பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90


டைய பிரான்சு, மன்னன், அவனைச் சுற்றி வட்டமிடும் வல்லூறுகள், அவனுக்கு விளையாட்டுக்காகப் பறந்திடும் பொன்வண்டுகள், இவைகள் உள்ள, அரண்மனை, மாளிகை, பூம்பொழில், இந்த ஏற்பாட்டைப் பாதுகாக்க அமைந்துள்ள பாசறை, நீதிமன்றம், சிறைக்கூடம் இவை!

பிரான்சு, பெருமூச்சுவிட்டது, ரிஷ்லுவின் செவியிலே விழவில்லை--கேட்க மறுத்துவிட்டான்.

பிரான்சிலே, ஐந்தில் ஒரு பகுதி நிலம்--வயல்--மன்னனுக்குச் சொந்த உடைமை.

மற்றோர் பங்கு மத அலுவலருக்கு, பிறிதோர் பங்கு பிரபுக்களுக்கு, மிச்சம் இருந்ததை பொது மக்களுக்கு என்று விட்டு வைத்தனர். பொதுவளம், பொதுநலம்,பொது அறம், எதுதான் தழைக்க முடியும்!

இந்த ஏற்பாடு சரியா, தவறா என்று ஆராய்வது கூடத் தேவையில்லை, என்று இருந்துகொண்டுதான் ரிஷ்லு, அரசுக்காக! நாட்டுக்காக ! என்று பல்லவி பாடி ஆதிக்கம் செலுத்தினான்.

பிரபுக்களின் கொட்டத்தை அடக்கும்போதுகூட, அவர்கள், மக்களை மாடுகளாக்கி, வாழ்கிறார்கள் என்பதற்காக அல்ல ! ரிஷ்லுவே பெரிய பெரிய பண்ணைகளுக்கு உரிமையாளராகிவிட்டானே! ஏழை உழவனின் வியர்வையும் கண்ணீரும் கலப்பது பற்றிக் கவலை ஏன் பிறக்கும்!

உழவன், பிரபுவிடம் அடிமைப்பட்டுக் கிடந்தான். கூப்பிட்டபோது ஓடி வேலை செய்யவேண்டும். கேட்ட வரியைத் தந்தாக வேண்டும். வரி, மட்டுமா? எதையும்!

பிரபுவின் இயந்திரத்தில்தான் அவன் மாவு அரைத்துக் கொள்ளவேண்டும்.

அவருடைய பறவைகள் உழவன் வயலிலே புகுந்து கதிர்களைக் கொத்தும், அவன் அவைகளை விரட்டக் கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/90&oldid=1549073" இலிருந்து மீள்விக்கப்பட்டது