452
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
இதைப் படித்தவுடனே நான் திடுக்கிட்டேன். ஏனென்றால் 368 கோடி ரூபாய் மத்திய அரசிலிருந்து நமக்கு மானியமாக வருகிறது என்று நான் நிதியமைச்சராக இருந்தபொழுது தெரியவில்லை. என்னுடைய நண்பர் திரு. மனோகரன் நிதியமைச்சராக இருக்கும்பொழுது அதை அவரும் ஒப்புக் கொள்ளமாட்டார் என்பது எனக்குத் தெரியும். அந்த 368 கோடி ரூபாய் மானியமாக வரவில்லை. நம்முடைய மாநிலத்தின் மொத்த வருமானம் நிதியமைச்சர் இங்கே வைத்த நிதி நிலை அறிக்கையின்படி 633.24 கோடி ரூபாய். வணிக வரியின் மூலம் கிடைப்பதுதான் 368 கோடி ரூபாய். நான் டாக்ஸ் ரெவின்யூ என்பது 83 கோடி ரூபாய். நம்முடைய மாநிலத்திற்கு மத்திய அரசால் வருமான வரி, மற்றும் தீர்வை வரி ஆகியவற்றிலிருந்து வரவேண்டியது, கொடுத்தே தீரவேண்டும் என்பது 136.98 கோடி ரூபாய். மத்திய அரசு மானியமாக கொடுப்பது 44.73 கோடி ரூபாய்தான். மத்திய அரசு மானியமாக கொடுப்பது 44.73 கோடி ரூபாய்தான். ஆனால் நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய பேச்சு என்ன ஆகிவிடும்? 367 கோடி ரூபாய் மத்திய சர்க்கார் நமக்கு மானியம் தருகிறது என்றால் நாம் அவர்களிடத்திலே பணம் கேட்கவே அருகதையற்றவர்களாகி விடுவோம். அதன் காரணமாக பணம் கிடைக்காமல் போய்விடும்.
ய
ய
முதலமைச்சர் அவர்கள் அடிக்கடி சொல்கிறார்கள், தவறுகளை சுட்டிக்காட்டுங்கள், திருத்திக் கொள்கிறோம் என்று. அந்த வகையிலேதான் நான் ஆக்கப்பூர்வமான ஆலோசனை சொல்லி ஒரு அறிக்கையை விட்டேன். முதலமைச்சர் அவர்கள் அதை மறுக்கவில்லை. நம்முடைய நிதியமைச்சராவது மறுப்பார் என்று எண்ணினேன். என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, அவர் ஊரில் இல்லையோ என்னவோ எனக்குத் தெரியாது, அவரும் மறுக்கவில்லை. 368 கோடி ரூபாய் மானியமாக நமக்குத் தருவதில்லை. திருத்திக்கொள்ளுங்கள் என்று சொல்லப்பட்டது. இது வரையிலும் திருத்திக் கொள்ளவில்லை. அன்று நான் சொன்னது தவறாகிவிட்டது என்று திருத்திக் கொண்டால் என்ன ஆகிவிடும்.
இந்து போன்ற பத்திரிக்கையில், அண்ணா போன்ற பத்திரிக்கையில் வெளிவந்திருக்கின்ற செய்தி அது.
30-க.ஆ.உ.(அதீ.ச.)