெற்றதால் அரசியல் துறையில் ஆதிக்கம் பெறலாம் என்பது பொதுவிதியானால், போப்பாண்டவரல்லவா பிரான்சு நாட்டை ஆட்டிப் படைத்திருக்க வேண்டும். கார்டினல் ரிஷ்லுவின் கைப்பிடியிலல்லவா, பிரான்சு சிக்கிற்று! போப்பிடமல்லவே!!

அம்மட்டோ! அந்தப் போப்பாண்டவரைக் கூட, ஒரு சம்பவத்தின்போது, இந்த ரிஷ்லு, 'உமது வேலையைப் பாரும்! என் துறையிலே தலையிட வேண்டாம்' என்று கூறிட முடிந்தது!!

அரசுக்காக! பிரான்சுக்காக! என்ற சொற்றொடர்--ரிஷ்லு காலத்தில். இன்று ரிஷ்லுக்களாகலாமா என்று மனப்பால் குடிக்கும் சிலரும் அடிக்கடி அரசுக்காக? நாட்டுக்காக! என்று பேசி, மக்களை மயக்கவும், உலகை ஏய்க்கவும், எதிர்ப்பை ஒடுக்கவும் முடியும் என்று நம்புகிறார்கள்.

நாட்டுக்காக என்று கூறிக்கொண்டே, எந்த அக்ரமம் செய்தாலும் மக்கள் சகித்துக் கொள்வார்கள், என்று எண்ணு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/88&oldid=1549071" இலிருந்து மீள்விக்கப்பட்டது