பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92


புரட்சியின் போது தொகுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின் படி, மத அமைப்புகளின் மொத்த ஆண்டு வருமானம் 170,000,000 என்று கணக்கிட்டனர்?

வரி தரமாட்டார்கள் மத அலுவலர்கள்! "எமது வாயைத் திறப்போமே தவிர கையைத் திறக்க மாட்டோம்" என்று ஒரு மத அலுவலர் கூறினார், ஒரு சமயத்தில். இன்னொருவர், "மக்கள் பொருள் தருகிறார்கள், பிரபுக்கள் வீரத்தைத் தருவர், நாங்கள் ஜெபம் தருகிறோம்" என்று கூறினாராம்.

பண நெருக்கடியின் போது ஒரு முறை, ரிஷ்லு முயன்று பார்த்தார், மதஅலுவலர்களிடமிருந்து வரிவசூலிக்க. பிடிவாதமாக மறுத்துவிட்டனர் எதிர்ப்பு வலுத்தது. இந்த ஆபத்தான வேலை வேண்டாமென்றோ, இனம் இனத்தைக் காக்கும் போக்கிலேயோ ரிஷ்லு, மேலால் வலியுறுத்த வில்லை. அவர்களாகத் தந்த 'தொகை’யை நன்றிகூறிப் பெற்றுக் கொள்வதுடன், அந்த அத்யாயத்தை முடித்துக் கொண்டான்.

ஐந்தாண்டுக்கு ஒரு முறை மத அலுவலர்கள், தாமாக, மனமுவந்து ஏதேனும் 'தொகை' தருவர், அரசர் அந்தத் தேவப் பிரசாதத்தை மதிப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பிரபுக்களுக்குத் தனித்தனி தர்பார் இருந்தது--எனவே அவர்களும் அரசுக்கு வரி செலுத்த மாட்டார்கள்.

ஆக, அரசுக்கு வரி செலுத்தும் பெரும்பாரம், ஏழையின் முதுகிலே விழுந்தது.

அரசுக்காக! நாட்டுக்காக! என்று பாடிய ரிஷ்லுவுக்கு இந்த நிலைமைகளைத் திருத்த வேண்டும் என்றும் தோன்றவில்லை. அறிவும் ஆற்றலும், அரசனுக்குப் பொழுதுபோக்குத் தேடித்தர உதவிற்று, ஏழை அழுத கண்ணீரைத் துடைக்க அல்ல.

நீதிமன்றங்கள், பிரான்சில் பலரகம் !

அரச நீதி மன்றங்கள், பிரபுக்களின் நீதி மன்றங்கள், மத நீதி மன்றங்கள் என மூன்று வகை--இதற்குள் உட்பிரிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/92&oldid=1549075" இலிருந்து மீள்விக்கப்பட்டது