பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89


வது ஏமாளித்தனம். ரிஷ்லுவால் முடிந்ததே! என்று கூறலாம்--மக்கள் பழிதீர்த்துக்கொண்டனர், காலம் பிடித்தது அதற்கு, எனினும் பழிதீர்த்துக் கொண்டனர்--ரிஷ்லுமீதல்ல, அவன் போற்றிவுந்து அரசின் மீது!!

அரசு பலமடைய வேண்டும் என்று பேசப்படும்போது ஆமாம் என்ற பதில் எளிதாகக் கிடைத்துவிடும்...ஆனால், எப்படி பலமடைவது என்ற கேள்வியும், எதற்காகப் பலமடைய வேண்டும் என்ற கேள்வியும், மக்கள் கேட்க ஆரம்பித்தால், ஆதிக்கவாதிகள் பதில் இறுக்க இயலாது.

அரசு, மக்களுக்கு நலம்தர ஒரு ஏற்பாடு என்ற இலட்சியத்தை மறந்து, நாட்டு மக்களின் உடைமை என்ற உண்மையை ஏற்காது, நாடு என்றால், அதிலே காணப்படும் விரல் விட்டு எண்ணத்தக்க பட்டுடை அணிந்த வீணர்கள் மட்டுமே என்று கருதி, அரசு என்றால், அவர்களின் வசதி கெடாதபடி மற்றவர்களைக் கண்காணித்து வருவதுதான் என்று தீர்மானித்து, ஆதிக்கம் புரிந்தவர்களால், அரசும் மேன்மையுறாது, நாடும் வளம் பெறாது.

ரிஷ்லுவுக்குத் தெரிந்த பிரான்சு, அங்கே செக்குமாடென உழைத்துக்கிடந்த பெரும்பான்மை மக்களல்ல.

மமதையால் மன்னனை எதிர்க்கக் கிளம்பும் சில பிரபுக்களும், வேற்று மார்க்கத்தவர் என்பதால் பிணங்கிக் கிடந்த சில பலரும், கீர்த்தி எனும் வெற்றுரைக்காக போர் மூட்டிவிடும் வெறியர் சிலரும்தான், ரிஷலுவுக்குத் தெரிந்தனர்.

அரண்மணை, மாளிகை, ஆலயம், இவற்றோடு நாடு முடிந்துவிடவில்லை, வயல் இருக்கிறது, வாய்க்கால் இருக்கிறது, பாதை இருக்கிறது, பள்ளம் இருக்கிறது, தொழில் இருக்கிறது, துயரம் இருக்கிறது, இங்கு, இலட்ச இலட்சமாக ஏழைகள் உள்ளனர், உழைத்த வண்ணம். உழைக்கிறார்கள் வாழ முடியவில்லை, சாவை வரவேற்கிறார்கள், நிம்மதி பெற, அதனினும் சிறந்து மார்க்கம் வேறு இல்லாததால் ! இந்தப் பிரான்சுக்கு அல்ல, ரிஷ்லு, முதலமைச்சரானது! அவனு-

அ-6
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/89&oldid=1549072" இலிருந்து மீள்விக்கப்பட்டது