பக்கம்:அரசியர் மூவர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கேகயன் மடந்தை ☐ 29


வது புகழ். முறை தவறி நடப்பவர்க்குப் புகழ் கிட்டாது. மூத்தவன் இருக்க இளையவன் பட்டம் பெறுதல் முறை கேடானது. எனவே, அவள்,

'பிறந்தி றந்துபோய்ப் பெறுவதும் இழப்பதும் புகழேல்,
நிறம்தி றம்பினும் நியாயமே திறம்பினும் நெறியின்
திறம்தி றம்பினும் செய்தவம் திறம்பினும் செயிர்தீர் மறம்திறம்பினும் வரன்முன்றை திறம்புதல் வழக்கோ?”

(1472)

(நிறம்-குணம் : மறம்-வீரம்)

எனக் கூறினள்.

அடிப்படை ஆடிவிட்டது

அரசரிற் பிறந்து வளர்ந்து அரசியான கைகேயி இதுவரை மூத்தவனுக்கே அரச உரிமை உண்டு என்பதை நம்பி வந்தாள். ஆனால், இவ்வெண்ணத்தை அடிப்படையில் தகர்த்துவிடுகின்றாள் கூனி, “அரச உரிமை மூத்தவனுக்கே உரியதென்றால், தசரதனைக் காட்டிலும் இராமன் இளையவன்தானே? அப்படி இருக்கத் தசரதன் உயிருடன் இருக்கும்பொழுது இராமனுக்கு ஏன் முடி சூட்ட வேண்டும்? அங்ஙணம் முடி சூட்ட அரசன்'முடிவு செய்ததே 'மூத்தவற்கே அரசு' என்ற சட்டத்தைப் புறக்கணித்துத்தானே? ஆகலின், ஏன் பரதனுக்கு அப்பட்டம் வரக்கூடாது?” என்பதே அவள் வாதம் தசரதனை நோக்க இராமனும் பரதனும் இளையவர்கள்தாம். இரண்டு இளையவர்களுள் இராமனுக்கு உரிய ஒன்று ஏன் பரதனுக்கு உரிமையாகக் கூடாது?

“மூத்த வற்குஉரித்து அரசெனின் முறைமையின் உலகம்
காத்த மன்னனில் இளையவன்அன் றோகடல்

வண்ணன்?” (1474)

இவ்வாதம் ஒரளவு கைகேயியை மருட்டிவிட்டது உண்மைதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/31&oldid=1495645" இலிருந்து மீள்விக்கப்பட்டது